OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 17 ஜூன், 2013

சன் டிவி மேல கேஸ் போடனும்


தடங்கலுக்கு வருந்திகிறோம் 


யாரோ, இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரை கேட்டதுக்கு “அடியேன்” அப்படின்னு சொல்லியிருக்காரு.

நீ பூக்கள் மீது உறங்கினால் அது ஃபர்ஸ்ட் நைட். உன் மீது பூக்கள் உறங்கினால் அது லாஸ்ட் நைட். இதான் லைஃப்போட ட்ரூவாலஜி!

இந்த உலகத்தில் காதலிக்கிறவனை ஒரு பர்சன்ட் பொண்ணுங்கதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. மத்தவங்க எல்லாரும் பசங்க இமெயில் ஐடிக்கு பாஸ்வேர்டா மாறிடுறாங்க.

அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..?
ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா

தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....


விஜய் : சன் டிவி மேல கேஸ் போடனும்
எஸ் ஏ சி : ஏன் என்னாச்சி
விஜய்: என் அடுத்த படம் வெற்றி பெறும்னு சொன்னதை விளையாட்டு செய்திகளில் காமிச்சிட்டாங்க


நடிகரெல்லாம் நாடாளா முடியுமா எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கிறேன்'

'
நாங்கள் நாடாள்வது இருக்கட்டும் உங்களால் ஒரு பாட்டுக்கு அசினுடன் ஸ்பீடா டான்ஸ் ஆட முடியுமா?'

திங்கள், 27 மே, 2013

பர்பிள் கேப், ஆரஞ்சு கேப் மற்றும் பெரிய ஆப்பு!!!!!



எனது இந்த பதிவை படிக்கும் முன் நான் இந்தியா கிரிக்கெட்டை பற்றி எழுதின ஒரு பதிவை படித்துவிட்டு வாருங்கள் (http://flypno.blogspot.ae/2011/04/blog-post_11.html ).

நேற்று நடந்த இறுதிப்போட்டியில், பர்பிள் கேப், ஆரஞ்சு கேப் என்று அனைத்து கேப்பையும் வைத்திருந்த அணிக்கு மும்பை அணி பெரிய ஆப்பை வைத்துவிட்டது!!!!!!!!!!!! இதுல என்ன ஒரு கொடுமைனா, சென்னை போராடி தோல்வியாம்??? இப்படி எழுத வெட்கமா இல்லை? அப்புறம் நம்ம தலை தோனி கடைசிவரை போராடினாராம்??????? தூ!!!!!!!!!!!!!!! ஒரு விஷயம் நீங்க எல்லோரும் கவனிக்கணும், தோனியை போர்த்தவரை இவர் தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாடினாள் சற்று முன்னர் போயி இவரும் தான் பங்கிர்க்கு சாத்திவிட்டு பெயர் வாங்கிக்கொள்வார், தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடவில்லை என்றாள் இவர் கடைசியில் இறங்கி தடவி தடவி ரன் எடுத்து அப்பொழுதும் இதோ பாருப்பா நான் விளையாடிட்டேன் மத்தவந்தான் விளையாடலை என்று அப்பவும் பேர் வாங்கிக்கொள்வார், இது ஒரு விளையாட்டு தந்திரம், இது தெரியாமல் தருதலைக்கு விசில் வேற போடணுமா!!!!!!!! நீங்க எல்லாம் என்னைக்குதான் திருந்த போறீங்கன்னு தெரியலை?????????????????? முகநூலில் இதை விட கொடுமை சென்னை கப் என்று பெயரை மாத்தா வேண்டுமாம்????

இன்று இந்த ஐ‌பி‌எல் போட்டிகளில் நடக்கும் சூதில் இதில் பங்குபெறும் அனைத்து அணியினருக்கும் தொடர்பு இருக்கும் என்பதில் எனக்கு எந்த மாறுகருத்தும் கிடையாது. என்னதான் தோனியை ஒரு கூல் கேப்டன், மனுஷன் என்று சொன்னாலும், இவரை விட இவன் ரொம்ப நல்லவன் என்று சொல்லக்கூடிய ஒரு கேப்டன் மனிதர் இருந்தார் அவர் தற்பொழுது இறந்துவிட்டார், ஆம். தென்னாபிரிக்கா அணியின் தலைவராக இருந்த ஹான்சி குரோனே இவரை அவ்வளவு சீக்கிரம் நீங்கள் யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். கூல் மனிதன் என்றாள் அது இவர்தான் அதற்க்கு பிறகுதான் இந்த தோனி, கப்பல் எல்லாம் வருவாங்க. கடைசியில் இவரின் கதி என்ன ஆயிற்று? அப்புறம் நம்ம இந்திய அணியை இந்த அளவிற்க்கு வளரவைத்தவரும், இன்று நூறு சதம் கந்தவரையும் வளர்த்துவிட்டவருமான நம்ம அஜாருதீன் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லக்கூடிய வாயெல்லாம் கடைசில காரிதுப்பியதுதான் பாக்கி!!!!!!!!!!!!!!!! இப்படி இந்த சூதாட்டத்தில் சிக்கிய வீரர்கள் ஏராளம்.

இதில் அதிகமாக மற்ற நாட்டு வீரர்கள் செய்திகள் வெளியே வருவதில்லை, ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் மாட்டினால் மட்டும் உடனே உலகில் உள்ள அத்தனை மெடியாக்களும் மிட்டாய்யை ஈ மொய்க்கிறமாதிரி மொய்ப்பாங்க!!!!!!!!!!! ஒரே காரணம் அவர்கள் முஸ்லீம்கள்!!!!!!!!!!!! ஏன் உலகக்கோப்பை முடிந்த வருடம் என்று நினைக்கிறேன், இந்திய அணி இலங்கையில் விளையாடி படும் தோல்வி கந்தது அப்போது சுரேஷ் ரைநா ஒரு பெண்ணுடன் ஊரு சுற்றியதாக ஒரு செய்தி வெளியானது ஆனால் அடுத்த நாளே அந்த செய்தி வந்ததற்க்கு எந்த ஒரு தடயமும்  இல்லை.

கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பது எல்லாம் இந்திய அணி உருவாவதற்க்கு முன்னர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் எல்லாம் கோடிகளில் புறளும் கேடிகள். பொய்பித்தலாட்டம்லஞ்சம்ஊழல்பேராசை, நாட்டுப்பற்று இல்லாமை, பணத்துக்காக கொலைகொள்ளை, Cheer leaders ஆபாச நாட்டியம்குடி, கூத்து, கும்மாளம், என எல்லாம் நீக்கமற நிறைந்த காரணத்தினால்தான் கிரிக்கெட்டையேவெறுக்கிறார்கள் பலர்...! இது சரியா..?

இங்கே கிரிக்கெட்டையும்அதனை ஆக்கிரமித்துள்ள அரசியல்+முதலாளித்துவத்துவம் மூலம் மக்களின் பணத்தை சுரண்டி வயிறு வளர்த்துவாதம் கண்டு வாய் கோனும் அரசியல்வாதிகளை... மக்களுக்கு நன்கு பிரிக்கத்தெரிந்து இருக்கிறது..!

யாருக்குமே கிரிக்கெட் அரசியல் சாக்கடை பிடிக்கவில்லைதான். ஆனால்பாமர ரசிகர்ளுக்கு கிரிக்கெட் எனும் விளையாட்டு பிடித்திருக்கிறது. அது சாக்கடையில் கிடந்தாலும்...!'அதை அந்த 'அரசியல் ஊழல் சாக்கடை'யிலிருந்து வெளியே எடுத்து கழுவி சுத்தமாக்கி நம் கையில் யாரேனும் கொடுக்க மாட்டார்களா' என்றுதான் ரசிகர்கள் ஏங்குகிறார்கள்... 'பந்தை சாக்கடையில் விழும்படி தவற விட்டுவிட்ட அழும் குழந்தைகள் போல...!'

"சாக்கடையில் விழுந்துட்டுதா...விட்டுத்தொலை... இனி பந்து ஒரு கேடா உனக்கு... வேண்டாம் அதை மற..!" என்றால் குழந்தை அழ ஆரம்பிக்கும்..!  நெகடிவ் ஓட்டு குத்தும்..! பின்னூட்டத்தில் வசை பாடும்..! அப்புறம், நாம் கவனிக்காத சமயம் சாக்கடையில் இறங்கி பந்தை எடுக்க ஆரம்பிக்கும்..! இதற்கு ஒரே வழி... சாக்கடையில் பந்து விழுவதை தடுப்பது மட்டுமே..! இதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும்..!

தனியாரிடம் உள்ள கிரிக்கெட்டை இனி அரசுப்பூர்வமாக்க வேண்டும். அதன் லாபம் அரசு கஜானாவுக்கு (அதாவது மக்களுக்கு) மட்டுமே போக வேண்டும்..!

(பூனைக்கு யாராவது மணிகட்டியே ஆகவேண்டும். பூனையை கொல்வது அறிவீனம். அது இயலாத காரியம்)

அதாவது... கிரிக்கெட் வாரியத்தை இனி மத்திய அரசே ஏற்று நடத்துவதன் மூலம், அரசுக்கு ஏராளமான நிதி கிடைக்கும். இந்த நிதியை நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். இரு வருடங்களுக்கு முன்னர் Indian Hockey Federation-ஐ ஊழல் காரணமாய் அரசு கலைத்து விட்டது. கடுப்பான அதன் அதிகாரிகள் சென்ற வருடம் தனியாக Hockey India என்று (BCCI போல) ஒரு தனியார் வாரியம் துவக்கி விட்டனர். அரசு அதை நிராகரித்து விட்டது. 'இனி ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு அல்ல' என்று ஆகிவிட்ட நிலையில்... அமோக மக்கள் ஆதரவுள்ள கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக அங்கீகரித்து அதை அரசுடைமை ஆக்கிகொள்ள நல்ல வாய்ப்பு! விடுவாரா சரத்பவார்? யாராவது பொதுநல வழக்கு போடலாம். 

தமிழ்நாட்டு பட்ஜெட்டுக்கு டாஸ்மாக் தோள்கொடுப்பது போல...
இனி... இந்தியநாட்டு பட்ஜெட்டுக்கு கிரிக்கெட்..! ---இதிலென்ன தவறு..?