OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 13 அக்டோபர், 2014

இஸ்லாமும் தீவிரவாதமும்

எனது மாற்று மத சகோதரர்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.

இன்றைய காலக்கட்டத்தில் உலகின் அனைத்து செய்திதொடர்பு நிறுவனங்களாலும் பரப்பபட்டு வரும் ஒரு செய்தி இஸ்லாமிய தீவிரவாதம்இவர்களின் செய்திகளில் எது இருக்கிறதோ இல்லையோ இது கண்டிப்பாக ஒரு வரியாவது இருக்கும். ஒரு செய்தியை திரும்ப திரும்ப சொன்னால் அது சாதாரண மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிடும் என்பதுதான் நிதர்சன உண்மை, உதாரணம், விளம்பரங்கள்,திரைப்பட முன்னோட்டங்கள் போன்றவை. உலகில் உள்ள இஸ்லாமிய எதிராளிகளின் இஸ்லாமிய தீவிரவாத விளம்பரதாரர்கள் இந்த பத்திரிகையாளர்கள். இவர்களுக்கு தேவை பணம், மற்றும் இவர்களின் செய்திதாள்களின் விற்பனை அதற்க்கு இவர்கள் என்னவேண்டுமென்றாலும் செய்வார்கள்...!!!!!!!!!    

இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுபாடுதல் என்பது பொருள், இது ஸலாம் என்ற வார்த்தையில் இருந்து வந்தது ஸலாம் என்றால் அமைதி அடைதல் என்பது இதன் பொருள். ஆகவேதான் இஸ்லாமியர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கும் பொது அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக) என்று கூறுகின்றனர். இந்த வார்த்தையை யார் யாரிடம் வேண்டுமென்றாலும் கூறலாம்,அனைத்து நேரத்திலும் கூறலாம். பெயரடிப்படையில் இஸ்லாம் இஸ்லாம் பயங்கரவாததிர்க்கு அப்பாற்ப்பட்டது என்பதை விளங்கலாம்.

இஸ்லாத்தில் சிறந்த செயல் எதுஎன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதிலைப் பாருங்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எதுஎனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும்,நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள். - நூல்: புகாரி 12.
நன்றாக கவனியுங்கள் இங்கு முஸ்லிம்களுக்கு மட்டும் என்றில்லை பசித்தோருக்கு,அறிந்தவருக்கும் அறியாதவர்களுக்கும். மேலும் 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கüலிருந்து) மன்னிப்பு வழங்கினான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - நூல்: புகாரி 2472, மேலும் இந்த உலகில் ஒரு மனிதனை அநியாயமாக ஒருத்தன் கொலை செய்தால் அவன் மொத்த மனித சமுதாயத்தையும் கொலை செய்தவனாவான், மேலும் ஒரு மனிதனை காப்பாற்றினால் அவன் மொத்த மனித சமுதாயத்தையும் காத்தவன் ஆவான் – 5:32 அல் குர்ஆன்.
ஆக ஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாகஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இஸ்லாமிய போதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த அளவுக்கு இஸ்லாம் தெளிவாகக் கூறியிருந்தும்இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம்முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் எதிராகபொது இடங்களிலும் மக்கள் கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் மனிதர்களே அல்ல அவர்கள் எப்படி இஸ்லாமியர்களாக இருக்க முடியும்?
தீவிரவாதம் எனப்படுவது அச்சமூட்டும் வன்முறை நடவடிக்கை. தீவிரவாதம் மென்பயங்கரவாதத்தின் குழந்தையாகும். மென் பயங்கரவாதம் அதிகரிக்கும் போது அதை எதிர் கொள்ள வேறு வழியின்றி நாடும் செயல். ஆக இப்படிப்பட்ட செயல் உலகில் அனைத்து மததவர்களிடமும் உண்டு ஆனால் இங்கு இந்த சாயம் இஸ்லாத்திர்க்கு மட்டுமே பூசப்படுகின்றது உண்மையை சொன்னால் உலகில் அதிகம் பாதிக்கப்படுவது, கொல்லப்பட்டது இஸ்லாமியர்கள்தான், உதாரணம், ஈராக்,பாலேஸ்தீன், லெபனான், ஆப்கானிஸ்தான்,லிபியா, போஸ்னியா, சிரியா இன்னும் உலகில் பல நாடுகளில்.  

மேலும் ஒரு சில மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாம் காஃபிர்களை கொல்ல சொல்கின்றது என்ற வசனத்தை (வரியை) மட்டுமே எடுத்துக்கூறி இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்கின்றனர் ஒரு விஷயம் புரிந்துக்கொள்ள வேண்டும் அந்த வசனங்கள் எல்லாம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் போர்கள் நடந்த சமயத்தில் இறக்கப்பட்ட வசனங்கள் போரில் எதிராளியை கொள்ளத்தான் சொல்வார்கள் எந்த அரசாங்கமும் அன்றைய காலத்தில் நபி (ஸல்) அவர்களின் எதிரிகள் இந்த காஃபிர்கள் (இறைமறுப்பாளர்கள்). 

உல்கைல் பொதுவாக ஒரு பழமொழி உண்டு ஒரு பானை சொத்துக்கு ஒரு சோறு படம் என்று ஆனால் உண்மை அதுவல்ல ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திர்க்கும் நீங்கள் ஒரு சிலரை பார்த்து முடிவுசெய்தால் அது முற்றிலும் தவறான கன்னூட்டம். உங்க நெஞ்சில் கைவைத்து படைத்தவனுக்கு அஞ்சி சொல்லுங்க உங்ககளுக்கு அருகில் இருக்கும் இஸ்லாமியர் தீவிரவாதியா, உங்களுடன் அன்பாக பழகும் பக்கத்துவீட்டு இஸ்லாமியர் தீவிரவாதியா??நாங்க ஹிந்துக்கள் அனைவரையும் பாசிச வெறியர்கள் என்று என்றைக்கும் சொன்னது கிடையாது..!!!!!!!!!!!!! நான் பழகிய பெருபாலன ஹிந்துக்கள், மற்றும் எனது ஹிந்து நண்பர்கள் அனைவரும் அன்பானவர்கள், அமைதியை விரும்புபவர்கள்...!!!!!!!!!!!!!

உங்களுக்கு இதுக்குறித்து ஏதேனும் சந்தேகமிருந்தால் கேட்க்கலாம்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//“இந்த உலகில் ஒரு மனிதனை அநியாயமாக ஒருத்தன் கொலை செய்தால் அவன் மொத்த மனித சமுதாயத்தையும் கொலை செய்தவனாவான், மேலும் ஒரு மனிதனை காப்பாற்றினால் அவன் மொத்த மனித சமுதாயத்தையும் காத்தவன் ஆவான்” – 5:32 அல் குர்ஆன்// மிக நல்ல குரான் வசனம். இதை ISIL வாதிகளிடம் அனுப்பி அவர்களின் சமாதானத்தையும் செய்யவும்.

//உலகில் அதிகம் பாதிக்கப்படுவது, கொல்லப்பட்டது இஸ்லாமியர்கள்தான்”// விடப்பட்ட உதாரணங்கள் : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக், நைஜீரியா. ஒன்று இங்கெல்லாம் கொல்லப்படுபவர்கள் இஸ்லாமியர்கள்; சமாதான மார்க்க இஸ்லாமியர்களே!

பெயரில்லா சொன்னது…

கொல்லுபவர்களும் சமாதான மார்க்க இஸ்லாமியர்களே!

Unknown சொன்னது…

நீங்க பெயரில்லாமல் சொல்லாமல் பெயரோடே சொல்லியிருக்கலாம் சந்தோஷம்.
என்னுடைய பதிவை முழுவதும் நன்றாக படியுங்கள் புரியும்.
ஒருவனை கொன்றால் அவன் மனிதனாகவே இருக்க முடியாதெனில் அவன் எப்படி இஸ்லாமியனாக முடியும்? அப்படியே உங்க வாதப்படி வைத்துக்கொண்டாலும் என்னுடைய பதிவின் கடைசி பாராவை படியுங்கள் புரியும்..!!!!!!!!!!!