OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 17 ஏப்ரல், 2013

நிலநடுக்கம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் எப்படி நாம் நடந்துக்கொள்ளவேண்டும்



புயல், சூறாவளி போன்று இந்த நிலநடுக்கத்தை எடுத்துக்கொள்ள முடியாது இது எப்ப ஏற்படும் என்று படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். சரி அப்படி ஏற்படும் பொது நாம் என்ன பாதுகாப்பு செய்யவேண்டும். இது வெறும் முயற்ச்சிதான் அன்றி முற்றிலுமான தீர்வு அல்ல. ஏன் என்றால் இறைவன் நாடிவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதை தடுக்க முடியாது.

கட்டிடத்தின் உள்ளே இருப்பவர்கள்:- (பெரிய கட்டிடங்களில் இருப்பவர்களுக்கு மட்டும்)
1.   உடனே தரையில் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
2.   அங்குள்ள ஏதாவது ஒரு மேஜையின் கீழே ஒழிந்துக்கொள்ளவேண்டும், அல்லது கைகளால் தலை மற்றும் முகத்தினை மறைத்துக்கொள்ளவேண்டும்.
3.   அங்குள்ள கண்ணாடிகள், ஜன்னல்கள், கதவுகள், சுவர்கள் மேலும் கீழே விழக்கூடிய பொருட்களில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.
4.   படுத்திற்க்கும்போது அப்படியே இருக்கவேண்டும், ஏதாவது தலையணை கொண்டு உங்கள் முகத்தை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் அதிர்வு நிர்க்கும் வரை.
5.   உங்கள் அருகாமையில் இருக்கும் வெளியேறும் வழியாக வெளியேறவேண்டும்.
6.   முடிந்தவரை அதிர்வு நிற்க்கும் வரை உள்ளேயே இருக்க வேண்டும்.
7.   எக்காரணத்தைக் கொண்டும் லிஃப்ட் உபயோகிக்க கூடாது.

வெளியே உள்ளவர்கள்:-
1.   கட்டிடடங்கள், மின் கம்பங்கள், மின் வோயர்களை விட்டு தள்ளி இருக்க வேண்டும்.
2.   அதிர்வு முழுமையாக அடங்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள்:-
1.   நிதானமாக வண்டியை பாதுக்காபான இடத்தில் நிறுத்த வேண்டும், வண்டிய விட்டு இறங்க கூடாது.
2.   வண்டியை மரங்கள், கட்டிடடங்கள், மின் கம்பங்கள் போன்றவற்றில் இருந்து தள்ளி நிறுத்த வேண்டும்.
இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருப்பவர்கள்:-
1.   உங்களுக்கு அத்தனை வலுவிருக்காது.
2.   உங்கள் நிலையில் இருந்து நகர முயற்ச்சி செய்யாதீர்கள்.
3.   தூசுகளை தட்டாதீர்கள்.
4.   உங்கள் மூக்கு மற்றும் வாய்யை சேர்த்து எதேனும் துணியால் மறைத்துக்கொள்ளுங்கள்,
5.   அருகில் உள்ள சுவர் அல்லது பைப் போன்றவற்றில் தட்டி ஒலி எழுப்புங்கள், யாராவது அருகில் இருந்தால் உங்களுக்கு உதவ கூடும்.
6.   யாரையும் கத்திக்கூப்பிடாதீர்கள், விசில் அடித்து கூபிடலாம் முடிந்தால்.

ஆனால் இதை எல்லாம் மீறி நம்மை படைத்தவனிடம் கேட்கும் துவா மிக முக்கியம்.

    

திங்கள், 15 ஏப்ரல், 2013

உட்கார்ந்து யோசிச்சது!!!



இந்த தலைப்பி கைய்யில் எடுத்து கொஞ்சம் நாள் ஆகிவிட்டது, சரி இனி மேலாவது கேப் விடாமா அடிக்கலாம்ன்னு பார்த்தா!!!!!!!!!!!!!!!!!! உட்காரக் கூட நேரமில்லை.... என்ன பன்றது எதையாவது எழுதணுமே!!!!!!!!!!!!!!!!

இந்த வலைப்பூவில் பதிவு போடுறவாங்க எல்லாம் பதிவை நல்ல எழுதுராங்களோ இல்லையோ தலைப்பை மட்டும் சும்மா கடுப்பேத்துரா மாதிரி வைக்கிறாங்க அப்படி பட்ட சில தலைப்புகளை முதலில் பார்க்கலாம்.

கோச்சடையானில் ரெண்டு ரஜினி (முதல்ல இருக்குற ஒரு ரஜினியை ஒழுங்கா நடிக்க வையுங்கடா??????)

நரியிடம் இருந்து பூனையைக் காப்பாத்திய நாய் (உங்ககிட்ட இருந்து எங்களை எல்லாம் யாரு காப்பாத்த போறாங்களோ)

வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் உள்ளதா (ஏன் இல்லைன்னா நீ அமெரிக்காகிட்டே இருந்து வாங்கிதரபோரியா??)

பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ?? (நீ பொறந்து மட்டும் என்ன பிரயோஜனம்)

விளையாட்டை விளையாட்டா பாருங்க (அப்பா நாங்க என்ன திருட்டாகவா பாக்குறோம் (நான் பிஎல் லை சொல்லலீங்கோ!!!!!!!))

ஸ்டாலின்: தமிழக பத்திரிகைகளுக்கு நம்மீது அன்பு! அட்டையில் போடுகிறாங்க (ஆமாம் நீங்க ஆட்டைய போடுறீங்க அவிய்ங்க அட்டையிலே போடுறாங்க)

ரஜினி, கமல் போன்ற கிழவர்கள் எல்லம் இளம் நடிகையுடன் ஜோடியாக நடிக்கும்போது ஸ்டாலின் இளைஞரணி தலைவராக நீட்டிக்க கூடாதா (No Country for Old Man)

தமிழ்ப் படம் பிடிக்கும்.. ஆனால் தமிழ்ப் பையனைக் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்! லட்சுமி மேனன் சிறப்பு (உங்க மலயாளி நாதாரி புத்தியை தெரியாதா?? இத நீங்க வேற சொல்லனுமா???)

கொசு கடியில் இருந்து தப்பிக்க... பவர் ஸ்டாரின் புதிய கண்டுபிடிப்பு... (டேய் உன்னோட கடியையை தாங்க முடியலை நீயெல்லாம் கொசுக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கிரியா???)

அடுத்து சில அறிவிப்புகள்

பொது இடங்களில் பெண்களை தரக் குறைவாக திட்டக் கூடாது - உயர்நீதி மன்ற நீதிபதி.

#
அப்போ எங்கேயாவது சந்து, பொந்துல வச்சித் திட்டலாமா யுவர் ஹானர்?!

பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்புப் பலகை
போவதும் இலவசம். வருவதும் இலவசம்
மாட்டிக் கொண்டால் உணவும் இலவசம்!
(
பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்காக எழுதப்பெற்றது)

மும்பையில் பிரபலமாக உள்ள beauty parlorல் உள்ள வாசகம்
இங்கேயிருந்து வெளியே செல்லும் பெண்ணைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள். அது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்!

மும்பை ஜூஹு பகுதியில் உள்ள சிகை அலங்காரக் கடையில் உள்ள வாசகம்
தலைவா, உங்கள் தலையை நம்பித்தான் எங்கள் வியாபாரம் உள்ளது!.

அடுத்து சில மொக்கைகள்:-
காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..

என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா???

 “கோல் கீப்பர் னா கோல் போடாமல் தடுக்கனும் - - அப்ப
விக்கெட் கீப்பர் னா?

என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் குழந்தையா இருந்தாலும் பிறக்கும் போது  டிரஸ் இல்லாமதான் பிறக்கும் .

கைபேசியில்  துவங்கிய 
நம்  காதல் - உன் அண்ணன் 
கை பேசியதால் 
முறிந்தது .

#
என்னா அடி ????

சில நக்கல்கள்:-
ஹலோ சூரியன் FM ஆ..??

வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன் பேசுறேன்..!!

சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??

என் பொண்டாட்டி என் கூட சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..

அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க..!!

நாம என்னைக்கு தத்துவம் சொல்லாம இருந்திருக்கோம்:-
1000, 2000 செலவு செஞ்சு ஊட்டி, கோடை அப்படின்னு ஊரு சுத்தினா TOUR அப்படிங்கிறாங்க.10 பைசா செலவில்லாமா ஊர் சுத்தினா தண்டச் சோறுன்னு சொல்றாங்க . (என்ன உலகமட இது.)

பொண்ணுங்க கிட்ட லவ்
பண்றியான்னு கேக்குறதும் கண்டக்டர்
கிட்ட சில்லறை கேக்குறதும் ஒன்னுதான் 

இருந்தாலும் இல்லைன்னு தான் சொல்லுவாங்க ..!!