OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 17 ஜூன், 2013

இவனுங்க என்னதான் சொல்லவறாங்க ஒரு நிமிஷம் படியுங்கள்:-



பெறுபான்மையான மக்கள் நிர்வாணமாக இருக்கின்ற ஊரில் ஆடையுடன் ஒருத்தன் வந்தால் அவனை அந்த மக்கள் பார்த்து ஏளனம் செய்வார்கள் அதுபோலத்தான் “ஹிஜாப்” அணிந்து முழுமையாக உடலை மறைத்து உடை அணியும் முஸ்லிம் பெண்களை அரைகுறை, ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் உடையணியும் மற்றவர்கள் ஏளனம் செய்வார்கள் இதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

பெண்களுக்கு எதிரான பெறுபான்மையான கற்பழிப்புகள், டீசிங்குகள் அவர்கள் அணியும் ஆபாசமான உடையே பிராதானமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது (அதை பற்றிய சகோதரி ஸ்வேதா ஐயர் நடத்திய கருத்துக்கணிப்பை படிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் )

ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் “டிரஸ் கோட்” இருக்கும் போது இஸ்லாமும் பெண்கள் மற்றும் ஆண்கள் அணியும் ஆடைகளில் சில வரைமுறைகள் வைத்துள்ளது எப்படி தவறாகும்?. உடலை அங்காவயங்களை மறைத்து உடை அணிய இஸ்லாம் பெண்களை வலியுறுத்துகிறது இதில் உங்களுக்கு எங்கே உறுத்துகிறது?

சானியா மிர்ஸா குட்டைபாவாடை போட்டால் இஸ்லாமிய மதகுருமார்களை கேள்வி கேட்கும் அறிவாளிகளே, ஏன் செரீனா வில்லியம்ஸ் செய்தால் கிருஸ்துவ பாதிரியாரிடம் கேட்க மாட்டேன்கிறீர்கள். கிருஸ்துவ ஆலயங்களில் உள்ள அன்னை மெரியும், கிருஸ்துவ கன்னியாஸ்த்திரிகளும் இந்த ஹிஜாபைதான் அணிந்து  இருப்பார்கள்

பெண்களை வெறும் காட்சி பொருளாக மட்டுமே உபயோகித்து வரும் இந்த உலகம் அவர்களை விளம்பரங்களில் அருவருக்கத்தக்க ஆடைகளை அணிவித்து தங்களின் வியாபாரத்தை பெருக்கி கொள்கிறது, இதற்க்கும் “அந்த மாதிரியான தொழிலுக்கும்” என்ன வித்தியாசம்.

இதையெல்லாம் சொன்னால் காட்டுமிராண்டிகள், நாகரீகம் தெரியாதவர்கள் என்று எங்களை (இஸ்லாமியர்களை) சொல்லுவார்கள், ஆனால் கற்பழிப்பு, பாலியல் பாலாத்காரம், இதெல்லாம் இன்று நாகரிகத்தில் முன்னோடி என்று சொல்லக்கூடிய நாடுகளில்தான் அதிகமா நடக்கிறது, அங்கெல்லாம் தனிமனித ஒழுக்கம் என்பதே கேள்விக்குறியாக நிற்கிறது.

மேலும் மேலைநாடுகளில் எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் அனாச்சாராங்கள் வெட்டவெளிச்சமாக நடக்கிறது, அதை செய்வது என்பது நாகரிகத்தின் ஒரு பகுதியாகவும் அம்மக்கள் நம்பி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை: