OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

அமீரகதில் கிரிக்கெட் பார்த்த அனுபவங்கள்!!!!!


எனக்கு ரொம்ப நாளாவே ஒரு முறையாவது எதாவ்து பெரிய நாடுகள் கிரிக்கெட் விளையாடுவதை நேரடியாக ஸ்டேடியதில் பார்க்கவேண்டும் ஆசை. அந்த ஆசை நேத்துதாங்க நிறைவேறியது.

நேத்து நடந்த இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியை கண்டுகளித்தோம், மொத்தம் நான்கு ஒரு நாள் கொண்ட போட்டிதொடரில் மூன்று போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது, இதில் அந்த அணியின் தலைவர் குக் அவர்கள் இந்த மூன்று போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு இந்த தொடரை வென்றுள்ளார்.

சரி இனி நம்ம கதைக்கு வருவோம், நாங்க நண்பர்கள் மொத்தம் ஐய்ந்து பேர் சேர்ந்து போனோம்  (காசி குடுத்தான்னு கேட்காதீங்க, டிக்கெட் மட்டும்தான் ஓசி, ஓசின்னு சொல்லுவதை விட அதை அன்பளிப்பு என்றுதான் கூறவேண்டும் அப்படிதான் அதில் முத்திரை இருந்தது (complementary) மத்தபடி வழிசெலவுகள் அனைத்தும் நாங்க சேர் பண்ணிக்கிட்டோம்), போட்டி ஆர்ரம்பித்தது என்னமோ மதியம் மூன்று மணிக்குத்தான் ஆனால் நாங்கள் அங்கு செல்லிம்போது மணி ஐய்ந்து, அப்பொழுது அங்கே பாகிஸ்தான் அணியினர் முப்பது ஓவர்களை கடந்திருந்தார்கள் என்பதைவிட கடந்து திணறிக்கொண்டிருந்தார்கள், ஏதோ அப்ரிடி, உமர் அக்மல் மற்றும் உமர் குல் புண்ணியத்தில் ஒரு மரியாதையான ஓட்டங்களை அடைந்தார்கள் (222) அப்படி இருந்தும் தோல்விய மிகசுலபமாக அடைந்தார்கள்.

விளையாட்டு அரங்கில் நுழையும் முன்னரே அங்கே கேட்டில் இருந்த காவலாளிகள் ரசிகர்களிடம்  உள்ள சிகரெட், லைட்டர் மற்றும் எதேனும் உணவு பொருட்கள் அணைதையும் வாங்கி கொண்டார்கள், இதுவே நம்ம இந்தியாவாக இருந்தால் அவ்வளவுதான், இருக்கிற அத்தனை பாட்டில்களும் கிரவுண்டில் தான் கிடக்கும், அதே போன்று அங்கு வந்த ரசிகர்கள் எந்த ஒரு வீரரையும் திட்டவில்லை, மாறாக உற்சாகபடுதினார்கள், பார்பதற்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இதில் என்ன ஒரு சந்தோசம்னு கேட்குறீங்களா? என்னதான் டிவியிலே விளையாட்டை பார்த்து ரசித்தாலும் ஒரு உலக அளவில் புகழ் பெற்ற வீரரை நேரில் பார்ப்பது உண்மையிலேயே ஒரு மன எழுச்சிதாங்க (அதாங்க excitement).

உண்மையா சொல்லனும்னா இவ்வளவு கூட்டதிற்க்கு நடுவே எந்த ஒரு அச்சமுமில்லாமல், கூச்சமுமில்லாமல் விளையாடுகின்றார்கள் என்றாள் கண்டிப்பாக அவர்களை பாராட்டியே ஆகணும். எத்தனை பேர் எத்தனை விதமாக கோஷங்கள் எழுப்பினாலும். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டு தண் அணி வெல்லவேண்டும் என்றே ஒரே குறிக்கோள் மட்டும் வைத்து விளையாடுகிறார்கள்!!!! (காசுக்காகதான் விளையாடுகிறார்கள், அதற்க்கும் ஒரு துணிச்சல் வேண்டும்).

நான் குறிப்பாக இந்த போட்டிக்கு போனதற்க்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது, எனக்கு பாகிஸ்தான் அணியில் அப்ரிடியின் ஆட்டம் ரொம்ப பிடிக்கும், என்னதான் அவர் எதிரி நாடாக இருந்தாலும், அவர் களத்திற்கு வந்தாலே அனைவரும் கரகோஷம் எழுப்புவார்கள், அவரை பிடிக்காதவர்கள் இந்தியாவில் கூட இருக்க மாட்டார்கள் (ஒரு சில விளையாட்டை விளையாட்டாய் பார்க்காத ரசிகர்களை தவிர).

ஆனா பாருங்கள் என்னதான் நேரில் சென்று பார்த்தாலும், நாம டிவியிலே பார்க்குர மாதிரி இல்லை, நீங்கள் ஒரு நிமிஷம் அப்படின்னு திரும்பினாலும் அந்த நேரதில்தான் பயபுல்லைவோ சிக்ஸ், பொருன்னு அடிக்கிறாங்க................... !!!!!!

இங்கு கீழே சில புகைப்படங்கள் (நான், நண்பர்கள் மற்றும் வீரர்கள்) நானே என்னுடைய கேமெராவில் பிடித்து உங்கள் பார்வைக்கு, கொஞ்சம் குவாலிட்டி குறைவுதான் என்ன செய்வது, அதான் என்னால் முடிந்தது...............
















 கண்டிப்பாக நேரில் பாற்பதில் ஒரு விஷயம் உங்களுக்கு புரியும், அங்கு எந்த அணி நன்றாக விளையாடுகிறது அந்த அனிதான் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரு உணர்வு வருவதை நம்மால் கட்டுபடுத்த முடியவில்லை..................!!!!!!!!!!!!!!!!!!!!

நன்றி நமக்கு டிக்கெட் குடுத்த நண்பர்!!!!!!!!!!!!!!!!!!!!!! (கண்டிப்பாக அவர் நமது புகைப்படத்தில் இல்லை)
   

கருத்துகள் இல்லை: