OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 28 நவம்பர், 2013

உட்கார்ந்து யோசிச்சது

இந்த தலைப்பில் மீண்டும் உங்களை சந்தோசபடுத்துவதில் சந்தோஷம்.

ரயிவே ஸ்டேஸன்
நபர் 1 : சார் டெல்லி எக்ஸ்பிரஸ் போயிடுச்சா ?
நபர் 2 : போயிடுச்சு.
நபர் 1 : மும்பை எக்ஸ்பிரஸ் போயிடுச்சா?
நபர் 2 : போயிடுச்சி.
நபர் 1 : கொல்கத்தா எக்ஸ்பிரஸ் போயிடுச்சிங்களா ?
நபர் 2 : போயிடுச்சியா நீ எங்க தான் போகணும் எல்லா டிரெயினயும் கேட்டுனு இருக்க ?
நபர் 1 : நான் அவரமா தண்டவாளத்தை தாண்டி அந்தப்பக்கம் போகணும் அதாங்க கேட்டேன்.
நபர் 2 : ! ! !....

என்ன ஆரம்பமே அதிருதுல்லே.............. தொடர்ந்து படிங்க!!!!!!!!!!!!!!

பரிட்சை


ஆசிரியர் : பரிட்சை நேரத்துல ஏன்டா தூங்கற ?

மாணவன் : கேள்விக்கு விடை தெரியலனா ‘முழிச்சிட்டு
இருக்க கூடாதுனு அப்பா சொன்னார். அதான் தூங்கிட்டேன் சார் .

ஆசிரியர் :!!!!!!!!! 

என்ன முடியலையா??? எனக்கும்தாங்க!!!!!!!!!!!!!!!!!!

கர்நாடகா தண்ணீரும்,
கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்...
ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்...
 
ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..


கேர்ள்ஸ் யாரும் அடிக்க வராதீங்க!!!!!!!!!!!!


டவுட்டு 

ரோடுல பொண்ணைப் பார்த்தா பொறுக்கின்னு திட்டுறாங்க.
வீட்ல போய் பெண்ணைப் பார்த்தா மாப்ளென்னு கும்பிடுறானுங்க. என்ன உலகமடா இது?..


கடைசியாக................... 
பாரதி இன்று இருந்தால்
தமிழன் என்று ஒரு இனமுண்டு
தண்ணீருக்கு பிச்சை எடுக்கும் குணமுண்டு .......என்று பாடியிருப்பார்



சமூகத்தை சீரழிக்கும் கோபிநாத்!!!!!!!!




சமீபத்தில் கண்ட நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு வீட்டில் கணவன் மனைவி என்னவெல்லாம் பேசுகிறார்கள்? கணவன் மனைவி என்கிற உறவு அவர்கள் பேசுவது எல்லாமே ரகசியங்கள் காக்கபடவேண்டியது இதை வெளிபடுத்த ஒரு நிகழ்ச்சி தேவையா? நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம், இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கணவன் மனைவிகளை என்னவென்று சொல்வது. இப்படியொரு தலைப்பில் விவாதம் நடத்திய அந்த கோட் போட்ட கோமாளியை என்னவென்று சொல்வது?

அதில் கலந்துக்கொண்டவர்கள் கொஞ்சம் கூட வெட்க படாமா ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்தையும் சொல்றார்களே அந்த மானம்கெட்ட தம்பதியர்களை என்னவென்று சொல்வது, நாட்டில் இதை  தவிர வேற பிரச்சனையே இல்லை? தொலைகாட்சி ஊடகங்கள் தங்களின் டி‌ஆர்‌பியை உயர்த்திக்கொள்ள எண்ணவேண்டுமென்றாலும் செய்யுமா? கணவன் மனைவி உறவின் புனிதம் எங்கே போனது? கலாச்சாரம் என்று வாய்க்கிழிய பேசும் சமூக ஆர்வலர்கள் இப்போ எங்கே போனார்கள்???

இன்றைக்கு நம் பெண்களை சீரழிப்பது நாட்கங்கள் மட்டுமில்லை இந்த மாதிரி கேனத்தனமான நிகழ்ச்சிகளும் தான், பேசுவதற்க்கு நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள், மின்சார பற்றாக்குறை, மாநிலத்தில் நதிநீர் பிரச்சனை, ஒரு தலைமுறையை இல்லாமல் ஆக்கும் கூடங்குளம் பிரச்சனை, இன்னும் பசி, வேலை இல்லா திண்டாட்டம், காசுக்காக போட்டி போட்டு மக்களை மொத்தமாக கொள்ளும் டிராவல்ஸ் பேருந்துகள் இப்படி இன்னும் பல கோடி பிரச்சனைகள் இருக்க எதர்க்கும் உதவாத, ஒரு உறவை கொச்சைப்படுத்தும் இது போன்ற தலைப்புகள் தேவையா?? இதையும் சிரித்துக்கொண்டே பார்க்கும் நமது மக்களின் மனநிலை என்ன இவ்வளவு கேவலாம் ஆகிவிட்டதா!!!!!!!!!!!!! இல்லை அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்டே எப்படி இருக்கிறான் என்பதை பார்க்கும் கேடுகெட்ட என்னமா????????

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல மக்களாய் பார்த்து மாறாவிட்டால் நாம் தமிழகத்தில் மாற்றமே வரப்போவதில்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்றுமே!!!!!!!!!!!!!!