OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 4 ஏப்ரல், 2012


என் நெஞ்ச்சை நெருடிய ஒரு வீடியோ!!!!!!!!!!!!!!!!

நேற்று நான் எனது முகபுத்தகத்தில் நண்பர் ஒருவர் சேர் பண்ணிய வீடியோவை கண்டேன், அது என்னை நிலை குலைய வைத்தது என்றால் அது மிகையாகாது.

அந்த வீடியோவில் ஒரு வயதான தந்தை மற்றும் அவருடைய மகன் இருவரும் அவர்கள் வீட்டு முன் உள்ள பூங்கா பெஞ்சில் அமர்திருப்பார்கள், அப்பொழுது அங்கே ஒரு சிட்டுக்குருவி வரும் அதை பார்த்து அந்த வயதான தந்தை மகனிடம் கேட்பார் அந்த உரையாடல் இதோ:-

தந்தை:- மகனே, அது என்ன?
மகன்:- அது சிட்டுக்குருவிப்பா.

மீண்டும் சிறிது நேரம் கழித்து.........

தந்தை:- மகனே, அது என்ன?
மகன் (சற்றே கோபமுடன்);- இப்பதானே சொன்னேன் அது சிட்டுக்குருவிப்பா.

மீண்டும் சிறிது நேரம் கழித்து..

தந்தை:- அது என்ன?
மகன் (இதன் முறை மிகவும் கோபமுடன்):- நான் எத்தனை முறை சொல்றேன், நீ ஏன் திரும்ப திரும்ப அதையே கேட்குரே, கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டியா?

இப்படி கடுப்புடன் திட்ட உடனே அந்த தந்தை எழுந்து வீட்டினுள் போயி ஒரு டைரியை எடுத்துக்கிட்டு வருகிறார், பின்னர் அதில் ஒரு பக்கத்தை காட்டி படிக்க சொல்கிறார். அதில் இருந்த வார்தைகள் இதுதான்
“என் மகனுக்கு மூன்று வயதிருக்கும், அப்பொழுது நானும். அவனும் இதே பூங்காவில் அமர்திருந்தோம், இதே போல ஒரு சிட்டுக்குருவி வந்தது, அதை பார்த்த என் மகன் என்னிடம் 21 முறை அது என்னவென்று கேட்டான், நான் அத்தனை முறைக்கும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல், அது சிட்டுக்குருவி  என்று பதிலளித்தேன், ஒவ்வொரு முறையும் அவனை கட்டிபிடித்து பதிலளித்தேன்

இதை படித்தவுடன் அந்த மகன் குற்றவுணர்ச்சியுடன் தன் தந்தையை கட்டிபித்து அழுகிறார் இத்துடன் அந்த வீடியோ நிறைவுறுகிறது.

இந்த வீடியோ செயற்க்கையாக எடுக்கப்பட்டது என்றாலும், அதிலுள்ளது என்னவோ உண்மை. இன்று நாம் கண்கூடாக காண்கிறோம். நகரங்கள் மட்டும் என்றில்லை எல்லா இடங்களிலும் பிள்ளைகள் பெற்றோர்களை தவிக்கவிடுகின்றார்கள்.

நான் அனைவரையும் குறிப்பிடவில்லை, எப்படியும் ஒரு 40 சதவிகிதம் அப்படிதான் இருக்கின்றார்கள், அவர்கள் நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக செய்கிறார்கள். இதில் எந்த மததவரும் நேர்மையாக இல்லை என்பதே நிதர்சன உண்மை.

அப்படி எல்லாம் இல்லை என்று நீங்கள் வாதாடினால், இன்றைக்கு தொழில்நுட்ப்பம் வளர்ச்சியடைவதை விட முதியோர் இல்லைங்கள் வளர்ச்சியடைகின்றது எதற்காக???????

உங்களிடம் விடையிருந்தால், பின்னூட்டமிடவும்.   

உங்களுக்காக அந்த வீடியோ லிங்க், http://www.videofy.me/u6jt8j3r/452047

கருத்துகள் இல்லை: