நேற்றைய தினமும் அதற்க்கு முந்தைய நாள் நடந்த இரண்டு ஐபிஎல்
போட்டிகளை பார்த்தால் தெரியும் இது அப்பட்டமான ஏமாற்று வேலை மற்றும் பக்காவான நிர்ணயிக்கப்பட்ட
ஒரு விளையாட்டு என்று.
1. அதாவது முதல் ஆட்டத்தில் கோல்கத்தாவிர்க்கு நிர்ணயிக்கப்பட்ட
இலக்கு 15.2 ஓவர்களில் 161 ஓட்டங்கள் எடுக்க வேண்டும், இது சாத்தியமே என்று வைத்துக்கொண்டாலும் அதை யூசுஃப் பதான் அடித்தது கண்டிப்பாக
இது ஒரு மேட்ச் பிக்ஸிங்க் என்பது நிருபணமாகின்றது எப்படி? யூசுஃப்
பதான் கடந்த ஓராண்டுக்கு மேலாக அதிகளவில் போட்டிகளில் பங்குபெறவில்லை மேலும் அவர் இது
வரை ஆடிய ஆட்டங்களை பார்த்தால் தெரியும் அவர் கொஞ்சம் கூட பார்மில் இல்லை என்று ஆனால்
அவர் அடித்து இலக்கை அடைகிறார்.
2. அடுத்து நேற்றைய தின ஆட்டமும் இதே மாதிரி மும்பை அணி 14.3 ஓவர்களில்
190 ஓட்டங்கள் வேண்டும், இதுவும் ஒரு பேச்சுக்கு சாத்தியம் என்று வைத்துக்கொண்டாலும்
இங்கேயும் அதே மொள்ளமாரித்தனம்தான் இது வரை ஒரு ஆட்டங்களில் சாதிக்காத கொஞ்சம் கூட
பார்மில் இல்லாத கோரி ஆண்டேர்சன் அதை நிகழ்த்துகிறார்.
3. மேலும், கடந்த 20-20 உலகக்கோப்பை
வரை பயங்கர பார்மில் இருந்த விராட் கோஹ்லி படுபயங்கரமாக சொதப்பி வருகிறார்.
இதையெல்லாம் வைத்து பாருங்கள் இது எல்லாமே முன்னாடியே நிர்ணயிக்கப்பட்டது.
இந்த மெச்சில் இந்த வீரர்தான் விளையாடனும் அப்படினு குதிரை ரேஸில் பணம் காட்டுவது போன்று
கட்டிவிட்டார்கள் அப்படி அந்த வீரர்கள் தப்பித்தவறி கேட்ச் குடுத்தாலும் பிடிக்க கூடாது
இதுதான் மேட்ச் பிக்ஸிங்க் இதுதான் ஐபிஎல். மேலும் அருமையான வீரர்களைக்கொண்ட டில்லி
அணி ஏன் தோல்வியை மட்டுமே தழுவிக்கொண்டு இருக்கின்றது அதற்க்கும் கட்டிவிட்டார்கள்
பணத்தை அது தெரியக்கொடாது என்றுதான் முதல் இரண்டு ஆட்டங்கள் ஜெயித்து மக்களை நம்பவைத்தார்கள்.
#ஐபிஎல் இவங்களே வைப்பாங்கலாம், இவங்களே எடுப்பாங்கலாம்.