OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஆட்டை பார்த்து ஓநாய் அழுததாம்


ஒரு மலாலா என்கின்ற சிறுமியை பாகிஸ்த்தானில் தாலிபான் ஆதரவாளர்களால் சுடப்பட்டப்போது உலகம் முழுவதும் ஒரே மாதிரியான கூக்குரல். கண்ணீர் கதறல்கள். லண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை. சிகிச்சை முடிந்து துபாய்க்கு சுற்று பயணம். ஒரு 13 வயது சிறுமியை தாக்கிய தீவிரவாதிகள் தாலிபான்கள் மனித நேயம் இல்லாதவர்கள். மேலும் ஐய்க்கிய நாட்டு சபைக்கு வந்தது கோபம். அதர்க்காக குழந்தைகள் தினம் மலாலா தினமாக உலகம் முழுபதும் கொண்டாட்டம். வேண்டியதுதான்.



ஆனால் இஸ்ரேலிய பயங்கரவாதிலால் 53 பிஞ்சு குழந்தைகள் குண்டு வீசி தாக்கி மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். பார்ப்போரின் நெஞ்சம் பதறுகிறது. ஆனால் இவர்கள் தீவிரவாதிகள் இல்லை இந்த கோழைகளின் பார்வையில். ஒரு சிறுமிக்காக கண்ணீர் வடித்தவர்கள் யாரும் பிஞ்சு குழந்தைகளின் கொடூர கொலையை கண்டுக் கொல்லவில்லை. மலாலா தினம் கொண்டாடிய ஐய்க்கிய நாட்டு சங்கத்தின் வாயில் புண் ஏற்பட்டுவிட்டது. அவர்களால் பேச இயலவில்லை என்ன செய்வார்கள். இது தான் இவர்களின் மனித நேயம், தரங்கெட்டவர்கள். மனித நேயத்தை பற்றி பேசுகின்றார்கள்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

முஸ்லிம்களில் மட்டும்தான் இருக்கிறார்களா?.


 
கிட்டதட்ட உலகத்தில் உள்ள அனைத்து மொழி திரைபடங்களிலும் முஸ்லிமைதான் ஒரு சமுதாய விரோத போக்கு உள்ள ஆளாகவும், அப்பாவி மக்களை அன்றாடம் கொலை செய்யும் ஒரு தீவிரவாதியாகவும், சித்தரிக்கின்றார்கள், இது இன்று நேற்றில்லை, சினிமா உருவானதில் இருந்து நடைபெற்று வருகின்றது.



ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல. முஸ்லிம்களில் இது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கின்ற உங்களின் வாதங்களை நான் மறுக்கவில்லை. இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் முஸ்லிம்களில் மட்டும்தான் இருக்கிறார்களா?.

மேலும் எக்காலத்திலும் சினிமாக்களில் ஒரு தரப்பு நியாயத்தையும் அதை தட்டிக்கேக்குற ஹீரோவையும் மட்டுமே காட்டி படத்தை ஹிட் பண்ணிடுறாங்க. இதுல இவிங்க தீவிரவாதியா காண்பிக்கிறவனை வெறுமனே ஒரு சாதாரண மனிதனாக காட்டாமல் அவனை ஒரு மதத்தின் போர்வையில் அதுவும் முஸ்லிமகத்தான் காட்டி காசுபார்க்கின்றன, இந்த காவி இந்தியாவில்.

ஆனா...குறைந்தது வெளிநாட்டு தீவிரவாதிகள்னு சொல்லி இருக்கலாம். இதுவரை இந்தியாவில் நடைபெற்ற குன்‌டுவெடிப்பில், 1992 ஆம் ஆண்டு மும்பையிலும், மற்றும் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு இந்த இரண்டை தவிர மற்ற அனைத்தும் முஸ்லிமல்லாதவர்கள்தான் செய்தார்கள் என்று கர்கரே அவர்கள் நிரூபித்தார். ஆனால் இன்றைய தமிழ் சினிமாக்கலும், ஊடகங்களும் சேர்ந்து இந்தியாவில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு முஸ்லீம்தான் காரணமா இருக்க முடியும் என்கின்ற ஒரு கொடிய விஷத்தை இந்தியர்கள் (தமிழர்கள்) மீது திணித்துக்கொண்டுள்ளார்கள்.