OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 15 ஏப்ரல், 2013

உட்கார்ந்து யோசிச்சது!!!இந்த தலைப்பி கைய்யில் எடுத்து கொஞ்சம் நாள் ஆகிவிட்டது, சரி இனி மேலாவது கேப் விடாமா அடிக்கலாம்ன்னு பார்த்தா!!!!!!!!!!!!!!!!!! உட்காரக் கூட நேரமில்லை.... என்ன பன்றது எதையாவது எழுதணுமே!!!!!!!!!!!!!!!!

இந்த வலைப்பூவில் பதிவு போடுறவாங்க எல்லாம் பதிவை நல்ல எழுதுராங்களோ இல்லையோ தலைப்பை மட்டும் சும்மா கடுப்பேத்துரா மாதிரி வைக்கிறாங்க அப்படி பட்ட சில தலைப்புகளை முதலில் பார்க்கலாம்.

கோச்சடையானில் ரெண்டு ரஜினி (முதல்ல இருக்குற ஒரு ரஜினியை ஒழுங்கா நடிக்க வையுங்கடா??????)

நரியிடம் இருந்து பூனையைக் காப்பாத்திய நாய் (உங்ககிட்ட இருந்து எங்களை எல்லாம் யாரு காப்பாத்த போறாங்களோ)

வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் உள்ளதா (ஏன் இல்லைன்னா நீ அமெரிக்காகிட்டே இருந்து வாங்கிதரபோரியா??)

பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ?? (நீ பொறந்து மட்டும் என்ன பிரயோஜனம்)

விளையாட்டை விளையாட்டா பாருங்க (அப்பா நாங்க என்ன திருட்டாகவா பாக்குறோம் (நான் பிஎல் லை சொல்லலீங்கோ!!!!!!!))

ஸ்டாலின்: தமிழக பத்திரிகைகளுக்கு நம்மீது அன்பு! அட்டையில் போடுகிறாங்க (ஆமாம் நீங்க ஆட்டைய போடுறீங்க அவிய்ங்க அட்டையிலே போடுறாங்க)

ரஜினி, கமல் போன்ற கிழவர்கள் எல்லம் இளம் நடிகையுடன் ஜோடியாக நடிக்கும்போது ஸ்டாலின் இளைஞரணி தலைவராக நீட்டிக்க கூடாதா (No Country for Old Man)

தமிழ்ப் படம் பிடிக்கும்.. ஆனால் தமிழ்ப் பையனைக் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்! லட்சுமி மேனன் சிறப்பு (உங்க மலயாளி நாதாரி புத்தியை தெரியாதா?? இத நீங்க வேற சொல்லனுமா???)

கொசு கடியில் இருந்து தப்பிக்க... பவர் ஸ்டாரின் புதிய கண்டுபிடிப்பு... (டேய் உன்னோட கடியையை தாங்க முடியலை நீயெல்லாம் கொசுக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கிரியா???)

அடுத்து சில அறிவிப்புகள்

பொது இடங்களில் பெண்களை தரக் குறைவாக திட்டக் கூடாது - உயர்நீதி மன்ற நீதிபதி.

#
அப்போ எங்கேயாவது சந்து, பொந்துல வச்சித் திட்டலாமா யுவர் ஹானர்?!

பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்புப் பலகை
போவதும் இலவசம். வருவதும் இலவசம்
மாட்டிக் கொண்டால் உணவும் இலவசம்!
(
பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்காக எழுதப்பெற்றது)

மும்பையில் பிரபலமாக உள்ள beauty parlorல் உள்ள வாசகம்
இங்கேயிருந்து வெளியே செல்லும் பெண்ணைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள். அது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்!

மும்பை ஜூஹு பகுதியில் உள்ள சிகை அலங்காரக் கடையில் உள்ள வாசகம்
தலைவா, உங்கள் தலையை நம்பித்தான் எங்கள் வியாபாரம் உள்ளது!.

அடுத்து சில மொக்கைகள்:-
காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..

என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா???

 “கோல் கீப்பர் னா கோல் போடாமல் தடுக்கனும் - - அப்ப
விக்கெட் கீப்பர் னா?

என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் குழந்தையா இருந்தாலும் பிறக்கும் போது  டிரஸ் இல்லாமதான் பிறக்கும் .

கைபேசியில்  துவங்கிய 
நம்  காதல் - உன் அண்ணன் 
கை பேசியதால் 
முறிந்தது .

#
என்னா அடி ????

சில நக்கல்கள்:-
ஹலோ சூரியன் FM ஆ..??

வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன் பேசுறேன்..!!

சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??

என் பொண்டாட்டி என் கூட சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..

அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க..!!

நாம என்னைக்கு தத்துவம் சொல்லாம இருந்திருக்கோம்:-
1000, 2000 செலவு செஞ்சு ஊட்டி, கோடை அப்படின்னு ஊரு சுத்தினா TOUR அப்படிங்கிறாங்க.10 பைசா செலவில்லாமா ஊர் சுத்தினா தண்டச் சோறுன்னு சொல்றாங்க . (என்ன உலகமட இது.)

பொண்ணுங்க கிட்ட லவ்
பண்றியான்னு கேக்குறதும் கண்டக்டர்
கிட்ட சில்லறை கேக்குறதும் ஒன்னுதான் 

இருந்தாலும் இல்லைன்னு தான் சொல்லுவாங்க ..!!

கருத்துகள் இல்லை: