OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 24 ஜூன், 2012

அன்பளிப்பு என்பது மறைமுக வரதட்சணை அல்லது லஞ்சம்!!!!!



நாம் அன்றாடம் செய்திகளில் படிக்க கூடிய அதிபடியான விஷயங்களில் ஒன்று வரதட்சணை கொடுமை,. அல்லது ஊலல், லஞ்சம் குற்ற சாட்டுக்கள்தான். (ஆனா இப்பவெல்லாம் பாருங்க வெறும் கள்ளக்காதல்தான், எல்லாம் செய்திதாள்களும் இப்ப செக்ஸ் புத்தக ரேஞ்சுக்கு எழுதுறாங்க!!!!!!!!!!!!!! இதபத்தி பிறகு தனி பதிவு இடப்படும்).


இதுல முதலில் நாம் இந்த வரதட்சணையை பற்றி பார்போம், ஒரு பத்து வருடதிர்க்கு முன்னர் எல்லாம், தினமும் இந்த வரதட்சணை கொடுமையால் மருமகள் தீக்குளித்தால் என்கின்ற செய்திதான் அதிகமாக வரும். இதில் முஸ்லிமல்லாத மற்ற மததவர்களின் பெயர்கள் தான் அதிகம் வரும். அதிகமாக நம்ம முஸ்லிம் சமுதாயத்தின் பெயர்கள் அதிகம் வராது. அது ஏன் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

அதாவது 1980 க்கு முன்னர் எல்லாம் தமிழகத்தில் ஒரு 90 சதவிகித முஸ்லிம் சமுதாயம்  மக்கள், இஸ்லாதிர்க்கு புறம்பான காரியங்களில் தான் ஊறி கிடந்தனர். உதாரணமாக தர்கா வழிபாடு (இன்றும் உள்ளது ஆனால் குறைந்துள்ளது), வரதட்சணை போன்றவைகள். அப்பவெல்லாம் வரதட்சணையை பெண் வீட்டாரிடம் கேட்டு வாங்கி வந்தார்கள். ஆனால் 1980 க்கு பின்னர் சில தௌஹீத் சிந்தனை உள்ள ஜமாத்களின் தௌஹீத் பிரசாரத்தால் அது படிபடியாக குறைந்து இப்பொழுது இளைய தலைமுறை வரதட்சணை இல்லாமலே திருமானங்கள் செய்கின்றார்கள்.

இருந்தாலும் அவர்கள் செய்யும் மிக பெரிய தவறு, சில பேர் தெரிந்தே செய்கிறார்கள், இன்னும் சில பேர் தெரியவில்லை என்று நடிக்கிறார்கள், இவர்களும் படித்தவர்கள்தான், தௌஹீத் சிந்தனை உள்ளவர்கள்தான். அது என்னவென்றால், பெண் வீட்டார்களால் பெண்ணிற்க்கு அளிக்கபடும் பொருட்கள், சொத்துக்கள், நகைகள் போன்றவைகள். அது எப்படி பெண் வீட்டார் பெண்ணிர்க்காக குடுப்பது வரதட்சணை ஆகும் என்று??? அதற்க்கு அழகான ஒரு ஹதீஸை உங்களுக்கு கூறினால் புரியும்.




இங்கே மேலே உள்ள ஹதீஸின் படி, இன்று திருமணம் என்கின்றதால்தான் இந்த சொத்துக்களும், பொருட்களும் அந்த பெண்ணின் பெயருக்கு குடுக்க படுகின்றது, ஏன் இதை கல்யாணதிர்க்கு முன்னாள் அந்த பெண்ணின் பெயரில் எழுதிவைக்க வேண்டியதுதானே. அப்படி இல்லை என்றால் எப்படியும் இஸ்லாதின் சொத்துரிமை சட்டப்படி தகப்பன் சொத்தில் அவளுக்கு பங்கு வரத்தானே போகின்றது. அப்புறம் ஏன் கல்யாணதன்று குறிப்பிட்டு எழுத வேண்டும். இது எப்படி அன்பளிப்பாகும். இதுவே அந்த கல்யாண மாப்பிள்ளை சும்மா இருந்தால் அவருக்கு எங்கே இருந்து அந்த சொத்துக்கள் வந்து கிடைக்கும், சும்மா வெறும் கையை நக்கிட்டு இருக்க வேண்டியதுதான். இதுல கொடுமை என்னவென்றால், சில பேர்கள் இடமாக குடுக்கிறார்கள் இன்னும் சில பேர் அதில் வேட்டையும் கட்டி குடுக்கிறார்கள். இது எந்த வகையில் அன்பளிப்பு, என்னதான் பெண்ணின் பெயரில் இருந்தாலும், நாளை எப்படியும் அது கணவனைதான் சேரும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்காது என்று நினைக்கிறேன். !!!!!!!!!!!!!!

