OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 12 டிசம்பர், 2012

இன்றுடன் இரண்டு முடிந்தது:-


நான் பிளாக் எழுத ஆரம்பித்து இன்றுடன் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன, இந்த இரண்டு வருடங்களில் எனக்கு கிடைத்த இந்த 27,337 பார்வையாளர்கள் குறைவுதான் என்றாலும், எனக்கு நிறைவாகவே உள்ளது. இந்த இரண்டு வருடத்தில் நான் எழுதிய பதிவுகள் மொத்தம் 388, இதையும் சேர்த்து 389. இதில் அதிகமாக 71 பதிவுகள் சமுதாய சிந்தனை என்ற தலைப்பில்தான் எழுதியுள்ளேன், அதற்க்கு பிறகு பார்த்தால் 58 பதிவுகள் சிந்திப்பதற்க்கு என்கின்ற தலைப்பில் எழுதியுள்ளேன், ஆனால் இதுவரை யாரு சிந்திததாக தெரியவில்லை.


இந்த 388 பதிவுகளுக்காக ஆதரவாகவும், எதிர்மறையாகவும் வந்த கருத்துக்கள் மொத்தம் 197. இந்த 197 கருத்துக்களில் ஒரு கருத்துக் கூட என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து வரவில்லை, கருத்துக் கூட சொல்ல பயப்படும் இந்த நண்பர்களை நினைத்தால் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.

வியாழன், 6 டிசம்பர், 2012

வரலாற்றில் கொஞ்சம் கூட உண்மைய காணோம்.



 
வார்த்தைக்கு வார்த்தை பாய் பாய் என்று சொன்ன காலங்கள் போய் இன்று.....
நிமிடத்திற்க்கு ஒரு முறை அப்பாவி முஸ்லீம்களை பார்த்து தீவிரவாதி, தீவிரவாதி என்று சொல்லி சொல்லியே பழகிய மக்கள், உண்மையான தீவிரவாதிகளுடன் தினம் தினம் வாழ்க்கை சக்கரத்தை ஒட்டி கொண்டிருக்கின்றனர். ஆம்.

முஸ்லிம்களின் வனகஸ்தலமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன, அன்று அதை இடித்தவர்கள் தீவிரவாதிகளா? இல்லை அதனை பறிகொடுத்த அப்பாவிகள் தீவிரவாதிகளா? குஜராத்தில் ஒரு இனமே கூண்டோடு அழிக்கப்பட்டதே, அதை செய்தவர்கள் தீவிரவாதிகளா? இல்லை அழிந்து போன இனம் தீவிரவாத இனமா?