OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 29 ஜனவரி, 2014

இதாங்க உண்மை.


இதாங்க உண்மை.

இந்த உலகத்துல எல்லோருமே அடுத்தவங்க செய்வதை தப்புனு சொல்லுவாங்க ஆனா அவர்கள் செய்தால் சரி காண்பார்கள். இதற்க்கு யாரும் விதிவிலக்கல்ல.

ஹிட்லர் செய்தது கொடுமை என்று சொல்லும் அதே ஊடகம்தான் அமெரிக்கா செய்வதை சரி என்கிறது. சதாம் செய்தது பாவ செயல் என்றுக்கூறிக்கொண்டே அந்நாட்டு மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா. ஒசாமா ஒரு தீவிரவாதி என்று சொல்லிக்கொண்டே ஓவேரா தீவிரவாத செயல் செய்தது இந்தே அமெரிக்கா.

மூணு பேர் வந்தால் மூன்று லட்சம் என்று எழுதும் இந்த ஊடகங்கள் நேற்றைய இஸ்லாமியர்களின் போராட்டத்தை பற்றி ஒன்றுமே சொல்லாதது ஒன்றும் வியப்பில்லை மீண்டும் நிரூபித்துள்ளனர் நாங்கள் விபச்சாரிக்குத்தான் வரிந்துக்கட்டிக்கொண்டு எழுதுவோம் என்று.

அடுத்தவன் கூட படுத்து எழுந்திருக்கும் சினிமாக்காரகளுக்கு பெரிய பெரிய விருதுகள். ஆனால் அடுத்தவன் பசியை போக்கும் விவசாயிக்கு தூக்குகயிறுகள் (தற்கொலைகள்). கோடியில் புரளும் நடிகைகளுக்கு கோவில் கட்டும் உன்னதமான ஒரே நாடு தமிழநாடுதான், இங்கே சேத்தில் உழைப்பவனுக்கு வீடு கட்ட ஒரு செங்கல் கூட குடுப்பதில்லை. இங்குதான் தல, தளபதி, அந்த ஸ்டார், இந்த ஸ்டார் என இப்படி எல்லா ஸ்டார்களுக்கும் ரசிகர்கள், ஆனால் இவர்களுக்குத்தான் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு போகக்கூட துப்பில்லை.     

பல விளையாட்டுக்களில் சாதிக்க நினைக்கும் பல திறமைவாதிகள் இருக்கும் நாட்டில் ஒரே ஒரு விளையாட்ட மட்டும் பிடித்துக்கொண்டு நாடு தோற்றுவிட்டால் இவர்கள் என்னமோ வீட்லே எழவு விழுந்த ரியாக்சன் குடுக்குறாங்க.

மனிதர்களை வெறுக்கும் நாம்தான் மரங்களை அறுக்காதீர்கள் என்று உளறிக்கொண்டிருக்கிறோம், சத்தியம்தான் வெல்லும் என்று சொல்லிக்கொண்டு சகட்டுமேனிக்கு திட்டுகிறோம். வரம்பு மீறுபவர்களிடம் வரம்பு மீறலாம் என்று ஒரு வரியை வைத்துக்கொண்டு, வரிப்புலியாய் கீறிக்கொண்டிருக்கிறோம்.   

கடைசியாக வெறுப்பு ஒரு பசியை போல இயங்குகிறது. வெறுப்பு மிகுந்தவர்கள் ஒரு மலைப்பாம்பை போல் யாரையேனும் பிடித்து விழுங்கும் ஆவேசத்தில் காத்திருக்கிறார்கள்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மாற வேண்டிய உண்மைகள்...!