சவூதியில் உள்ள நமது செய்தியாளரை இன்று காலையில் சந்தித்த தமிழர் ஒருவர் கூறிய அதிர்ச்சியூட்டும் தகவல் இது.
சவூதி தலைநகர் ரியாத்தின் புறநகர்களில் ஒன்றான அல்ஹைர் என்னும் நகரில் Aல்-ஷ்௰அயெஹ் Bஉஇல்திங் Cஒந்ஸ்த்ருச்திஒந் அந்த் Cஒந்த்ரச்திங் Cஒ என்னும் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த மே மாதம் 2011ல் 700 பணியாளர்கள் அவரவர் நாடுகளிலிருந்து பணிக்கு வந்துள்ளனர். அவர்களில் சுமார் 200 பேர் தமிழ்நாடு, உ.பி, பீகார், கேரளா முதலான இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
என்ன கொடுமை என்றால், வந்த நாள் முதலே அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. இதுவரை அவர்களுக்கு அக்காமா எனப்படும் குடியுரிமை அட்டையும் தரப்படவில்லை. அவர்களிருக்கும் முகாம் கூட ஏதோ அகதிமுகாம் போல மின்சாரம் இல்லாமல், சமைப்பதற்குத் தேவையான எரிவாயு வசதியும் இல்லாமல், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் தரும் சொற்பத் தொகையைக் கொண்டே இதுவரை நாட்களைக் கழித்துவருகின்றனர். மனித உரிமை அமைப்புகளின் கடும் முயற்சியில் சொற்பத்தொகையில் ஒருமுறை சம்பளம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இச்செய்தியினைத் தெரிவித்த அத்தொழிலாளருக்கும் நம் செய்தியாளருக்கும் இடையில் நடந்த உரையாடல்:
"சவூதி அரேபியாவில் பாரபட்சமில்லாத நீதிமுறை இருக்கிறதே! நீங்கள் சவூதி அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றீர்களா??"
"அதில் மொழிப் பிரச்னை இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஆறுபேர் காவல்நிலையம் சென்று முறையிட்டபோது, அவர்களைப் பற்றி நிறுவனத்தார் வேறு ஏதோ முறையீடுகளைச் செய்ததால், அது எடுபடாமல் போனது தான் மிச்சம்"
"சரி, எத்தனையோ தமிழர் அமைப்புகள், மலையாள அமைப்புகள், இந்தியத் தூதரகம் யாவும் உள்ளனவே....!"
"இல்லை, அதெல்லாம் சரிப்படும் என்று தெரியவில்லை, உங்கள் இதழில் வெளியிட்டால் இந்திய அரசு மூலமாக, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்புவதன் வாயிலாக இம்மாதிரியான இந்தியர் பிரச்னைகளுக்கு ஒரு முடிவும் விடிவும் ஏற்படலாம். குறிப்பாக, உடல்நலம் குன்றியுள்ளவர்கள் நாட்டுக்கும் போக வழியில்லாமல் படும் சிரமம் சொல்லிமாளாது. மனிதாபிமான அடிப்படையில் நீதி நிலைபெறச் செய்ய வேண்டியுள்ளது"
"நல்லது. நிச்சயம் இதுபற்றி எழுதுகிறோம்."
சொன்னபடி, இதோ எழுதிவிட்டோம். இச்செய்தியினை வாசிக்கும் நமது அரசியலவை உறுப்பினர்கள் நிச்சயம் தீர்வுகாண வழிமுறைகளை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக