OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 1 பிப்ரவரி, 2012

டெல்லி:சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளர்களிடம் போலீஸ் கொள்ளையடிப்பது 360 கோடி.



280917-rickshaw-in-delhi
புதுடெல்லி:நெரிசல் மிகுந்த தாயகத்தின் தலைநகராம் டெல்லியில் குளிரையும், வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் குறைந்த வாடகையில் பயணிகளை அவர்களின் செல்ல விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்ல இரத்தத்தை வியர்வையாக மாற்றும் சைக்கிள் தொழிலாளிகளுக்கு வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் சிரமம்தான்.
பிச்சைப் பாத்திரத்தில் உள்ள காசை தட்டிப்பறிப்பது போல லஞ்சபேர் வழிகளான போலீசாரின் தொல்லை இவர்களின் வாழ்க்கையை மேலும் சிரமத்தில் ஆழ்த்துகிறது. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 360 கோடி ரூபாயை கையூட்டு போலீசார் ரிக்‌ஷா தொழிலாளர்களிடம் இருந்து கொள்ளையடிப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது.
1940 களில் கைவண்டிக்கு பதிலாக சைக்கிள் ரிக்‌ஷாக்கள் அறிமுகபடுத்தப்பட்ட வேளையில் பெரியதொரு தொழில்நுட்ப முன்னேற்றமாக டெல்லி வாசிகள் மகிழ்ந்தனர். 60 களில் சைக்கிள் ரிக்‌ஷாக்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது. தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் சர்வீஸ் நடத்துவதாக டெல்லி மாநகராட்சி கூறுகிறது. ஆனால், நகர வீதிகளின் நெரிசலின் ஊடே 6 லட்சத்திற்கும் அதிகமான ரிக்‌ஷாக்கள் பயணிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு கொண்டு சேர்க்கும் ரிக்‌ஷா தொழிலாளர்களை போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர்.
காண்பவர்களின் உள்ளத்தை உருக்கும் வகையில் சைக்கிள் ரிக்‌ஷாக்களை வியர்வை வழிய ஓட்டிச் செல்லும் இவர்களை பிழிவதற்காக அசாத்தியமான சட்டங்களை பிரயோகிப்பது போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் சூழ்ச்சியாகும்.
உதாரணமாக 99 ஆயிரம் சைக்கிள் ரிக்‌ஷாக்களுக்கு மட்டுமே அனுமதி என்பது மாநகராட்சியின் தீர்மானமாகும். இதனால் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரிக்‌ஷாக்கள் சட்டவிரோதமானது ஆகும். இதைவிட போலீஸ்காரர்களுக்கு கொள்ளையடிப்பதற்கான வேறு வழி தேவையா? தனக்கு சொந்தமான ரிக்‌ஷாவை மட்டுமே ஓட்டவேண்டும் என்பது மற்றொரு சட்டம். அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட ரிக்‌ஷாக்களை ஒருவர் சொந்தமாக வைத்துக்கொள்ளக் கூடாது. தனக்கு சொந்தமான ரிக்‌ஷாவை வேறு எவரிடமும் கொடுத்து ஓட்டவும் கூடாது. முதலாளிகளின் சுரண்டல்களில் இருந்து தொழிலாளர்களை பாதுகாப்பதே இச்சட்டத்தின் நோக்கம் என அதிகாரிகள் கூறினாலும், 95 சதவீத ரிக்‌ஷா தொழிலாளர்களும் சொந்தமாக ரிக்‌ஷா வைத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியில்லாத ஏழை குடியேற்ற வாசிகள் ஆவர்.
சட்டவிரோதமாக ரிக்‌ஷா ஓட்டும் இவர்களிடமிருந்து விருப்பம் போல லஞ்சம் வாங்கலாம். பெரும்பாலும் ரிக்‌ஷாக்களை தங்களிடமிருந்து போலீஸார் கைப்பற்றி, கடுமையாக கொடுமைப்படுத்துவதாகவும் கீதா காலனியில் ரிக்‌ஷா ஓட்டும் ராஜேஷ்வர் கூறுகிறார்.
காலை முதல் மாலை வரை ரிக்‌ஷாவை ஓட்டினால் ஒரு நாளைக்கு 300-350 ரூபாய் வசூலாகும். அதில் 60 சதவீதம் ரிக்‌ஷா முதலாளிகளுக்கு செல்லும். உணவு மற்றும் இதர செலவுகளுக்கு 100 ரூபாய் ஆகும். வீட்டிற்கு பணம் அனுப்பி வட்டிக்காரர்களிடம் இருந்து பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திரும்ப அடைக்கவேண்டும். இதனிடையே போலீஸ்காரர்களுக்கு லஞ்சம் வேறு. குடியரசு தினத்தை கோலகலமாக கொண்டாடிய நமது தலைநகரில் அப்பாவி ரிக்‌ஷா தொழிலாளர்களின் அவலநிலையை யார் கண்டு கொள்கிறார்கள்?
source:thoothuonline.

கருத்துகள் இல்லை: