OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 15 அக்டோபர், 2012

தமீழக மக்களுக்கு தேவை மாற்றான் அல்ல மாற்றம்சமீபகாலமாய் பதிவு எழுதவென்பதில் ஆர்வமற்ருப் போயிருந்தேன். எதையும் ஆக்கபூர்வமாய் எழுதவேண்டும் இல்லையேல் அவ்வாறு எழுதுபவர்களின் பதிவுகளைப் படித்துவிட்டு நகர்ந்துவிடவேண்டும். பாம்புக்குப் பல் விளக்கிப் பார்க்கும் பதிவுகளை எழுதும் திறமையும் நோக்கமும் எனக்கில்லை. எனவே என் தளத்தை மூடிவிட்டு போய்விடலாம் என்று கூட யோசித்தேன்.  அதுதான் பதிவெழுதுவதில் இந்த கால இடைவெளி.

தற்போது என் திருப்திக்காகவேனும் எழுதவேண்டிய தேவையும், நிமித்தமும் இது தான். பொதுவாகவே இப்போதெல்லாம் மின்வெட்டு பிரச்சனையின் களம் பெரும்பாலும் எல்லை தாண்டி நகர்ந்துவிட்டது. இன்று பல சமூக வலைதளங்களிலும், முகநூல் பக்கங்களிலும் அதிகமாக கேலி செய்யப்படுவது, நம்ம நடிகர் விஜய், பவர் ஸ்டார், இந்திய கேப்டன் விஜயகாந்த் போன்றவர்களை மிஞ்ச்சிவிட்டது இந்த மின்வெட்டு காமெடிதான். அதனால் இந்த மின்சாரத்தை பற்றிகூட எனக்கு எழுத தோணவில்லை, அப்படியே நான் விலாவாரியாக விளக்கினாலும் அதில் அக்கறைகொண்டு படிக்கும் தேவை என்பது அருகிவிட்டது இந்த மின்வெட்டு விடயத்தில். சினிமா விமர்சனம் போன்ற பதிவு எழுதுவதும் எனக்கு உடந்தை இல்லாதது. இன்றைய தமீழக மக்களுக்கு தேவை மாற்றான் அல்ல மாற்றம், மாற்றம் என்பதுதான் என்றுமே மாறாத ஒன்று, சூரியசக்தி மின்சாரம் சரியானதாக அமையலாம்.

சிறிதுகாலம் திண்ணை என்கின்ற முகநூல் குழுமத்தில் எனது பொன்னான நேரங்களையும் மண்ணாக்கி கொண்டிருந்தேன், வீணடித்தேன், ஆனால் திண்ணை என்னை போட வெண்ணை என்று சொல்லிவிட்டார்கள், ஆனால் அவர்களுக்கோ தெரியவில்லை வெண்ணையை வைத்து என்ன என்னவெல்லாம் செய்யலாம் என்று!!!!!!!!!! சமீபமாக நடந்து முடிந்த இருபது ஓவர் உலககோப்பை கிரிக்கெட் பற்றி எழுத மனமில்லை, ஏன் என்றால் ஆயிரம் கணக்கில் இருக்கின்ற உலக நாடுகளில் வெறும் பத்து நாடே பங்கு பெருவதற்க்கு பேர் உலக கோப்பையா??? சில சமயம் இஸ்லாம் சம்பந்தப் பட்ட பதிவுகள் போட்டாலும், நண்பர்கள் தொல்லை தாங்க முடியவில்லை, நீ என்ன ஒழுங்கா என்று கேட்கிறார்கள்? ஒழுங்கா இருக்கிறவன் தான் பேசணும் என்றால் இந்த உலகத்தில் ஒருத்தனும் ஒழுங்கில்லை என்பதே சரியான வாதமாக இருக்கும் (எவனும் 100% ஒழுங்கில்லை என்பதே நிதர்சன உண்மை).இன்னும் சில பேர் இருக்கிறார்கள், இஸ்லாத்தில் இயக்கங்கள் வேண்டாம், என்று சொல்லுகின்றார்கள், ஆனால் அவர்களுக்கும் ஒரு நிர்வாகம், தலைமை, செயலாளர், பொருளாளர் போன்றவர்களை வைத்துள்ளார்கள் அப்ப இதற்க்கு பேர் என்ன??? இன்னும் சொல்லப்போனால் சமூக சேவைகளில் கூட இவர்களின் குழுமத்தின் பெயர் முன்னிருத்த படுகிறது!!!!!!!!!

விபத்துக்கள் குறித்து எழுதலாம் என்றால், பல பேர் பேஸ்ட் வாங்குவது போல போஸ்ட் அடிச்சு பீத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அது சரிப்பட்டு வராது என்று அதையும் விட்டுவிட்டேன். சரி வெளி நாட்டு வாழ்க்கையை பற்றி ஏதாவது யோசிப்பதற்க்குள், அதை குக்கராக்கி அடுப்பில் ஏற்றி சமைத்து இறக்கி விட்டார்கள்.


சரி டாஸ்மாக் பற்றி எழுதலாம் தான், என்ன பண்றது கள்ளசாரயம் வழக்கம் அதிகம் இருந்த பொழுதுகூட அதிகளவில் பாதிக்கப்படாத 15 முதல் 30 வயதுக்காரர்கள் இன்று மதுவுக்கு அடிமைகள். வாழ்க தமிழ் நாடு அரசாங்கம். உலகத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறக்கும் காலத்தில் ஐஸ்வர்யாவிர்க்கு பொறந்த ஒரே குழந்தையை ஃபோட்டோ எடுக்க முடியாமல் தவிக்கும் நம்ம ஊடகங்களை பார்த்தால் வடிவேல் வசனம்தான் நியாபகத்திர்க்கு வருகிறது (உங்களை எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு)

இப்படி பல சந்தற்பங்களில் நான் நினைப்பதை அடுத்தவர்கள் எழுதிவிடுகிறார்கள், அதன் தலைப்பை பார்த்தவுடனே புரிந்து விடுகிறது, ஆஹா படமே எடுக்களையே அதுக்குள்ள எப்படி திருட்டு விசிடி?????????????????.இருந்தாலும் சமீபத்திய சாதனைகள் (செய்திகள்) சில உங்கள் பார்வைக்கு

தமிழக ரவுடிகள் இருக்கும் இடம் எமக்கு தெரியும்” -போலீஸ் (அடிக்கடி போரவங்களுக்கு தான் தெரியும்)
பாலியல் வன்முறை... ஆஸி. பிரதமர் கருத்துக்கு 'ரேப்' கேஸில் சிக்கிய டைசன் ஆதரவு! (ஒரு வேலை இவரும் நம்ம ஊரு அரசியல்வாதிக்கிட்டே இருந்து கத்துகிட்டாரோ)
வைரத்தினாலான கிரகம் கண்டுபிடிப்பு (இப்பவாச்சும் தங்கம் விலை இறங்குமா??)
சூதாட்டத்தில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை விதிக்க வேண்டும் (வெளியேபோய்ட்டால் எண்ணவேணும்னாலும் சொல்லுவீங்கடா!!!!)

இப்போதைக்கு இவ்வளவுதான்......................... மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம், கருத்து எழுதுவதும், எழுதாமல் போவதும் உங்கள் உரிமை. அதில் தலை இட நான் விரும்பவில்லை. 

2 கருத்துகள்:

அஜீம்பாஷா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,
யாரைப்பற்றியும் கவலைபடாதிர்கள் நீங்கள் உங்களுக்கு பிடித்த அல்லது பாதித்த விஷயங்களை தைரியமாக எழுதுங்கள், மற்றவர் பதிவுகளில் பின்னூட்டம் இட்டு விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள், நான் உங்கள் எழுத்தின் ரசிகன், நீங்கள் என் தாய் பிறந்த பரங்கிபேட்டையின் மைந்தன் அல்லவா,நானும் பரங்கிப்பேட்டையில் நான்கு வருடம் தங்கி படித்துள்ளேன்.
தயவு செய்து உங்கள் பதிவிடும் பழக்கத்தை நிறுத்தாதிர்கள்.

அஜீம்பாஷா சொன்னது…

சகோதரரே உங்கள் பதிவுகளின் ரசிகன் நான், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை தைரியமாக எழுதுங்கள், என் உம்மாவுக்கு சொந்த ஊரு பரங்கிபேட்டை, நானும் நான்கு பரங்கிபேட்டையில் தங்கி படித்துள்ளேன்.
அந்த உங்களைப்பார்த்து பெருமைபடுகிறேன்.