OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 3 ஜூன், 2012

செமத்தியா சிக்கிட்டாண்டா சேகரு!!!!!!!!!!!!


செமத்தியா சிக்கினடா சேகரு!
சமீப காலமாக 'நீயா நானாகோபிநாத்தின் நடவடிக்கைகள் எனக்கு எரிச்சலையேதருகின்றதுஎரிச்சல் என்பதற்கு மேலாய் அனேகமாக கோபத்தை கிளறுவதாய் உள்ளது.அவர் கலந்து கொண்ட " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடிநிகழ்ச்சியாகட்டும் சரிஇப்போது பவர் ஸ்டாருடன் நடந்த "நீயா நானாவாகட்டும்சரி ஒட்டுமொத்தமாய்எல்லோரது வசைபாடல்களையும் வாங்க்கிக்கொண்டிருக்கிறார் கோபிநாத்அதிலும்குறிப்பாக அவரது திறமைகளாலும் அணுகுமுறைகளாலும் ஈர்க்கபட்ட என்போன்றரசிகர்களது ஒட்டுமொத்தமான முகச்சுழிப்புக்கு காரணமாகி இருக்கிறார்இனிமேல்என்னைக் கேட்டால் , கோபிநாத்தின் ரசிகனாக இருப்பதை விட ஒரு நிகழ்ச்சிதொகுப்பாளராக அவரை ரசிப்பது மட்டுமே எனக்கு நலம்தனது புகழுக்காகவும் தங்களதுதொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகவும் ஒரு தனிநபரின்சுயகௌரவத்தோடும் தன்நம்பிக்கையோடும் விளையாடும் , அல்லது இழிவுபடுத்தும்ஒருவர் எனது முன்மாதிரிகையாக இருப்பதில் எனக்கு துளியும் இஷ்டமில்லை.

கோபிநாத்தை கேள்விகேட்பதற்கு முன்னர் இங்கே ஒரு விடயத்தை நான்தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்இதே எனது பதிவில் ஆங்காங்கே பவர் ஸ்டாரைநானும் கலாய்த்து இருக்கிறேன்அதே போல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பவர்ஸ்டாரை ஜாலியாக கலாய்க்கும் பதிவர்கள் ஏராளம்ஆனால் நானும் , பவர் ஸ்டாரைஜாலியாக கலாய்க்கும் ஏனைய பதிவர்களும் கூட கோபிநாத்தின் செய்கைகளை ஒருபோதும் சரி என்று சொல்ல மாட்டோம்நீங்களும் அவ்வாறு செய்ய மாட்டீர்கள் எனநினைக்கின்றேன்.

எங்களது பதிவுகளில் கலாய்க்கப்படுதல் என்பது ஒரு ஜாலியாக நடப்பதுஅது போகநாங்கள் கலாய்ப்பது சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு என்பது வாசிக்கும் அனைவருக்கும்விளங்கக்கூடியதாக இருக்கும்அது போக எங்களது காலய்த்தல்கள் எல்லாமே ஒருமொக்கை படத்தின் பெறுபேறாக இருக்குமே தவிர , குரிப்பிட்ட அந்த மனிதரின்திரையுலக பிரவேசம் குறித்ததாக இருக்காதுஅப்படி சந்தர்பத்தில் இருந்தாலும் அதுஒரு ஜாலியான பதிவாகவே இருக்கும்இன்று அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அளவுக்குவளர்ந்து நிற்கின்ற இளையதளபதி விஜய் கூட பதிவுலகை பொறுத்தவரை ஒருகலாய்படுபொருளேகாரணம் அவர் தொடர்ச்சியாக திரைக்கு அனுப்பிய கொட்டாவிகள்.

முதலில் கோபி சார் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்நீங்கள் ஒன்றும் பெரியபச்சிலை புடுங்கி கிடையாதுஓட்டைத்தகரம் மேல் மழை விழுவதை போல தொணதொணக்கும் எத்தனையோ தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் மத்தியில் , நீங்கள்கொஞ்சம் வித்தியாசம், அவளவு தான்ஆனால் உங்கள் நினைப்பு என்னவோ நீங்கள்தான் இந்தியாவின் எதிர் காலம் போலவும்ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆலோசனைவழங்குபவர் போலவும் தான் நடந்து கொள்கிறீர்கள்எவரது எதிர் காலத்தையும்தீர்மானிப்பது நீங்கள் கிடையாதுஅது அவரவர் எண்ணமும் விருப்பமும்.

பவர் ஸ்டாருடைய தனி அடையாளத்தை தேடிகண்டுபிடிக்க நீங்கள் யார்அவர் தனதுவிருப்பத்துகிணங்க இந்த திரைத்துறையை தீர்மானித்திருக்கிறார்அது அவரதுதனிப்பட்ட தீர்மானம்அடிக்கடி "உங்களுடைய உண்மையான முகத்தை உங்களுக்குகாட்டுவதற்கு முயற்சி செய்கிறேன்நீங்கள் தான் இறங்கி வரமாட்டேன் என்கிறீர்கள்"என்று சொல்கிறீர்களேநீங்கள் யார் குறி சுடுபவராஆளாளுக்கு அடையாளம் கொடுக்க! "நீங்கள் ஏன் ஒரு அக்குபஞ்சர் வைத்தியராகவே இருந்திருக்க கூடாதுதிரைத்துறைக்குஏன் வந்தீர்கள் " என்று ஏதோ தமிழ் சினிமாவை ஆறுமாத குத்தகைக்கு எடுத்தவர்போலவே கேட்கிறீர்களேஇதே போல் ஒரு கேள்வியை சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம்போய் அல்லது அவரை உங்களது நிகழ்ச்சிக்கு வரவழைத்து  "சார்நீங்கள் பஸ் நடத்துனர்தொழிலைவிட்டு சினிமாவுக்கு வந்தது தவறு சார்வீணான இந்த பந்தா வேண்டாம்இதுபோலி கௌரவம்.உங்களது உண்மையான அடையாளத்தை நான் தருகிறேன்நீங்கள்போய் மீண்டும் பஸ் நடத்துனர் வேலையையே பாருங்கள் " என்று கேட்க முடியுமா?முடிந்தால் கேட்டுப்பாருங்கள்அடுத்த நாள் உங்களது உடம்பின் முக்கிய பாகங்கள்மூன்றும் வெவ்வேறு மூன்று சந்துகளில் கிடக்கிறதா இல்லையா என்று

ஒரு துறையை விட்டு இன்னொரு துறையை தெரிவு செய்வது அவரவர் விருப்பம்.அதை பிழை என்று சொல்ல நீங்கள் யார்அப்படி பார்க்கப்போனால் உங்களது லட்சியம்வணிகத்துறையில் பெரிய ஆளாக வருவது ( பட்டப்படிப்புகளை மேற்கொண்டுஎன்றுகூறியிருக்கிறீர்கள்அப்படியானால் உங்களது உண்மையான துறையை விட்டுவிட்டுஇப்போது போலி புகழுக்காகவும் , அற்ப பணத்துக்காகவும் நீங்கள் விஜய் டி.வி யுடன்ஒட்டியிருந்து கீழ்த்தரமான வேலைகளையெல்லாம் செய்து வருகின்றீர்கள் என்று நான்சொன்னால் , நீங்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்களா?

கொஞ்சம் அடக்கியே வாசிச்சிருந்திருக்கலாம், மைக்கு இருந்த தெனாவட்டு என்ன பண்றது?


அடுத்து போலி கௌரவம் தொடர்பான ஒரு பேச்சை எழுப்பி இருந்தீர்களேசரிவாஸ்தவம் தான் ஒரு மனிதனுக்கு போலி கௌரவம் ஒன்று அனேகநேரங்களில்தேவைப்படுவதில்லை தான் ஒத்துக்கொள்கிறேன்அதற்காக ஒரு சமூக அக்கறைகொண்டதாக நோக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகஅழைக்கப்பட்ட ஒருவரை பலலட்சம் பேர் பார்க்கும்படியாக அவமானப்படுத்தியதுஎந்தவகையிலும் நியாயமாகி போகாதுசரி உங்களது வாதம் சரி என்றுஎடுத்துக்கொண்டால் அதற்கு எதிர்வாதமும் இல்லாமல் இல்லைபவர்ஸ்டார்பத்துபதினொரு பேருடன் வருவதை போலி கௌரவம் என்கிறீர்களாகொஞ்சம்சிந்தியுங்கள் ஒரு சாதாரண அக்குபஞ்சர் வைத்தியர்பத்துபடங்களுக்கு பூஜை போட்டு (படத்தின் தரம் குறித்த விவாதம் இங்கு அவசியமில்லைபடப்பிடிப்பு நடத்திவருகிறார்என்றால் அவரிடம் அவளவு பணம் இருக்க வேண்டும்தனது பாதுகாப்பு கருதிகூட அவர்நாலைந்துபேரை தன்னோடு கூட வைத்திருக்கலாமேஅதுபோல் பவர்ஸ்டாருடன்வந்தவர்கள் அவரை வீடியோ பதிவு செய்ததை பெரிய இவராட்டம் கேலிசெய்தீர்களே,இந்த காலத்தில் முகம் தெரியாமல் தொலைபேசியில் பேசி பாடல் கேட்கமுண்டியடிப்போர் எத்தனையோ ஆயிரம் பேர்தமது முகம் தெரியாமல் தமது குரல்வருவதற்கே இப்படி முண்டியடிக்கிறார்கள் என்றால்ஒரு பிரபலமான நிகழ்ச்சியில் தான்வந்துபேசியதை ஒளிப்பதிவு செய்து நீங்கள் ஒலிபரப்பும் முன்பு எந்தவித எடிட்டிங்கும்இன்றி பார்க்கவேண்டுமென்ற அப்பாவித்தனமான ஆசை பவர்ஸ்டாருக்கு வந்திருந்தால்அது எந்தவகையில் தப்பென்று ஆகும்?

"பவர்ஸ்டார் கண்ணாடி போடலாமா ?" என்று ஒருவர் கேட்டுவிட்டு போனதாக கிண்டல்செய்தீர்களேஇது உங்களது நிகழ்ச்சிஉங்களிடம் கூறிவிட்டுத்தான் எதுவும் செய்யவேண்டுமென்ற இங்கிதம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறதுமுதலில் உங்களுக்கு"இங்கிதம்என்றால் என்னவென்றாவது தெரியுமாதெரிந்திருந்தால் அவர்கள்ரகசியமாக வந்து உங்களிடம் கூறிப்போனதை இப்படி பகிரங்கமாக கேலி பண்ணியிருக்கமாட்டீர்களே! அது போக கண்ணாடி அவர் போடுவது அவரது விருப்பம் , உங்களது நிகழ்ச்சி விதிமுறைகளின் பிரகாரம் அது முடியாது என்றால் அவர்களுக்கு அதை சொல்லி அணியவிடாமல் பண்ணியிருக்க வேண்டும். இல்லை அவர்கள் போட்டுத்தான் ஆகுவோம் என்று அடம்பிடித்திருந்தால் அவர்களை நிகழ்ச்சியில் அனுமதித்திருக்க வேண்டாமே. இப்படி எல்லா சூதையும் நீங்களே பண்ணிவிட்டு அப்பாவி அந்த பவர்ஸ்டாரை அவமானப்படுத்தி நீங்கள் "அப்ளாஸ்" வாங்கியது உங்களது ஈனப்புத்தி என்பதைவிட வேறு என்ன சொல்ல?

சரி இவையெல்லாம் விடுவோம் போலிகௌரவம் குறித்து பேசுவதற்கு தகுதியான ஆளாநீங்கள்உங்களையே ஒரு கணம் உற்று பாருங்கள் உங்களது உடைகளேபோலிகௌரவத்தின் பிரதிபலிப்புக்கள் இல்லையாதமிழனது ஆடை வேட்டி , சட்டை.அதையா அணிந்து நீங்கள் நிகழ்ச்சி செய்கிறீர்கள்நமக்கு சற்றும் தொடர்பில்லாதவெள்ளையனின் கோட்டை அணிந்திருப்பது உங்களுக்கு போலிகௌரவமாகதெரியவில்லையாஇந்த உலகுக்கு உங்களை ஒரு "கனவானாக " காட்டுவதற்குஉங்களது உண்மையான அடையாளத்தை நீங்கள் மறைப்பது போலிகௌரவம்இல்லையா?  ஆரம்பகால நிகழ்ச்சிகளின் போது அவ்வப்போதுமட்டும் , தேவையானால்ஆங்கிலம் பேசிவந்த நீங்கள் இப்போது அவ்வப்போது மட்டும் தமிழ் பேசுவது உங்களுக்குபோலிகௌரவமாய் தெரியவில்லையா?

இதை கூட நான் பிழை என்று சொல்ல மாட்டேன். போட்டி நிறைந்த இந்த தொலைக்காட்சி சந்தையில் உங்களை சற்று மெருகுகூட்டி காட்டி உங்களை விளம்பரப்படுத்தி விற்பதில் குறியாய் இருக்கிறீர்கள். ( அந்நியனின் மொழியும் , ஆடைகளும் எங்களுக்கு விளம்பரமாய் ஆகிப்போனது எங்களது துரதிஷ்டம்). ஆக நீங்கள் பண்ணுவது விளம்பரம் என்றால் பவர்ஸ்டார் பண்ணுவதும் விளம்பரம் தான். போட்டி நிறைந்த இந்த சினிமா உலகில் தனக்கென ஒரு இடம் பிடிக்க விளம்பரம் செய்கிறார். "பிளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதிங்க" என்று ஒரு எதிர் மறையான விளம்பரம் பண்ணி உங்களது அந்த குறிப்பிட்ட புத்தகத்தை அதிக விற்பனையாக வைத்தவர் தானே நீங்கள்.உங்களுக்கு தெரியாத விளம்பர யுக்தியா? . இல்லை பவர்ஸ்டார் பண்ணுவது விளம்பரம் இல்லை போலிகௌரவம் என்றால் நீங்கள் பண்ணுவதும் போலிகௌரவம் என்பதே நீங்கள் ஜீரணித்தே ஆகவேண்டிய  கசப்பான உண்மை.

சரி பவர்ஸ்டாரை ஒரு நடிகனாக பார்த்து அவமானப்படுத்தினீர்கள்அடஅநியாயமே,அந்த பவர்ஸ்டார் என்ற நடிகன் போர்வை போர்த்தியிருந்த  சீனிவாசன் என்ற மனிதனின்மனநிலையை சற்று சிந்தித்து பார்த்தீர்களாஇப்போது கூட கோபிநாத் என்ற நிகழ்ச்சிதொகுப்பாளனுக்கு பின்னால் இருக்கின்ற சாதாரண மனிதனை கருத்தில் கொண்டுதான்முடிந்த வரை எனது வார்த்தைகளை அடக்கி எழுதுகிறேன்இல்லைநானும் நீங்கள்அன்று நிகழ்ச்சி செய்த மனநிலையில் இருந்திருந்தால் இது பலர்பார்க்கின்றபதிவென்றும் பாராது தமிழ்,ஆங்கிலம்சிங்களம் என்று எனக்கு தெரிந்த அத்தனைமொழிகழிலும் உள்ள திருவாய்ப்பாடுகளை உதிர்த்துவிட்டிருப்பேன்.

ஒரு நடிகனாக தனக்கு வரும் விமர்சன கணைகளை தாங்கிகொள்ள வேண்டியகட்டாயத்தில் இருந்தாலும் , வீம்புக்கு அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகையில்சீனிவாசனாக அவரது மனநிலையை அல்லது அவரது சுயகௌரவத்தை சற்றுநினைத்துப்பார்த்தீர்களா கோபிநாத்நீங்கள் எப்படி அடுத்தவர் சுயகௌரவத்தை பற்றிநினைப்பீர்கள்? "ஒரு கோடிநிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அழுதார் என்றகாரணத்துக்காக , தேவையே இல்லாமல் அழுதுவடித்து/நடித்து உங்களதுசுயகௌரவத்தை குழிக்குள் தள்ளிய உங்களுக்கு அடுத்தவர் சுய கௌரவம் பற்றி கவனம்வர வாய்ப்பு இல்லை தான்உங்களது இந்த கீழ்த்தரமான வேலையை என்னவென்றுசொல்வது?



ஆனாலும் நீங்கள் என்னதான் தூண்டல் போட்டாலும் சிக்கியது என்னமோ நீங்கள் தான்,சாணியை பவர்ஸ்டாருக்கு அடிக்க நீங்கள் கரைத்தாலும் அதை உங்களது முகத்தில்அடித்ததென்னவோ பவர்ஸ்டார் தான்.  அவரை அவமானப்படுத்த வேண்டுமென்றநோக்கத்தில் உங்களது கேள்விகள் அமைந்திருந்தாலும் , அந்த கேள்விகள்அத்தனையையும் அவர் புன்னகையுடன் உள்வாங்கியது உங்களுக்கு விழுந்த முதல் அடி.பவர்ஸ்டார் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது பண்ணி உங்களது டி.ஆர்.பீ எகிறலுக்குகாரணமாக இருப்பார் என்ற எண்ணத்தில் நீங்கள் கரைத்த அத்தனை சாணிகளையும்'சப்பு சப்புஎன்று உங்கள் மூஞ்சியில் சிரித்துக்கொண்டே பவர்ஸ்டார் அடித்ததை பார்த்துரசிதேன்.  நீங்கள் தனக்கு குழிவெட்டுகிறீர்கள் என தெரிந்தும் , அத்தனைகேள்விகளுக்கும் அசராது அசால்ட்டாக பதில் சொன்னபோது உங்கள் மூஞ்சியும் ,சாதுரியத்தனமும்எவரையும் எந்த உணர்ச்சிக்குள்ளும் கொண்டுபோய்விடும் உங்களதுபேச்சும் மொத்தமாய் தோற்றுப்போனதை உணர்ந்தீர்களாஉங்களது பேச்சில் மயங்கிரசிகனான நான் கூட , பவர்ஸ்டார் உங்களது கேள்விகளுக்கு "அட இது ஒருகொசுத்தொல்லை ' என்ற தோரணையில் எந்தவித பதட்டமும் இல்லாமல் பதில் தந்தபோது ஒருகணம் உங்களது தோல்வியை ரசித்தேன் கோபி சார்!