அடுத்ததாக லஞ்சம். இந்த லஞ்சமும் இன்று அன்பளிப்பு என்கின்ற பெயரில்தான் வாங்க, குடுக்க படுகின்றது. உதாரணமாக ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரிகின்றார் என்று வைத்து கொள்வோம், ஒரு குடிமகன் (நாட்டின்) அவருக்கு ஏதோ ஒரு முக்கியமான ஒரு பதிவில் அந்த அரசு ஊழியரின் கையெளுத்து தேவை என்று வைத்து கொள்வோம், அதுவும் அந்த குறிப்பிட்ட நாளில் வேணும் என்று வைத்து கொள்வோம், உடனே அவர் என்ன செய்வார். முறையாக போனாலும் அவர் போட்டு விடுவார் நல்லவராக் இருந்தால் இருந்தாலும் அந்த குடிமகநிற்க்கு அவசரம், அதனால் அவர் என்ன செய்வார் ஏதாவது ஒன்றை அவருக்கு அன்பளிப்பு என்று கூறி குடுப்பார். அதைய்யும் இவர் வாங்கி கொண்டு உடனே போட்டு விடுவார். இது லஞ்சமில்லையா? இதே அவருக்கு தேவையில்லை என்றால், யார் என்றே தெரியாத ஒருவருக்கு அன்பளிப்பு குடுக்க அவருக்கு என்ன பைத்தியமா?



இப்படிதாங்க என்னுடைய நண்பர் ஒருவர், வெளிநாட்டில் ஒரு கட்டிட பராமரிப்பு அலுவலகத்தில் பணி புரிகிறார், அந்த அலுவலகத்திற்க்கு, நிறைய பரமறிப்பீர்க்கு தேவையான சிறிய சிறிய அலுவலக்ங்களுடன் ஒப்பந்தங்கள் இருக்கு. அந்த ஒப்பந்த அலுவலகங்கள் எல்லாம் அவர்களுக்கு ஏதாவது ஒரு ஒப்பந்தம் வேண்டுமெனில் இந்த நண்பரைதான் தொடர்பு கொள்வார்கள் அதர்க்காக அவருக்கு மொபைல் என்ன, விலை உயர்த்த வாசனை திரவியங்கள் என்ன, விலை உயர்ந்த எழுகோல்கள் என்ன. இப்படி ஏகப்பட்டது. இது எல்லாம் அவர் கூறுகின்றார் லஞ்சமில்லை அன்பளிப்பு என்று. உண்மையிலேயே அன்பளிப்பு என்கின்ற வார்த்தைக்கு ஆர்தமில்லாமல் இப்படி எல்லாம் சமாளிக்கின்றார்கள்.

அன்பளிப்பு என்றால் என்ன, எதையும் எதிர்பார்க்காமல்குடுக்கபடுவதற்க்கு பெயர்தான் அன்பளிப்பு. ஒரு நண்பர் இன்னொரு நண்பனுக்கு திருமணத்திற்க்கோ, இல்லை ஆசையாகவோ எதேனும் வாங்கி குடுத்தால் அது அன்பளிப்பு. இங்கே நான் மேலே கூறியதற்க்கு பெயர் அன்பளிப்பா???????? சிந்திக்கவும். இந்த நண்பருக்கு அந்த கம்பெனிகாரன் என்ன மாமாவ இல்லை மச்சானா?
இந்த அன்பளிப்பில் இன்னொரு முறை உள்ளது, அதாவது உங்களுக்கு ரொம்ப முக்கியமானவர்/நெருக்கமானவர் (அன்பினால் மாட்டுமே) அவருக்கு எதேனும் உதவி செய்கின்றீர்கள், உதாரணமாக அவரது கணினியை சரி செய்து குடுகின்றீர்கள் என்று வைத்து கொள்வோம்,. இப்போ அதற்க்கு அவர் பணமாக குடுத்தால் நீங்கள் தவறாக என்ன கூடும் என்று நினைத்து எதேனும் ஒன்றை பொருளாக வாங்கி குடுத்தால் அது அன்பளிப்பு!!!!!!!!!!!!!!!

இந்த இரண்டுமில்லாமல், உங்களால் ஒரு காரியம் ஆக வேண்டும் என்று நினைத்து குடுகின்ற எல்லாமே லஞ்சம்தான், அது ஹராம்தான்............!!!!!!!!!!!!!!!!!!!! மேலும் இது உங்களை நம்பி உங்களுக்கு வேலை குடுத்து இருக்கும் கம்பெனிக்கு நீங்கள் செய்யும் துரோகம்...............என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

லஞ்சம் வாங்குவதற்க்கு பதில் ரோட்டில் நின்று பிச்சை எடுத்துவிட்டு போகலாம். 

இவ்வகை பாவத்தில் இருந்து இறைவன் உங்களை என்னையும் பாதுக்காப்பானக என்று கூறி விடை பெறுகின்றேன்.

வாய்ப்புக்கு நன்றி.....................!!!!!!!!!!! உங்கள் கருத்துக்களை பதியவும். 

கருத்துகள் இல்லை: