ஹாய்... ஹாய்... ஹாய்..! எல்லாத்துக்கும் வணக்கம்! சுகந்தன்னே...? கடந்த இரண்டு வாரம், லீவில் இந்தியாவிர்க்கு பொய்யிருந்ததால் பெருசா பதிவு எதுவும் போட முடியவில்லை. எதையும் படிக்கவும் எழுதவும் முடியாமப் போனதுல ரொம்ப வருத்தம் எனக்கு. ஐ மிஸ்ட் யூ ஆல்!
ரைட்டு, நாமளும் இருக்கோம்னு அட்டென்டன்ஸ் குடுத்துரலாம்னு தானுங்க இப்ப வந்தேன். அதனால நான் எதுவும் எழுதி உங்களை போரடிக்காம, சின்னதா என்னுடைய இந்த இரண்டு வார நிகழ்வுகள் பத்தி எழுதிடலாம்னு இருக்கேன். (வொர்க் லோடுலயும் அலைச்சல்லயும் மண்டை காய்ஞ்சு போய் எதுவும் எழுத வரலைங்கறத எவ்வளவு நாசூக்காச் சொல்ல வேண்டியிருக்கு. அவ்வ்வ்வவ்!).
ஊரில் இருந்து வந்தாலும் மனசு என்னமோ ஊரில் இருந்து இன்னும் வர மறுக்கிறது. அது சரி நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா? நான் தற்பொழுது அமீரகத்தின் தலைநகரானா அபுதாபியில் இருக்கின்றேன். சரி அப்படி என்னதான் ஊரில் நடந்திருக்கும் என்று என்னும் போதே முதலில் நியாபகம் வருவது நம்ம டாக்டர் அய்யாதாங்க அவரை புடிச்சி இந்த அம்மா உள்ளே வச்சாலும் வச்சிட்டு, ஊர்ல ஒரு பய வெளியூர் போகவே பயந்தாங்க. பல பஸ்கள் கண்ணாடி உடைந்ததுதாங்க மிச்சம். இதனால சில பேர் இறந்தும் போயிட்டாங்க, அவங்க பாவம் கண்டிப்பாக இவர்களை சும்மா விடாது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாவத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுலேயும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நம்ம தமிழக காவல்துறையினர் அனைவருக்கும் நடுவுல கொஞ்சம் தொப்பை கறைந்திருக்கும்!!!!!!!!!!!!!! சும்மா பெந்தே நிமிதிட்டாங்க!!!!!!!!!!!!!!!!!!! நன்றி அய்யா!!!!!!!!!!!!!!!!
அப்புறம் எங்கே பார்த்தாலும் இந்த பாழாய்போன ஐபிஎல் தொல்லை வேற, எவனை பார்த்தாலும் அவன் இத்தனை ரன், அவன் இதனை விக்கெட்............ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியலை. இதுல இரு நல்ல விஷயம் என்னவென்றால், நான் இருந்த 15 நாளில் வெறும் மூன்று தினங்கள் மட்டும்தாங்க எங்க ஊரில் (பரங்கிபேட்டையில்) மின்சாரம் தடை அதுவும் வெறும் 6 மணி நேரம்தான். வாழ்க மின்சாரவாரியம். இருந்தாலும் அங்குள்ள மக்களை நினைக்கும் பொது ரொம்ப பாவமாக உள்ளது, சும்மா காட்டு காட்டுன்னு காட்டுதூ வெய்யில்,
காட்டாதா பின்னே, இருக்குற வயல், மரம் எல்லாத்தையும் அழிசுட்டு காசுக்காக எல்லாத்தையும் வித்தா எப்படிங்க மழை வரும், எங்கே இருந்து காத்து வரும். இன்னும் கொஞ்சம் நாளில் தமிழகத்தில் அரிசி கிடைக்கிறதே அதிசயமா இருக்கும் பாருங்கள்.
மத்தபடி வழக்கம் போல நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றியது, விருந்துகள் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு இங்கே வந்தால்!!!!!!!!!!!!! அதே வேலை, அதே ஆட்கள் இவர்கள் போராடிக்கிறார்கள், ஆனால் அதே நண்பர்கள், அதே குடும்பத்தார்கள் என்றுமே போரடிப்பதில்லை.!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மீண்டும் போகும் வரை நினைவலைகளுடன்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக