இன்றைய காலத்தில் ஒரு பொருளை நீங்க
விற்க்கவேண்டுமென்றால் அதற்க்கு ஒரு மிக பெரிய விளம்பரம் செய்யவேண்டும். அப்படி செய்யப்படும் விளம்பரம் மக்களிடையே
பிரபலமானால்தான் நமக்கு லாபம் கிடைக்கும். ஆனால் அந்த
விளம்பரம் என்ற உடன் அந்த சமயத்தில் தான் விளம்பர கன்சல்டண்ட்ன்னு
சொல்லி ஒருத்தன்
வருவான் (ஆஹா நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டாண்டா!!!) அப்படின்னு சொல்லி ஒரு தொகையை ஆட்டையை போட்டுடுவான். சரி நாம விஸ்யாதுக்கு வருவோம்.
இப்படி
ஒளிபரப்ப படுகின்ற விளம்பரங்கள் மக்களின் இப்படி எடுக்கிற விளம்பரம்
மக்கள்ட்ட சென்றடையனும்கிறதுதான் முக்கியம், அதுல
பெருசா சமூக அக்கறை உள்ள விஷயமா கொண்டு போய் சேர்க்கனும்கிறதுல்லாம்
முக்கியமில்லை. சரி அதெப்படி அவன் காசு போட்டு எடுக்கிற விளம்பரத்துல சமூக கருத்தை
சொல்லனும்னு நீங்கள் எதிர்ப்பார்க்கிறீங்கன்னு கேட்கலாம். அட சமூக கருத்தை சொல்ல
வேண்டாம்பா, சமூகமே கூச்சப்படும் அளவுக்காவது விளம்பரங்கள்
இல்லாமல் இருந்தா அதுவே சமூக சேவை மாதிரிதான்.