இங்கே தான் எனக்கு பவர்ஸ்டார் மீது ஒரு அநுதாபம் கூட வந்தது அந்த சிரிப்பில் எந்தகபடத்தையும் காணமுடியவில்லைஒரு குழந்தை தனமான சிரிப்பு அதுதன்னைஅவமானப்படுத்துகிறார் கோபி என்று தெரிந்தும் எப்படித்தான் பின்னகையோடே பதில்தர முடிந்ததோஅதிலும் "உங்களது எதிரிகள் யார்என்று கோபி கேட்கவும் "முதலாவதேநீங்கள் தான் " என்று "சடார்என்று ஒரு பதிலடி தந்தது தான் அந்த ஷோவின்ஹைலைட்.

மிஸ்டர் கோபிநாத்! "காமடி வட்டத்துக்குள் இருந்து வெளியே வாருங்கள்,ஊடகங்களுக்கு சீரியசாக பதில் சொல்லுங்கள்என்று பவர்ஸ்டாருக்கு அறிவுரைசொல்கிறீர்களேஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் , அந்த காமடியான வேடம் பவர்ஸ்டார்அவராகவே விரும்பி அணிந்துகொண்டிருப்பதுஅதை அவரே பலமுறை உங்களுக்குகூறியும் நீங்கள் மூப்பர் முந்திதிரிக்கொட்டை வேலைக்குத்தான் போகிறீர்கள்அந்தகாமடி இமேஜை தான் அவரும் விரும்புவதாக அவரும் சொல்கிறார்மக்கள் தன்னால்பொழுது போக்குகிறார்கள்சந்தோஷப்படுகிறார்கள் என்றால் அது போதும்தூற்றுவார்குறித்து கவலையில்லை என்று அவர் சொல்லியும் அவரது வேடத்தை மாற்றுகிறேன்,இமேஜை மாற்றுகிறேன் என்று நீங்கள் இழவெடுத்தது கொஞ்சம் ஓவர் சார்!

அது போக ஒரு கலைஞன் என்பவன் மக்களை சந்தோஷப்படுத்தினால் அதுதான்அவனுக்கு வெற்றிபவர்ஸ்டாரை பொறுத்தவரையில் அவர் ஏதோ ஒருவகையில்மக்களை சந்தோஷப்படுத்துகிறார்அதை அவரும் விரும்புகிறார்இடையில் போய்நீங்கள் ஒரு ஆணியும் புடுங்க தேவையில்லைமூன்று நிமிஷம் முக்கிப்பிடித்துமூச்சுவிடாமல் பேசினால் நீங்கள் சொல்வது எல்லாம் சரியென்று ஆகாது கோபிநாத்உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள எவளவோ இருக்கென்று நினைத்தேன்ஆனால்இப்போது நானே சொலிகிறேன் நீங்கள் இன்னும் வளரணும் கோபிநாத்கத்துவதாலமட்டும் வளந்திடமுடியாதுபோய் அம்மாவ காம்பிளான் குடுக்க சொல்லி குடித்தாலும்வளர முடியாதுமாறாக உங்களில் பெரியவரோ சிறியவரோ முதலில் அவர்களை மதிக்கழகுங்கள்அதுபோக உங்களுக்குள் சமீபத்தில் வளர்ந்திருக்கும் அந்திய கலாசார ,மொழி மோகத்தையும் இந்த தலைக்கனத்தையும் முதலில் தூக்கிப்போடுங்கள்அப்புறம்என்ன காம்பிளான் சாப்பிடாமலேயே வளர்ந்து விடுவீர்கள்.

டிஸ்கி:- அந்த ஷோவை எத்தனை பேர் பார்த்தீர்களோ தெரியாதுஎனது எழுத்துக்கள்அந்த சம்பவத்தின் கனாகனத்தின் பாதிதான்இங்கே போய் வீடியோவையும்பார்த்துவிடுங்கள்மனசாட்சி உள்ளவராக இருந்தால் எனது கூற்றோடு ஒத்துபோவீர்கள்என நம்புகிறேன்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Arumaiyaana vimarsanam.... enakkum kobam than vanthathu....

Aadi