OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 19 ஜூலை, 2012

ஏன் முஸ்லிம் என்றால் மட்டும், ஒதுங்குகின்றீர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!


 
தலைப்பை பார்த்து நீங்கள் ஆத்திரப்பட்டால் அதற்க்கு நான் பொறுப்பு கிடையாது, உங்களிடம் பொறுப்பில்லை என்பதே அர்த்தம். என்னை பொறுத்தவரை இந்த உலகத்தில் எல்லா உயிரும் விலை மதிப்பில்லாதது தான். 

ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்துக்கு மிக மிக முக்கியமானவர்தான். உயிர்களுக்கு மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லைதான். ஆனால் இன்று இந்த உலகில் அரசாங்க பதவியில் இருப்பவர்கள்எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டியவர்கள் மனித உயிர்களுக்கு மத்தியில் வித்தியாசத்தை உண்டு பண்ணிபாரபட்சமாக நடந்து கொள்வதுதான் வேதனையாக உள்ளது.
எல்லோரையும் போலத்தான் முஸ்லிமும் அவர்கள் வாழும் நாட்டின் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை  செலுத்துகிறார்கள். அரசாங்க விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள். சட்டத்தை மதிக்கின்றார்கள்  எதிலுமே வித்தியாசம் காட்டுவதில்லை. ஆனால் நம் விஷயத்தில் இந்த உலகமே ????????????

இந்த உலகில் தினமும் சூரியன் உதிக்கிறதோ இல்லையோஇந்த உலகில் எங்கோ ஒரு முஸ்லிம் சமுதாயமே அழிக்கபடுகின்றது என்பதுதான் நிதர்சன உண்மை. ஏன் இந்த கருவருப்பு. என் முஸ்லிம் சமுதாயம் அப்படி என்ன துரோகம் செய்தது இந்த உலகிற்க்கு? உலகை என்னவென்று அறிந்து கொல்லாமலே கொல்லபடும் என் முஸ்லிம் பிஞ்சுக்கள் என்ன பாவம் செய்தது??? நீங்கள் (மாற்று சமுதாயத்தவர்களே)  உங்கள் பிஞ்சு குழந்தைகளை அள்ளி கொஞ்சும் அந்த கணத்தில் என் சமுதாய மக்கள் கொன்று போட்ட பிஞ்சுக்களை அள்ளி கதறுகிறார்களே ஏன் இந்த பாரபட்சம்? ஐம்பது வயதில் கணவனை இழந்து நின்றாலே தாங்க முடியாமல் கதறும் நீங்கள் எங்கே, கன்னிகழியாமலே இறந்து போகும் எனது சமுதாய சகோதரி எங்கே??????????? தொலைகாட்சியில் வரும் அசிங்கங்களையே பார்க்க முடியாமல் வேறு ஒரு சேனல் மாற்றும் நீங்கள் எங்கே, தன் கண் முன்னே தன் தாய்/மனைவி/மகள் என்று பாரபட்சமில்லாமல் கற்பழிக்கபடுவதை பார்க்கும் என் சமுதாய சகோதரன் எங்கே????????

உலகில் ஒரு நாய்யை கொன்றால் கூட கேட்பதற்க்கு என்று ஒரு அமைப்பு இருக்கு, ஆனால் என் சமுதாயத்திர்க்காக குரல் குடுப்பதற்க்கு உங்களுக்கு ஏன் தோன்றவில்லை. ஓ அதுதான் மனித உரிமை காக்க ஒரு அமைப்பு இருக்கிறதே என்கின்றீர்களா? பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் யாராவது கொலை குற்றவாளிகள் இருந்தால் அவர்களை தப்பிக்க வைப்பதிலேயேதான் குறியாக உள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஒரு இந்தியன் அடிவாங்கினாலே, இந்திய அரசாங்கம் பதறுகிறது, இங்கே ஆயிரம் போராட்டங்கள் நடக்கின்றது, இலங்கையில் ஒரு தமிழன் (தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழன் கிடையாது) கொல்லப்பட்டால் இங்கு தமிழகத்தில் உள்ள சில சீமான்கள் பல வீர வசனங்கள் பேசுகின்றார்கள். ஆனால் என் சமுதாயம் எங்காவது கொல்லப்பட்டால் மட்டும் கைகட்டி வேடிக்கை மட்டும் பார்க்கின்றார்கள். அதர்க்காக நான் சீமான்களை அழைக்கவில்லை.

சாதாரண மக்களாகிய உங்களை கேட்கிறேன், உங்கள் வீடுகளுக்கு பக்கத்தில் இஸ்லாமியன் யாரையும் நீங்கள் பார்ததில்லையா? அவர்கள் எப்படி உங்களுடன் பழுகுகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? வருடா வருடம் வெறும் நோன்பு கஞ்சி வாங்கி குடிக்கும் போதுதான் உங்களுக்கு முஸ்லிமை தெரிகின்றதா???? வெறும் செய்திதாள்களிலும், தொலைக்காட்சியிலும் தீவிரவாதியாக சித்தரிக்கபடும் ஒரு போலி முஸ்லிமை அப்படியே நம்புகின்றீர்களே உண்மையிலேயே நீங்கள் சோற்றில் உப்பு போட்டுதான் சாபிடுகின்றீர்களா?

இன்று உலகின் ராஜா என்று கூறி கொண்டு திரியும் அமெரிக்கா கொன்று குவித்த என் சமுதாயங்கள் எண்ணிக்கையில் அடங்க்காதவைகள், இருந்தும் அவர்களின் வெறி அடங்கிய பாடில்லை. ஏன் இன்று இலங்கையில் தமிழர்களை அழித்துவிட்டார்கள் என்று கொதிக்கும் சீமான்களே, உங்களுக்கு தெரியுமா அவர்களும் எனது சமுதாயத்தை வேரறுத்தவர்கள்தான்????????????

மேலும் இந்த பத்திர்க்கைகளை எடுத்துக்கொள்வோம், ஓரிரு தினங்களுக்கு முன் அமீரகத்தில் உள்ள துபாயில் இந்திய மீவர்களை சுட்டுவிட்டார்கள், அதை பற்றின செய்தி இந்தியாவில் அனைத்து செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அரங்கேறின, ஆனால் பாருங்கள் இந்தியாவை  ஒட்டி இருக்க கூடிய பர்மாவில் ஒரு இஸ்லாமிய சமுதாயமே வேரறுக்க படுகின்றது, அதை பற்றி இந்த ஊடக விபசாரம் செய்ய கூடிய ஒரு ஊடகமும் வாய் திறக்கவில்லை. இது எந்த விதத்தில் நியாயம், எங்கே போனது உங்கள் மனித நேயம்.   

அமைதிதான் வாழ்க்கையில் முக்கியம் என்று போதித்த ஒருவரை பின்பற்றும் ஒரு சமுதாயம், செய்யும் காரியத்தை தட்டிக்கேட்க்காமல், அமைதி காப்பதிர்க்கு பெயர்தான் மனித நேயமா? இன்று வலைதளங்கள், வலைபூக்கள் வைத்திருக்கும் அன்பர்களே, உங்களில் பெரும்பாலானோர் (அனைவரையும் சொல்லவில்லை) சினிமா விமர்சனகளுக்கும், கள்ள காதல் செய்திகளுக்கும் குடுக்கும் முன்னுரிமையை இந்த செய்திகளுக்கு குடுக்காதது ஏன்??? நீங்களும் அமைதி காப்பது ஏன்???? உங்களில் ஏத்தினை பேர் இந்த முஸ்லிகளின் பிரியாணியை பெருமையாக எழுதி இருப்பீர்கள்???? பிரியாணிக்கு மட்டும்தான் முஸ்லிமா?

முஸ்லிமகள் அசைவம் சாபிடுகிறார்கள், ஆடு, கோழி மாடுகளை அறுத்து கொல்கிறார்கள் என்று புலம்பும் புண்ணியவாண்களே இன்று என் மக்களை கொன்று குவிக்கிறார்களே, இவர்கள் என்ன ஆடு மாடுகளை விட கேவலமானவர்களா? இல்லை நீங்கள் கேவலபட்டுவிடுவோம் என்கின்ற பயமா?

இந்த உலகின் தீண்டத்தாகதவர்களாக இஸ்லாமியர்கள் மாறிவருகிறார்கள் இல்லை இல்லை வாழத்தகாதவர்களாக இஸ்லாமியர்கள் மாறிவருகிறார்கள். இப்படித்தான் மற்றவர்கள் சொல்கிறார்கள் இப்படிப்பட்ட நிலைக்கு காரணம் நம்மில் சிலரின் முரட்டுத்தனமும் காரணமே

ஒரு சிலர் நம் சமுதாய மக்களுககு ஏற்படும் பின்விளைவுகளை யோசிப்பதே இலலை இஸ்லாத்திற்கும இஸ்லாமியர்களின் மீது அவர்களின் செயல் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும யோசிப்பது இலலை.


புத்த தாய்லாந்தில் பட்டாணி முஸ்லிம்கள் கஷ்ட்ப்படுகிறார்கள்

புத்த இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் கஷ்ட்ப்படுகிறார்கள்

புத்த பர்மாவில் ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள்

அடிச்சா யாருன்னு கேட்க ஆளில்லாத அனாதைப் பய ........... என்ற நிலையில் நம் இஸ்லாமியச் சகோதரர்கள் பிணங்களாய்

இந்தப் படுகொலைகள் அனைத்திற்கும் காரணம் ஒரு புத்தப் பெண்ணை இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் கற்பழித்தனர் என்று சொல்லப்படுகிறது.  (அந்த இளைஞர்கள் அனைவருக்கும் விரைவாக கேஸ நடத்தி முடித்து சில நாட்களுக்குள்ளாகவே மரண தண்டனையும வழங்கப்பட்டுவிட்டது).

ஒரு பெண்ணின் கற்பு அழிக்கப்பட்டதற்காக ஒர் இனமே அழிக்கப்படுகிறது. இந்தியாவில் தினமும் பல கற்பழிப்புகள் நடக்கின்றது, ஒரு ஹிந்து ஒரு பெண்ணை கற்பழித்தால் அந்த இனம் அழிக்கபடுவதில்லை, ஒரு கிருஸ்துவன் செய்தால் அந்த இனம் அழிக்கபடுவதில்லை.....................அப்புறம் என்ன மயிருக்கு என சமுதாயத்திர்க்கு மட்டும், எல்லா சமுதாயத்திலும் இது போன்றவர்கள் உண்டு, அதற்க்குரிய தண்டனையும் வழங்கியும் இது போல நடக்கின்றது என்றால்?????????????????

கேட்பதற்கு ஆளில்லாத அனாதைகளாக சிதைக்கப்படுகிறது.

இறைவா உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும தேடுகிறோம்


கருத்துகள் இல்லை: