OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 28 மார்ச், 2012

துபையை தொடர்ந்து அபு தாபியிலும் மெட்ரோ!!!!!!!!!!!!!


அமீரகத்தில் துபையில் கடந்த 2009  ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் மெட்ரோ, இப்பொழுது அமீரகத்தின் தலைநகரான அபு தாபியிலும் அதற்க்கான ஆயத்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.



இந்த மெட்ரோ துபையை காட்டிலும் கூடுதலாக 131  km தூரத்திற்கு என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. அபு தாபி துபையை விட சிறிய நகரம்தான் என்றாலும் இதனை சுற்றியுள்ள சிறிய ஊர்கள் அதிகம், அதனை முன்னிருத்திதான் இந்த ஏற்பாடு, மேலும் இங்கு பெருகி வரும் மக்கள் தொகையை கனகிளிட்டும் இந்த பணி துரிதபடுதபட்டுள்ளது. 

இந்த மெட்ரோ ப்ராஜெக்ட் இங்குள்ள முக்கிய இடங்களான Sowwah Island, Reem Island, Saadiyat Island, Yas Island, Abu Dhabi International Airport and Masdar, the Capital City District, Emerald Gateway, Zayed Sports City and Adnec. போன்றவைகளை இணைக்கும் வண்ணமாக செயல்படவுள்ளது. 


இதில் முதல் கட்டமாக 18km மெட்ரோவும், 40km tram வண்டியும் தொடங்கப்படவுள்ளது, அதாவது இது இங்குள்ள Central Station, North Island, Al Wahda, Adnec, and Zayed Sports City போன்றவைகளை இணைக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. 

இதனால் அபு தபி அரசிற்கு வருடத்திற்கு 3 .8 பில்லியன் டிராவல் டைம் செலவும், 102million பயண நேரமும் மிச்சமாகும் என்கின்றார்கள் அதிகாரிகள். 

இதனால் இங்கு வெளியாகும் கார்பன் மோனாக்சைட் 22050  ன் குறையும் என்றும் தெரியவருகிறது. இந்த முயற்சி 2016  ஆமாண்டு முடிவடையும்.

என்னதான் இந்த நாட்டில் மக்கள் அவதி பட்டாலும், இது போல  உண்மையிலேயே மக்களுக்காக செய்ய கூடிய ஒவ்வொரு செயலும் பாராட்டகூடியதே.................

துபாய் என்னதான் planned  நகரம் என்றாலும், அபு தபி well  planned  நகரம் என்பதில் மாற்றுகருத்து இல்லை...............

கருத்துகள் இல்லை: