வணக்கம் தமிழகம்…
சும்மா சொல்லகூடாது…இடியட் பாக்ஸ்னு ஒரு பேரு இருக்கு டி.விக்கு அத விழுந்து விழுந்து பாக்குறதுல நாம தான் இந்தியாவிலேயே ரெண்டவது. நாம எல்லா டி.வியும் பார்போம்….ஒரு சேனல் குறையில்ல….ஆனா பாக்குறது மட்டும் பொழுதுபோக்கா இருக்கனும். எதாவது விஷயம் இருக்குற நிகழ்ச்சிய பார்த்தா அது பெரிய குற்றம்…சேனல்காரனுங்க பார்த்தானுங்க…உலகமே ஒப்பாரி வைச்சப்ப(அதாங்க இலங்கை மேட்டரு…நமக்கு எதுக்கு அதெல்லாம்…) T.R.P ரேட்டிங்கல நம்ம மானட மயிலாட தான் டாப்பு.
இவ்வளவு சொல்றேன்….நான் மட்டும் யோக்கியமா…நிச்சயம் இல்லை…அட நம்மள திருந்த விட்டாத்தானே…கொஞ்சமாவது யோசிக்கிற அளவு எந்த நிகழ்ச்சியும் இப்ப இல்லை…அப்படி போட்டாலும் அது பிரைம் டைம்ல இருக்காது…
ஒன்னு மட்டும் புரியுது…நமக்கு காட்டபடுறத மட்டுமே பாக்க பழகிட்டோம்… அதை தாண்டி நாம கேக்குறதும் இல்ல அவங்களா நல்ல நிகழ்ச்சிகளை போடுறதும் இல்ல….
ஆனாலும் நம்ம முயற்சிய விடாம அடுத்த இடத்த பிடிப்போம்……அதாங்க No.1…….முதல்ல இந்திய…அப்பறம் உலகத்துல…
என்ன பாஸ் கொஞ்சம் சிரிங்க….சீரியஸ் ஆய்டாதீங்க…
இதாங்க செய்தி….
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் மூலம் தமிழ்நாட்டில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி 2010-ம் ஆண்டு நடந்தது. 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இதில் ஈடுபட்டனர். வீடு கணக்கெடுப்பு பட்டியலை தமிழ்நாட்டு திட்டக்குழு துணைத் தலைவர் சாந்த ஷீலா நாயர் இன்று வெளியிட்டார்.
பின்னர் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நிரு பர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் குடும்பங்களின் எண்ணிக்கை 1.42 கோடியில் இருந்து 1.85 கோடியாக அதிகரித்துள்ளது. 94 சதவீத குடும்பங்கள் ஆழ்துழை கிணறுகள், குழாய் இணைப்புகள், மூடிய கிணறு ஆகியவற்றின் மூலம் குடிநீரை பெறுகிறார்கள். தற்போது 93 சதவீத குடும்பங்களில் மின்சார வசதி உள்ளது. 7 சதவீத வீடுகளில் மின் இணைப்பு இல்லை.
2001-ம் ஆண்டு 75 சதவீத குடும்பங்களுக்கு மின் இணைப்பு இருந்தது. இப்போது 93 சதவீதமாக அதிகரித்துள்ளது. 64 சதவீத குடும்பங்களில் வீட்டுக்குள் குளிக்கும் வசதி உள்ளது. 52 சதவீத குடும்பங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே பயன்படுத்துகிறார்கள். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 44 சதவீத வீடுகளில் டி.வி. இருந்தது. தற்போது 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் டெல்லியில் 92 சதவீதம் பேர் டி.வி. பயன்படுத்துகிறார்கள்.
தமிழ்நாடு டி.வி. பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் 2-வது இடம் பிடித்துள்ளது. 11 சதவீத வீடுகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. 48 சதவீத வீடுகளில் சமையல் கியாஸ் பயன்படுத்துகிறார்கள். 32 சதவீதம் பேர் இரண்டு சக்கர வாகனங்களையும், 4 சதவீதம் பேர் 4 சக்கர வாகனங்களையும் பயன்படுத்துகிறார்கள். 45 சதவீதம் பேர் சைக்கிள்களை பயன்படுத்துகிறார்கள். 26 சதவீதம் பேர் கூரை வீடுகளில் இருந்தனர். தற்போது அது 15 சதவீதமாக குறைந்துள்ளது. முன்பு 33 சதவீத வீடுகள் மண் சுவர்களால் கட்டப்பட்டிருந்தன. அது 25 சதவீதமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக