OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 3 செப்டம்பர், 2012

நமது இறைநம்பிக்கை எதனடிபடையில் அமையவேண்டும்



இன்று உலகளவில் முஸ்லிம்களிடம் ஒரு புதிய பழக்கம் தொற்றிக்கொண்டு இருக்கின்றது, அதாவது உலகில் ஏதாவது ஓரிடத்தில் முஸ்லிம் மக்கள் கொன்று குவிக்கபடுகின்றார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் உதாரணம் பர்மா, அதுக்கு பிறகு சில நாட்களில் அங்கே ஒரு பெரிய இயற்க்கை பேரழிவு நடக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள், உடனே நம் மக்கள் அவர்கள் வைத்திருக்கும், வலைதளத்திலும், ஈமைல்களிலும், முகப்புத்தகத்தில்  எழுதுகிறார்கள் இது அல்லாஹ்வின் தண்டனை என்று புழம்பி தள்ளுகிறார்கள், இதுதான் நாம் அல்லாஹ்வின் மீது வைத்துள்ள நம்பிக்கையா இப்படிதான் நம்பிக்கை வைக்க அல்லாஹ் நமக்கு கற்றுக்குடுத்தானா?


சரி பர்மாவில் கொன்றவளுக்கு தண்டனையாக பெரும் வெள்ளம் வந்தது என்று இவர்களின் கருத்துப்படி வைத்து கொள்வோம், இவர்கள் நோன்பு நோற்று துவா செய்தார்களாம், அதனால இந்த அழிவு வந்ததாம். சரி அப்படியே இருக்கட்டும், என்னுடைய கேள்வி? உலகில் பர்மாவில் மட்டும்தான் முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்களா? ஏன் பாலேஸ்தீனில், ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் இன்னும் பல நாடுகள் இருக்கின்றது அங்கேயெல்லாம் கொல்லப்படவில்லையா? இல்லை அவர்களுக்கு இவர்கள் துவா செய்ய மறந்துவிட்டார்களா? இதுவா நாம் இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை!!!!!!!!!!! நீங்கள் கேட்டவுடன் குடுக்க் அல்லாஹ் என்ன இன்ஸ்டண்ட் நூடுல்ஸா ???? நம்முடைய துவாக்களுக்கு நிச்சயம் பதிலளிப்பான் ஆனால் அது எதுவென்று நாம் அறியமுடியாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்னுமொரு செய்தி, சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தி முகப்புத்தகத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்கள் பெற்றது, அதாவது ஒருவர் இறந்துவிட்டார், அவரை அடக்கம் பண்ணிவிட்டு வந்துவிட்டார்களாம், மூன்று தினங்களுக்கு பிறகு இர்னதாவரின் தந்தைக்கு சந்தேகம் தொண்டி பார்த்தால் அந்த மைய்யத் மிக கொடூரமாகவும், கண்கள் எல்லாம் விரிந்து காணப்பட்டதாம், இதையும் நம்பி சில முஸ்லிம்கள் அதற்க்கு ஹிட்களும், கமெண்ட்ஸ் களும் குடுக்கிறார்கள், இதுவா நம்முடைய ஈமான்?

மண்ணறையில் வேதனை உண்டுதான் அதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அந்த வேதனை ஒரு சாதாரண மனிதனால் எப்படி பார்க்க முடியும், அந்த மண்ணறை வாழ்க்கை என்பதன் நியானம் அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும் இதை பற்றி நாம் சிந்திக்க கூட கூடாது, நம்பதான் வேண்டுமே தவிர!!!!!!!!! அதுதான் நமது ஈமானை பாதுகாக்கும்,

இதை இறைவன் அழகான முறையில் தனது திருமறையில் கூறுகின்றான்:-
“அவன் மறைவானதை அறிபவன், தனது மறைவான விஷயங்களை அவனை பொருந்திக்கொண்ட தூதரை தவிர வேற யாருக்கும் வெளிபடுத்த மாட்டான்” 72:26.

எனவே இதுவெல்லாம் யூத கிறிஸ்துவர்களின் வழி, அவர்கள்தான் குருடனையோ, அல்லது குஷ்டமுள்ளவனையோ செட் செய்துவிட்டு கூட்டத்தில் கர்த்தரிடம் பிராத்திப்பார்கள் உடன் அந்த குருடனோ அல்லது குஷ்டரோகியோ குன்மாவது போல காட்டி அவரகளை தான் மாதத்தின் பால் இழுப்பார்கள், இது போல ஒரு கேடுகெட்ட நிலைமை நமக்கு தேவையில்லை,

நமக்கு அல்லாஹ்வின் வேதமும் அவனின் தூதரின் வழிக்கட்டுதலுமே போதும், மேலும் இன்று அல்லாஹ் உதவியால் பெரும்பாலான் மக்கள் இஸ்லாத்தின் பால் வருகின்றார்கள், அவற்றை எல்லாம் இது போன்ற செய்திகளால், பின்னடைய செய்துவிடாதீர்கள்,

இன்னும் ஒரு முக்கியமான, செய்தி அதுவும் முகப்புத்தகதில் தான், அதாவது ஐ love அல்லாஹ், i love முஹம்மத் போன்ற படங்களை போட்டு இதை ஷேர் பண்ணினால் இத்தனை நன்மை வரும், அது நடக்கும், இது நடக்கும் போன்றவற்றை முற்றிலும் நிறுத்தி விடுங்கள், இதுவும் நமது ஈமானை பலவீனமாக்கிவிடும்.

மேலும் ஒரு இறைவாசனம் கூறி முடித்துக்கொள்கிறேன்

அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், அல்லாஹ்வை அஞ்சவேண்டிய முறையில் அஞ்சிக்கொள்ளுங்கள், முஸ்லிமாக தவிர மரணிக்காதீர்கள” 

பெட்ரமாஸ் லைட்டெதான் வேணுமா?


(Xtouch X401, Samsung Galaxy S-II எது சிறந்தது?)



சமீபமாக அமீரகத்தில் xtouch என்கின்ற நிறுவனத்தாரின் டாப்லெட்கள் அதிகம்பேரை கவர்ந்துள்ளது. அதற்க்கு காரணம் என்னவென்று பார்த்தால் குறைந்தவிலையில் சிறந்த தொழிற்நுட்ப்பத்தில் கிடைப்பதால், எல்லோரும் 1500, 2000 திர்காம்ஸ் என்று செலவழித்து வாங்கும் காலக்ஸி டாபில் நீங்கள் என்ன என்னவெல்லாம் செய்கிறீர்களோ? அதையே இதிலும் நீங்கள் செய்யலாம். இவர்களின் 7” tablet வெறும் 260 திர்காம்ஸ் தான் என்றாள் உங்களால் நம்பமுடிகிறதா. இது ஒரு சீன உற்பத்திதான், இருந்தாலும் நல்ல பேரு வாங்கிய நிறுவனங்கள்தான் தரமான பொருளை தரமுடியும் என்று மக்களே உருவாக்கி கொண்ட விதியில் எனக்கு நம்பிக்கை இல்லை.  

என்னடா இவன் தலைப்பிற்க்கும், இந்த கிறுக்கல்களுக்கும் சம்பந்தமே இல்லையே என்று பார்க்கிறீர்களா? அடுத்து அதுக்குதான் வரேன், மேலே சொன்னது போல இவர்களின் நிறுவனத்தில் இருந்து மேலும் இரண்டு புதிய போன்களை அறிமுக செய்துள்ளன, ஒன்று X401, மற்றொன்று X506, இதில் முதலில் உள்ளது 4.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டது மற்றொன்று 5 இன்ச் ஸ்க்ரீனை கொண்டது, இதில் என்னவோரு முக்கியமான விஷயம் அப்படினா? சாம்சங் காலக்ஸிகளை காட்டிலும் விலை மிகவும் குறைவு, அதே நேரம் இவர்களின் தொழில்நுட்பதில் எந்த ஒரு மாற்றமுமில்லை, ஒரு சில சிறிய மாற்றங்களை தவிர உதாரணதீர்க்கு கீழே உள்ள இரண்டு ஒப்பீடுகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், நான் போன வாரம்தான் ஒன்று வாங்கினேன், கடிப்பாக இது ஒரு சிறந்த தேர்வு, விலை அதிகமாக போட்டு வாங்குவதற்க்கு இந்த மொபைல் சிறந்தது, இதன் விலையோ வெறும் 500 முதல் 600 திர்காம்ஸ் வரைதான். புத்திசாலிகள் புரிந்துகொள்வார்கள்:-