அவர் நாள் வரும் அன்று நீங்கள் உங்கள் பேரபிள்ளைகளிடம் இந்த மேக வன்தட்டின்
பயன்பாட்டை விளக்குவீர்கள், எவ்வாறு அதில் கோப்புகளை சேகரிப்பது, சேமித்த கோப்புகளை திரும்பவும் எவ்வாறு எடுப்பது என்று.
சரி ஏற்கனவே மெமரி கார்ட், பிளாஷ்
டிரைவ் மற்றும் எக்ஸ்டர்நல் வன்தட்டு போன்றவைகள் பயன்பாட்டில் இருக்கும் போது அப்படி என்ன புதியதாக இதில் உள்ளது என்று நீங்கள்
கேட்பீர்களேயானால் அதற்கான பதில்தான் இந்த பதிவு.
இன்று நாம் எத்தனை வகையான சேமிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அது எல்லாம் நாம் எங்கு சென்றாலும் எடுத்து கொண்டு செல்லவேண்டும், சில சமயம் மனிதன் என்கின்ற அடிபடையில் நாம் மறந்துவிடுவோம், அதுமட்டுமில்லாமல் அதை அனைத்து கணினியிலும் பயன்படுத்துவது அவ்வளவு சுலபம்
கிடையாது, எங்கே வைரஸ் தாக்கிவிடுமோ என்கின்ற பயம் வேறு மனதில், இதை எல்லாம் கணக்கிட்டுதான் கூகில், சுகற்சிங்க், மைக்ரோஸாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் பயனளார்களுக்காக இந்த தொழில்நுட்பத்தை
தொடங்கி உள்ளன. சரி வாங்க இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.