OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 19 பிப்ரவரி, 2014

அன்னை தேசம் - இது வேற மாதிரி..!!!!!

யோசிங்க யோசிங்க, வித்தியாசமா ஏதாவது யோசிங்க ஆனா யோசிக்கிற அனைத்தையும் நம்பிடாதீங்க, யோசிச்சு பாருங்க நான் சொன்னது உண்மைனு புரியும். 

இதை ஏன் சொல்றென்னா கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் அப்படின்னு இந்திய அரசியல் சாசநானும் சொல்கிறது ஆனா பாருங்க எந்த ஒரு அரசனும் தீரவிசாரித்து தீர்பளித்தாக சரித்திரமே இல்லை. முல்லைக்கு தேர் குடுத்தான் பாரி என்பார்கள் பயபுல்லை எவ்வளவு முட்டாளாக இருந்திருப்பான் காட்டுல இறைவன் நாட்டப்படி அந்த கொடி எப்படியும் படர்ந்துவிடும் இவன் அங்கே தேவையில்லாமல் தேர குடுத்தாதற்க்கு மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாம். இப்படி முட்டாள் கதைகளை சொல்லி சொல்லியே நாம் அன்னைதேசத்தை குட்டிசுவராக்கி வைத்துள்ளார்கள் வரலாற்று வல்லுனர்கள். 

இன்று காலை முகநூலில் ஒரு வீடியோ அதில் ராஜ் டிவி நிகழ்ச்சி பட்டிமன்றம் என்று நினைக்கிறேன் அதில் ஒரு பெண் நம் அன்னைதேசத்தை பத்தி மிக அழகாக பேசினார் பாராட்டுக்கள் அதில் இருந்து சில வரிகள். 

  1. தமிழக விவசாயி தண்ணீர்கேட்டால் ஒரு அமைச்சர் சொல்கிறார் விவசாயிகள் எல்லாம் சேர்ந்து மூத்திரம் பெய்தால் கிடைக்கும் என்று. 
  2. அடுத்து மீனவர்கள், மீன்கள் தரையில் வந்தால் செத்துவிடும் இது வீதி, மீனவர்கள் கடலுக்குள் போனால் சாவார்கள் இது யாரோ செய்த சதி. 
  3. படிச்சவன் பாடம் நடத்துகிறான், படிக்காதவன் பாடசாலைகள் நடத்துகிறான். 
  4. வெளிநாட்டில் வேலை செய்தால் பணம் கிடைக்கும் அன்னை தேசத்தில் பணம் குடுத்தால் தான் வேலையே கிடைக்கும். 
இப்படி அந்த பெண் பேசிய அத்தனைக்கும் நம் அன்னைத்தேசம் வெண்ணைதேசமாய்....!!!!!!!!!!!!! அவள் அந்த பட்டிமன்றத்தில் வெற்றிபெற பேசுகிறாள் என்று எதிர்வாதிகள் சொன்னாலும் அவள் பேசினது அத்தனையும் நிதர்சன உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது. 


நேற்றை செய்தி ராஜீவ் கொலை வழக்கில் மூன்று பேருக்கு தூக்குதண்டனை ரத்து ரொம்ப சந்தோஷம் (அவர்கள் நிரபராதிகளாக இருந்தால்), ஆனால் அவர்கள் குற்றவாளியாக இருந்தால் இவர்களின் மதசாற்பை என்னவென்று சொல்வது குற்றமே நிரூபிக்க படாத அப்சல் குருவை அநியாயமாக அவசர அவசர மாக தூக்கிலிட்டார்களே இனி யாரும் சொல்லிடாதீங்க இந்தியா மதசார்பற்ற நாடென்று அப்புறம் அசிங்க அசிங்கமா திட்டிடுவேன்...!!!!!!!!!!!!!

மேலும் இந்த மூவரின் தூக்கை ரத்து செய்ததர்க்காக பல இஸ்லாமிய அமைப்புகள் கொதிக்கின்றனர் நியாயமே...!!! அப்சல் குருவை ஏன் தூக்கிலிட்டீர்கள் என்று கூச்சலிடுங்கள் அது நியாயம் ஆனால் இவர்களை ஏன் இடவில்லை என்று கேட்டு கூச்சலிடுவது எந்த வகையில் நியாயம் யாருக்குத்தெரியும் இவர்கள்தான் குற்றவாளிகள் என்று.....!!!!!!!!!!!! 

இதற்க்கு பதிலாக தமிழக சிறைகளில் பல்லாயிரம் கணக்கில் இஸ்லாமியர்கள் அந்த ஒரு தவறும் செய்யாமல் கிடக்கிறார்கள் அதுக்கு ஒரு சிறை நிறுப்பும் போராட்டம் செய்ய எந்த ஒரு அமைப்பும் முன் வரவில்லையே!!!!


என்ன இப்ப திரும்பவும் முதல் பாராவை படிங்க....!!!!!!!!!!! 
# என்ன நான் சொல்றது...!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை: