அரசியல்வாதிகள்
உண்மையை மட்டும் பேசும் ஒரே தருணம் இந்த தேர்தல் பிரச்சாரம்தான். ஆம் எந்த ஒரு
அச்சுரத்தலும் இல்லாமல் யாருடைய அடக்குமுறையும் இல்லாமல் தான் செய்ததையும்
தன்னுடைய எதிரி செய்ததையும் மிக அழகாக மேடைபோட்டு சொல்லும் ஒரே தருணம் இந்த
தேர்தல் பிரச்சாரம்தான். இவனை பத்தி அவனும் அவனை பத்தி இவனும் மாறி மாறி உண்மையை
போட்டு உடைக்கும் உன்னதமான தருணம் இந்த தேர்தல் பிரச்சாரம்தான். ஆனால் ரெண்டு
பேருமே திருடனுங்கதான். இதுல மூணாவது நம்மாளு ஒருத்தர் “நாங்கள்
ஆட்சிக்கு வந்தால்......ஏய் தம்பி பேப்பர ஒழுங்கா காட்டுடா”....!!!!!!!!!!!!!!
தேர்தல்
பிரச்சாரத்தில் மேடைப்போட்டு சொல்லும் சொத்து விவரங்கள் எல்லாமே சிபிஐக்கும், வருமானதுரைக்கும்
முன்னரே தெரியாமல் போனதுதான் எப்படி என்று மக்கள் சிந்தித்ட்டுக்கொண்டே
இருக்கிறார்கள்....!!!!!!!!!!!!!
ஒவ்வொரு முறையும்
இவர்கள் கேட்பது எங்களுக்கு வாக்களிப்பேன் என்று வாக்குறுதி தருவீர்களா? நியாயமா
பார்த்தா நாமதான் அவர்களை பார்த்து கேட்க்கவேண்டும் சொன்னதை நீங்க செய்வீர்களா
என்று? அட இதுக்குடா பரவாயில்லை இன்னும் சில பக்கிகள் நடப்பது பாராளமன்றாமா இல்லை
நாடாலாமன்றம் தேர்தலா என்றே தெரியாமல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசிகளை
குறைபோம், எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக்கொடுங்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள்
இவர்களின் மனுதாக்களை அனுமதித்த தேர்தல் கமிஷனை என்ன சொல்வது...!!!!!!!!!!!
தேசிய கட்சிகளும் சாதாரணமாக விடவில்லை. நாங்கள் செய்த
பத்தாண்டு சாதனைகளை தொடர வழி செய்யுங்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார்கள். மற்றொருவரோ, அவரின் சாதனையை பட்டியல் போடவே நேரம் இல்லாமல் இருக்கிறார். அந்த சாதனை
பட்டியலில் சில வேதனை பட்டியல்கள் மறைந்து விடுகிறது. ஆனால், இவரை தான் இந்தியாவின் எதிர்கால ஒளி விளக்கு,
வழிகாட்டி என்று எல்லோரும்
நம்புகிறார்கள். ஹ்ம்ம்....நம்பி தானே ஆகணும்... வேற வழி ?
மக்கள் யாரும்
யோசிக்கவே மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள். யாரும் செய்திதாள்கள்
படிப்பதில்லை;
செய்திகள் கேட்பதில்லை என்று அரசியல்வாதிகளின் நினைப்பு.
ஆனால் அதுவும் கிட்டதிட்ட உண்மைதான். ஆம். நம் பாரத தேசத்திற்கென்றே பொதுவான வியாதி
ஒன்றுள்ளது.
மறதி- நம் நாட்டின் தேசிய வியாதி. இந்த வியாதி இருக்கும் வரை நம்மால் எந்த ஒரு நல்ல தெளிவான முடிவையும் (ஆட்சியையும்) எடுக்க முடியாது. நம் மக்கள், போன ஆட்சியில் நடந்ததை இந்த ஆட்சியில் மறந்து விடுவார்கள்; இந்த ஆட்சியில் நடப்பதை அடுத்த ஆட்சியில் மறந்து விடுவார்கள். யார் அப்போதைக்கு நல்லது செய்கின்றார்கள் என்று மட்டுமே சிலர் பார்கின்றனர்.
இன்று பல பேர்கள்
யாராவது கொஞ்சம் நல்லவர் வந்தால் போதும் என்ற மனநிலையில் தான் உள்ளார்கள், ஆனால்
யாருமே தகுதியானவர் வரவேண்டும் என்று நினைப்ப்தே இல்லை. தகுதியானவர் வரவேண்டும்
என்றால் “ஜெயிக்கிற
பக்கமே சாய்வோம் என்று நினைக்காமல், துட்டுக்கு விசுவாசமாய் வோட்டு போடாமல் இருந்தாலே போதும் ,நல்ல மாற்றம் வரும்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக