OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 20 செப்டம்பர், 2012

உட்கார்ந்து யோசிச்சது







வித்தியாசம்:-
மனிதனுக்கும், மொபைலுக்கும் சின்ன வித்தியாசம்தான்???
மனிதனுக்கு கால் இல்லைனா பேலன்ஸ் பண்ண முடியாது!
மொபைல்ல பேலன்ஸ் இல்லைனா கால் பண்ண முடியாது!!!

நோட்புக்கிர்க்கும், ஃபேஸ்புக்கிர்க்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்,
நோடெபுக்குள டீச்சர் மட்டும்தான் கரெக்ட் பண்ண முடியும், ஆனால் ஃபேஸ்பூக்குள டீச்சரையே கரெக்ட் பண்ணலாம்!!!!!!!!!!!!!!!!

அழகான பொண்ணு:-
அழகான பொண்ணுங்க எப்பவுமே ஒல்லியாதான் இருப்பாங்க, ஏன் தெரியுமா? பாய்பிரெண்ட் காசுல சாபுட்டா உடம்புல ஓடாது!!!!

எல்கேஜி பாய்ஸ் நக்கல்:-
பாய் 1:- மச்சான் என் லவ்வர் சுமோக் பண்ணா கேன்சர் வரும்னு சொல்றாடா !
பாய் 2:- மச்சி அவ போயி சொல்றாடா, சுமோக் பண்ண புகைதான் வரும்.

புலிகேசி:-
ராஜா: ஏன் அவனை அடிக்கிறீங்க?
மந்திரி: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லீட்டான்.
ராஜா: அடேய்… மங்குனி மந்திரியாரே நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...! கக்கக்கா… கிக்குக்கா…
மந்திரி: அதைத்தான் சொல்லீட்டான் மாங்கா மன்னா ...!

சந்தானம் சங்கம்:-
மிஸ்டு கால் குடுக்குற பொண்ணுங்களை விட, ஒண்ணுமில்லாத sms அனுப்புர பிரெண்ட் பெஸ்ட்.

நம்பிக்கை :-
கழுதை:- என் முதலாளி என்னை ரொம்ப அடிக்கிறான்.
நாய்:- அப்பா எங்கேயாவது ஓடிபோக வேண்டியதுதானே?
கழுதை:- அபப்டிதான் நினைத்தேன் ஆனா, முதலாளி அவன் பொண்ணு எப்ப மார்க் சரியாக வாங்கினாலும் கழுதைக்குதான் கட்டிவைப்பேன் என்று சொல்கிறான் அதான் கொஞ்சம் வெயிட் பண்றேன். (நம்பிக்கை தான் வாழ்க்கை).

ஒரு மெசேஜ்:-
“இந்த உலகத்தில் உன்னை ஒதுக்க யாருமே இல்லை, ஏன் உன் எதிரிக்கு கூட நீ வேண்டும் உன் கூட சண்டை போடுவதற்க்கு, எனவே வாழ்க்கை அற்புதமானது, அதை பாசிடிவா தொடங்கு”.

ஒரு மொக்கை:-
எலி சாப்ட்டு மிச்சம் வைத்த சாதம் என்ன தெரியுமா?

தெரியலையா??

அதாங்க, “எலிமிச்ச சாதம்“

வாழ்க்கை தத்துவம்:-
1.   Unity இல்லாதவன் கூட வேணும்னா வாதம் பண்ணலாம், ஆனால் “maturity” இல்லாதவன் கூட வேதம் கூட ஓத கூடாது.
2.   நாம் கூறுகின்ற கருத்து என்பது நம்ம கையில் கட்டிக்கிற வாட்ச் மாதிரி, ஒவ்வொருதருக்கு ஒரு விதமாதான் மணி காட்டும், ஆனா எல்லோரும் அவுங்க டைம் தான் சரின்னு சொல்லுவாங்க.
கணவன் மனைவி ஜோக்:-
மனைவி:- எங்க சொர்காத்துல கணவன் மனைவி சேர்ந்திருக்க முடியாதாமே?
கணவன்:- அதனாலதான் அதுக்கு பேர் சொர்கம்!!!!!!!!!!!!!!!!

