OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 3 நவம்பர், 2011

பெருநாள் வாழ்த்துக்கள்....

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பார்ந்த வாசகர்களே, நாளை முதல் எனக்கு விடுப்பு தொடங்க இருப்பதை 
முன்னிட்டு என்னுடைய பெருநாள் வாழ்த்தை............இன்றே கூறிகொள்கிறேன்.




உண்மையைச்சொல்லப்போனால் அனைவரின் மனதிலும் ஒரே விதமான
மகிழ்ச்சி குடியேறியிருக்கும் போது நேரம் போவது தெரியாதுதானே.

சந்தோசத்தில் மிகப்பெரிய சந்தோசமே மற்றவர்களை சந்தோசப்படுத்திப் 

பார்ப்பதுதான் என்று சொல்வது போல். இந்த நாளில் நம்மால் இயன்ற அளவு, 
நம்மை சுற்றி ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து, அவர்களும் பெருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு உதவி செய்வோமாக.


இதே மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து

 கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்.

இந்த நன்னாளில் நாமும், நமது குடும்பமும் மற்றும் நம்மை சுற்றியுள்ள 

அனைவரும் அனைத்து வளங்களையும் பெறவும், நமக்கு வரும் பிரச்சனைகளை லேசாக்கி, தீர்த்து வைக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

புதன், 2 நவம்பர், 2011

லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'




மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...கதாஃபி...(லிபிய மக்களுக்கு) மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..! தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாதவரை..!

இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..!அவற்றில் சில உங்கள் 
ஆச்சர்ய பார்வைக்கு..!