OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 19 ஜூன், 2012

விலை உயர்வைத் தடுக்க என்ன வழி



பொருட்களின் விலை ஏற்றதிர்க்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்தையும் ஒரே மாதிரியான நடவடிக்கை மூலம் சரி செய்ய முடியாது. ஒரு பொருள் தேவையை விட பல மடங்கு அதிகமாக உற்பத்தியாகும் போது அப்பொருளின் விலை சரிந்து விடுவதையும், தேவையை விட குறைவாக உற்பத்தியாகும் போது அதைக்கேர்ப்ப விலை அதிகரிப்பதையும் நாம் காண்கிறோம்.


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்கமா?




இன்று உலகில் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் அனேகமானோர் எடுத்துவைக்கும் ஒரே வாதம் இந்த தலைப்புதாங்க!!!!!!!!!!! சரி இதை பற்றி கொஞ்சம் அலசுவோம்.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.