மனைவி (போனில்):- என்னங்க இன்னைக்கு ரசம் வைக்கவா, இல்ல கொழம்பு வைக்கவா?
கணவன்:- முதல்ல எதையாவது வை, அப்புறம் பேர் வைக்கலாம்!!!

ஒரு பொண்ணு ரோட்ல தனியா வரா, அப்ப
ரவுடி: என்னமா இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டே...
பொண்ணு:- கண்ணா பொண்ணுங்கதான் கூட்டமா வரும், ஐட்டம் சிங்கிலாதான் வரும்.


இறுதியாக நம்ம தமிழ் சினேமாவை பற்றி:-



தமிழ் சினேமாவை பொறுத்தவரை எல்லாமே காமெடிதாங்க,

“கில்லின்னு சொன்னாங்க படத்துல ஹீரோ கபடி ஆடுறார். போக்கிரின்னு சொன்னாங்க ஆனா போலீசா இருக்காரு, அழகிய டமிழ்மகண்ணு சொன்னாங்க கடைசிவரைக்கும் அது யாருன்னு காட்டவே இல்லை, இதுகூட பரவாயில்லைங்க குருவிண்ணு சொன்னாங்க தேட்டர்ல ஒரு காக்கா கூட இல்லை, சரி வேட்டைக்காரன்னு பார்த்த ஆட்டோக்காரனா வரார், சுரான்னு சொல்லிட்டு கருவாட்ட காட்டுராங்க...............!!!!!!!!!!!!!!!!!!!!!!
சாத்தியமா சொல்ல்ரெங்க நான் விஜயை கிண்டல் பண்ணலையே……!!!!!!!!!!!!!!!!!!!!!!

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

எங்கே போனார்கள் பதிவர்கள் எல்லாம்?



ஏதோ ஒரு இஸ்லாமிய பதிவர், தங்கள் லீலைகளை எல்லாம் சிரிப்பாக சிரிக்க வைத்து விட்டார் என்று கொஞ்ச நாளைக்கு முன்னர் குதியோ குதி என்று குத்தித்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்!!!!!!!!!!!!!!!!

இன்று அதே ஒரு இஸ்லாமிய சமூகத்தின் உயிரினும் மேலான ஒருத்தரை கேவலப்படுத்தி ஒருத்தன் சினிமா எடுத்துள்ளானே. அதுகுறித்து ஏதாவது ஒருத்தர் எதிர்ப்பை காட்டவில்லையே ஏன்? நாம் ஏன் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்?
இதே ஒரு நடிகனுக்கு ஏதாவது ஒன்று என்றால், அந்த வாரம் முழுவதும் அதுதான் அவர்கள் வலைபூக்களில் செய்தி, அந்த நடிகை அவருடன் இருந்தார், இவருடன் இருந்தார் என்றுதான் உங்கள் பதிவுகள் தொடர்கின்றன. அப்ப அப்ப சில நல்ல செய்திகள். தமிழர்கள் கொல்லப்பட்டால் இவர்களுக்கு பயங்கர குஷிதான், ஏன் தெரியும் அதை வைத்து ஒரு வாரத்தை ஒட்டலாமே!!!!!!!!!!!! அப்படி ஒன்றுமில்லை என்றால் இருக்கவே இருக்கு சினிமா விமர்சனம். ஆளாளுக்கு ஆரம்பித்து விடுவார்கள் உலக சினிமா, உதவாகரை சினிமா என்று!!!!!!!!!!!!!

உங்களிடம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் எதிர்ப்புகளை காட்ட வேண்டாம், அந்த நாதாரி வெளியிட்டுள்ள படத்தை பார்த்து அதையும் உலக சினிமா என்று சொல்லி விடாதீர்கள்!!!!!!!!!!!!!!!! மேலும் அதனுடைய லிங்கை கூட வெளியிடாதீர்கள்.

நீங்கள் உலகிர்க்கு தெரியவேண்டும் என்பதர்க்காக எதையும் செய்ய துணியாதீர்கள்.