வாஞ்சிநாதன் என்ற சனாதன வெறிபிடித்த பார்ப் பானால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட நூறாவது ஆண்டு நாள் இந்நாள் (17-6-1911).
மணியாச்சி ரயில் நிலையத்தில் இந்தக் குரூரம் நடந்தது. இந்தக் கொலை யின் பின்னணி என்ன? சுதந்திர தாகமா? வருணாசிரம வெறியா?
ஆய்வுகள் தேவையில்லை - ஆஷை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் சுடுவதற்கு முன் தன் சட்டைப் பையில் எழுதி வைத்திருந்த கடிதம் அதற்கான ஆவணமாகும்.
''ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாதஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.
எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ் ணன், குருகோவிந்தர், அர்ஜுனன்முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத் தில், கேவலம் கோ மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.
அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மத ராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கி றோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்
இந்தக் கடிதத்தில் இந்திய சுதந்திரப் போராட் டம் என்ற உணர்வு துடித்து நிற்கிறதா? ஆரிய பார்ப்பனர்களின் சனாதன தர்மம் என்ற வெறி சூலத்தைத் தூக்கிக் கொண்டு தாண்டவமாடுகிறதா?
கோ மாமிசம் தின்னக் கூடிய மிலேச்சன் ஜார்ஜ் பஞ்சமன் என்ற சொற்களைத் துருவித் துருவிப் பார்க்கட்டும் எவரும்.
மிலேச்சன் என்று ஆரியர் என்று யாரைக் குறித்துச் சொல்லுவர்? பஞ்சமன் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்?
பார்ப்பனர்களின் வருண தர்மத்தின் கடை கோடியில் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களைத்தானே?
அந்தச் சொற்களை ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடப் பயன்படுத்துவதைக் காண வேண்டும். இப்படிப்பட்ட ஜாதி வெறியனை - இந்து மதக் கொடியவனை - ஸனாதன சீக்குக் கொண்டவனை சுதந்திரப் போராட்ட வீரன் என்று சொல்லுவதும், படுகொலை செய்யப்பட்ட இடமான ரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயரைச் சூட்டுவதும் எந்த ஒழுக்கத்தைச் சேர்ந்தது?
பார்ப்பான் என்றால் பாஷாணமும் பஞ்சாமிர்தம் தானோ!
- மயிலாடன்
நன்றி; விடுதலை நாளிதழ்
__._,_.___
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக