OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 19 மார்ச், 2012

இப்படியும் ஒரு பைத்தியம்!!!!!!!!!




முன்னாடி எல்லாம் பார்தீங்கன்னா ஊருல எங்கேயாச்சும் பைத்தியங்கள் அலையும் ஆனால் இப்ப பார்த்தா எவன் பைத்தியம்ன்னே கண்டுபிடிக்க முடியலை. அதிலும் குறிப்பா இந்த கிரிக்கெட்டு பைத்தியங்கள் இருக்கே, சாத்தியமா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் இவனுங்க கிட்ட.

இதை ஏன் சொல்றேனா, நேத்து நடந்து முடிந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கிடையேயான போட்டியை காண ஒரு பைத்தியம் துபையில் உள்ள தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு போய் இருக்கிறான் என்றால் பாருங்கள் (எப்பூடி சிக்கி இருக்கான் பாருங்க).

இனி அவனை பற்றி கொஞ்சம்:-
ஜமான் கான், இவர் பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சகிவல் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் துபையில் ஒரு கட்டிடம் கட்டும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவன் இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கிடையேயான போட்டியை காண தனது அலுவலகத்தில் விடுமுறைக்கு விண்ணப்பித்திருக்கிறான்  ஆனால் அவனது அலுவலகம் அதை மறுத்து விட்டனர். இதனால் கோபம் கொண்டு தனது பணியை ராஜினாமா செய்துவிட்டான். (எவ்வளவு பெரிய முட்டாள் செயல்).

இனி வேலை கிடைக்கும் வரை அவனது குடும்பத்தின் நிலை என்ன?

இது ஒரு பைத்தியக்கார தனம் என்றால், இதை விட ஒரு பைத்திய காரத்தனத்தை இங்கே துபையில் உள்ள ஒரு ரேடியோ அலைவரிசை ஒரு விளம்பரம் செய்தது, அதாவது இந்த போட்டியை காண இங்கே அமீரகதில் உள்ளவர்களுக்கு விடுமுறை வேண்டுமெனில், அவர்கள் அவர்களின் பாஸின் அலைபேசி என்னையும், அலுவலக பெயரையும் அவர்களுக்கு எஸ்‌எம்‌எஸ் அனுப்பினால் போதும், அவர்கள் விடுமுறை வாங்கி குடுப்பார்களாம், இது தேவையா? அப்படி சுமார் ஒரு மில்லியன் நபர்கள் விடுமுறையில் ஒரு நாள் சென்றால், இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காதா? இதை விட அந்த பாலாய் போன கிரிக்கெட் ரொம்ப முக்கியமா?

இந்த கிரிக்கெட் மோகத்தால், நிறைய பேர் இன்று தனது நண்பர்களை கூட காண வருவதில்லை, பெற்றோர்கள், மனைவி, மற்றும் குழந்தைகளை கூட கவனிப்பதில்லை என்றால் அது மிகையாகாது.

பெண்களின் சீரியல் மோகம் கூட குறைந்துவிடும் ஆனால் இந்த பைத்தியங்களின் கிரிக்கெட் மோகம்?????????????????

கருத்துகள் இல்லை: