இந்த பதிவு சும்மா ஒரு தமாசுக்குதான், இதில் கருப்பு எழுத்தில் இருப்பதெல்லாம் முன்னர் நானே போட்ட பதிவு, அதற்க்கு சற்று எதிர்மறையாக யோசிச்சதுதான் இந்த சிகப்பு கலர் எழுத்துக்கள்...................மற்ற படி யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல
1. அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக்கிடைக்கிறது.
a. அரிசிய 44 ரூபாய் குடுத்து வாங்கினால் வெறும் 44 ரூபாய் மட்டும்தான், ஆனா பிரியா சிம் கார்ட் மட்டும்தான், டாக் டைம் நீதான் காசுகுடுத்து பண்ணனும், முட்டாள் மாதிரி பேசுறே!!!!!!!!!!!!
2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
a. பொது விநியோகதில் 1 ரூபாய் குடுத்து அரிசிவாங்கினால ஒரு ஆறுமுறை கழுவினால் சுத்தமாகிடும், ஆனா பொதுக்கழிப்பறை அப்படியா (கொய்யாலே நாத்தாம் குடலை புடுங்குது சொல்லரோமே, அதை எல்லாம் சுத்தம் செய்யதான்)
3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.
a. வாகனத்தை விட இப்ப படிப்பிற்க்கு ஆகும் செலவுதான் அதிகம்டா வெண்ணை!!
4. பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட ஆம்புலன்சும்,
தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!.
a. பிஸ்ஸாவை அவன் பைக்லே எடுத்துக்கிட்டு சந்து போந்து எல்லாம் பூந்து வருவான், ஏண்டா மூதேவி ஆம்புஓன்சையும், தீயணைப்பு வண்டியையும் சந்துல கொண்டு வந்தால் எல்லோருக்கும் சங்கூத வேண்டியதுதான்.
5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்குவாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
6. நாம் அணியும் உள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும்குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.
b. சரி காய்கறியை குளிரூட்டப்பட்ட கடையில் வைக்கிறோம்ன்னு வை, ஒரு கிலோ தக்காளி 1000 ரூபாய் விற்க்கும், வாங்கி தின்பியா. இப்பவெல்லாம் வெளிநாடுகளில் மட்டும் என்று இல்லை சென்னையிலேயே காய்கறிகளில் சூபர் மார்க்கெட்டில் குளிரூட்டப்பட்ட இடத்தில்தான் இருக்கு, பயபுல்லை உழவர் சந்தையை பார்துட்டு பேசுரான்னு நினைக்கிறேன்.
7. நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.
c. உன்னை யாருயா அதை வாங்கி குடிக்க சொன்னது, நீ கடையிலே லெமென் வாங்கி நீயே ஜூஸ் பிழிந்து குடிக்க வேண்டியதுதானே, உன் சோம்பேறிதானதுக்கு அவிங்களா காரணம்.
8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு,சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்றுகல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
d. இந்த ரெண்டுலேயும் வித்தியாசம் கிடையாது, இந்த இரந்துல எதை அரசு நடத்தினாலும் அதில் முக்கிய பங்கு வகிப்பது பணம்தான்...........படிப்பெல்லாம் இப்ப ஒரு மாட்டாரே இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக