சமீபகாலமாய் பதிவு எழுதவென்பதில் ஆர்வமற்ருப் போயிருந்தேன். எதையும்
ஆக்கபூர்வமாய் எழுதவேண்டும் இல்லையேல் அவ்வாறு எழுதுபவர்களின் பதிவுகளைப்
படித்துவிட்டு நகர்ந்துவிடவேண்டும். பாம்புக்குப் பல் விளக்கிப் பார்க்கும்
பதிவுகளை எழுதும் திறமையும் நோக்கமும் எனக்கில்லை. எனவே என் தளத்தை மூடிவிட்டு
போய்விடலாம் என்று கூட யோசித்தேன். அதுதான் பதிவெழுதுவதில் இந்த கால இடைவெளி.
தற்போது என் திருப்திக்காகவேனும் எழுதவேண்டிய தேவையும், நிமித்தமும் இது தான். பொதுவாகவே
இப்போதெல்லாம் மின்வெட்டு
பிரச்சனையின் களம்
பெரும்பாலும் எல்லை
தாண்டி
நகர்ந்துவிட்டது. இன்று
பல சமூக வலைதளங்களிலும், முகநூல் பக்கங்களிலும் அதிகமாக கேலி செய்யப்படுவது,
நம்ம நடிகர் விஜய், பவர் ஸ்டார், இந்திய
கேப்டன் விஜயகாந்த் போன்றவர்களை மிஞ்ச்சிவிட்டது இந்த மின்வெட்டு காமெடிதான். அதனால்
இந்த மின்சாரத்தை பற்றிகூட எனக்கு எழுத தோணவில்லை, அப்படியே நான் விலாவாரியாக விளக்கினாலும் அதில்
அக்கறைகொண்டு படிக்கும் தேவை என்பது அருகிவிட்டது இந்த மின்வெட்டு விடயத்தில்.