OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 16 ஜூலை, 2012

புரிந்துகொள்ளும் நிலையில் தான் தமிழன் இல்லையே!

ரு தனியார் தொலைக்காட்சி ஒரு பிரபல்யமான ஒரு நடிகரை வைத்து ''மக்களை கோடீஸ்வரர் ஆக்கும்  நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் ஏதோ அந்த தொலைக்காட்சி அலல்து அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் தன்கைக்காசு ஒரு கோடியை மக்களுக்கு வாரி வழங்குவதாக நினைத்து ஏமாறுகிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? 

முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி [sms ]அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது.
அது போக அவர்களை தொடர்புகொள்ள சிள ஸ்பெஷல் நம்பர்கள் உள்ளன.  இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99
வரை சார்ஜ் செய்யபடுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு சுமார் 40 கோடிக்கு மேல் இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் வருமானம் பார்ப்பதாக கூறப்படுகிறது. இதை நம் தமிழ் ஹீரோ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு வருமானம் 'சி'யில் கிடைக்கிறதல்லவா? அதனால் நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை. இந்த நிகழ்ச்சியின் 37 பக்க  நிபந்தனைகளை (Terms & Conditions) (www.asknagravi.com/orukodi ) என்ற இணையதளத்தில் பார்த்தால் தமிழர்களை கோடீஸ்வரர்கள் ஆக்குகிறோம் என்ற பெயரில் கோவணாண்டிகளாக ஆக்கும் தந்திரத்தை விளங்கிக் கொளல்லாம்.

இன்னொரு செய்தி; சமீபத்தில் திருமணம் செய்த ஒரு சிரிப்பு புகழ் நடிகையும், அவருக்கு வாழ்வளித்த பிரசன்னமான நடிகரும் பிரிந்தது ஏன்? என்று பரபரப்பான போஸ்டர்கள் சென்னையைக் கலக்க, கூடப்பிறந்த அக்கா-தங்கச்சியை கட்டிட்டுப் போன புருஷன் விட்டுட்டு போயிட்டாக்கூட கவலைப்படாத நம்ம தமிழ் ரசிகன், தனது அபிமான சிரிப்பு நடிகைக்கும் அவரது கணவனுக்கும் பிரிவா என்று என்று கேட்டு கொதித்துப் போய் பலருக்கும் போன் போட்டு விசாரித்துள்ளனர். அதோடு பத்திரிக்கைகளுக்கும் போன் போட்டு இந்த நாட்டிற்கு முக்கியமான செய்தியை கேட்டுள்ளனர். பத்திரிக்கையளர்கள் சிலரும் கடமையே கண்ணாக அந்த பிரசன்னமான நடிகரிடம் இந்த போஸ்டர் குறித்து கேட்க, அவர் சொன்ன பதில்தான் செல்போன் நிறுவனங்களின் பகல் கொள்ளையை படம்போட்டு காட்டுகிறது. 

அதாவது புதுசா கல்யாணமான தம்பதிகளை ஆடி மாசம் பிரித்து வைக்கும் பழக்கம் தமிழகத்தில் பரவலாக உள்ளது. இதை மையமாக வைத்து யோசித்த ஒரு செல்போன் நிறுவனம், சிரிப்பு நடிகையும் அவரது கணவரும் பிரிந்ததற்கான காரணம் என்ன? என்று கேள்வி கேட்குமாம். அதற்கு ''ஆடி மாசம்' என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அது சரியான பதிலாம். அதற்கு பரிசு வழங்கப்படுமாம். இதற்குத் தான் இந்த போஸ்டராம். தமிழனின் பலவீனத்தை தனியார் தொலைக்காட்சிகளும், செல்போன் நிறுவனங்களும் நல்லாவே பயன்படுத்தி காசைக் கறக்குறாங்க. புரிந்துகொள்ளும் நிலையில் தான் தமிழன் இல்லையே!

கருத்துகள் இல்லை: