OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 31 மே, 2012

முஸ்லிம் ! இந்தியாவிலே முதலிடம்!!

 

இம்பால்: மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)-2012 ஆம் ஆண்டிற்கான 12-வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தை மணிப்பூரைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் முஹம்மது இஸ்மத் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.

முஹம்மது இஸ்மத் சி.பி.எஸ்.இ +2 தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்களை (99.6%) பெற்றுள்ளார். இவர் மணிப்பூர் மாநிலம் தவ்பால் மாவட்டத்தில் லிலாங்கில் Haoreibi MayaiLeikai என்ற ஊரைச் சார்ந்தவர். இவரது தந்தை மவ்லானா பஸீருர் ரஹ்மான் ப்ரமைரி மதரஸா ஆசிரியர் ஆவார். தாயார் இஸ்மத்தின் சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார்.

7 சகோதரிகளை கொண்ட இஸ்மத் குடும்பத்தில் கடைசி நபர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதும் இஸ்மத் படிப்பில் கெட்டிக்காரர். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?இவர் வசிக்கும் கிராமத்தில் தினமும் 2 அல்லது 3 மணிநேரமே மின்சாரம் இருக்கும். இதனால் அவர் தனது பெரும் பகுதி நேரத்தை பள்ளிக்கூடத்திலேயே கழிப்பார். தினமும் 8 to 10 மணிநேரம் படிப்பார்.

இவர் ஸெனித் அகாடமியில் பயின்று வந்தார். இஸ்மத்துக்கு +2 பயிலத் துவங்கும் பொழுது ரெஜிஸ்ட்ரேசன் ஃபீஸ் கட்ட இயலாத சூழல் இருந்தது அவரது நிலைமையை புரிந்துகொண்ட ஸெனித் அகாடமியின் செயலாளர் எஸ்.எம்.சிங், கட்டணத்தை செலுத்தியுள்ளார். மேலும் அவருக்கு படிப்பதற்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இஸ்மத் உடல்ரீதியாக பலவீனமானவர் என்பதால் நீண்ட படிப்பதையும் அவர் கைவிடும் சூழல் உருவானதாக எஸ்.எம்.சிங் கூறுகிறார்.

இவரது தந்தை கூறுகையில்,இஸ்மத்தின் பலவீனமான உடல்நிலையும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையும் கல்வி கற்க தடைக் கற்களாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது மகன் இத்தகைய தடைகளை தாண்டி வெற்றியை ஈட்டியுள்ளதற்கு உதவிய அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாக கூறினார்.

இஸ்மத் டெல்லியில் உள்ள ஸ்டீஃபன் கல்லூரியில் பயில விரும்புகிறார். இயற்பியல்(பிசிக்ஸ்) பாடத்தை பயின்று விஞ்ஞானியாக மாறவேண்டும் என்பதே இஸ்மத்தின் நோக்கமாகும். மேலும் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்த பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதவேண்டும் என்பதும் அவரது ஆர்வமாகும்.

ஸெனித் அகாடமி அவரது அடுத்த கட்ட படிப்பிற்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் அளிப்பதாக தெரிவித்துள்ளது. லிலாங் தொகுதி எம்.எல்.ஏவும் மாநில விவசாய அமைச்சருமான முஹம்மது அப்துல் நாஸிர் ரூ.1,11,111 பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.

இஸ்மத் தனது வெற்றியின் சூத்திரமாக கூறுவது என்னவெனில், “ஒருவர் தனது ஆசையை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நோக்கி அவரது நடவடிக்கைகள் அமையவேண்டும். ஆடம்பரமாக நவநாகரீகமாக வாழ்வதை விட எளிமையாக வாழ்வதிலும், அதிகமாக சிந்திப்பதிலும் ஒருவர் கவனம் செலுத்தவேண்டும். ஒரு மனிதன் தீர்மானித்து செயல்பட்டால் எல்லாம் சாத்தியமே.” என்றார்.!

புதன், 30 மே, 2012

எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்கள்............!!!!!!!!!!!!!!!!!



இன்று உலகத்தில் எங்கு எடுத்து கொண்டாலும்
, ரத்த சொந்தமே இல்லாத ஒரு உறவு என்றாள் அது நட்பு என்கின்ற உறவுதான். இதை யாராலும் மறுக்கமுடியாது, உலகில் எவ்வளவு பெரிய கெட்டவனாக ஒருவன் இருந்தாலும், அவனையும் நேசிக்கும் ஒரு நண்பன் இருப்பான்.


இப்படி நட்பு என்பது எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் வரும். ஆனால் இந்த நட்பை பார்தீங்கன்னா மூன்று காலகட்டமாக பிரிக்கலாம். முதலில் நாம் வீட்டை விட்டு வெளியில் விளையாட ஆரம்பிப்போம், அப்பொழுது நமக்கும் பக்கத்து வீட்டில் உள்ளவனுக்கும் இடையில் ஏற்படும் அதுவே காலப்போக்கில் பள்ளிக்கூட நட்பாக மாறிவிடும், இந்த நட்பானது எப்படியும் பள்ளிக்கூட வாழ்க்கை முடியும்வரை தொடரும், அதாவது 12-ம வகுப்பு வரை, பிறகு சில பேர் அதை அப்படியே கல்லூரிகளிலும் தொடர்வார்கள், இது இரண்டாம் கட்டம், கல்லூரிகளில் இன்னும் வெவ்வேறு திசைகளில் உள்ளவர்களும் நட்ப்பாவார்கள், ஆனால் அவர்கள் எல்லாம் கல்லூரி நாட்கள் முடிந்தவுடன், வெறும் தொலைபேசியிலும், இமெயில் களிலும்தான் தொடர்வார்கள் அதுவும் காலபோக்கில் குறைந்துவிடும் ஆனால் மறைந்து விடாது, இதில் கடைசியாக பார்த்தால் கல்லூரி முடிந்து வேலைக்கு போகுமிடத்தில், இதில் வயதுவித்தியாசம் எல்லாம் கிடையாது, இப்படி இந்த மூன்றிலும், கடைசிவரை நிலைத்து நிற்பது, நமது பள்ளிக்கூட காலங்களில்  நமக்கு கிடைத்த சொந்த ஊர் நண்பர்கள்தான், இந்த மூன்று நிலை நட்பில் பலப்பிரச்சினைகள் வரும், மனிதன் அத்தனை பெரும் ஒரு மாதிரி இருப்பதில்லை என்கின்ற கருதுப்படி பிரச்சினைகள் மாறி மாறி வரும்.

சில நண்பர்கள் எதற்கெடுத்தாலும் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள், நான் உனக்கு கால்  பண்னினேன், நீ எனக்கு திரும்பி பண்ணலையே, சிலபேர் எப்ப எது சொன்னாலும் வெறும் பொய் மட்டும்தான் பேசுவார்கள், இன்னும் சிலர் நிறையவிசயங்களை பகிர்ந்துகொள்ளவே மாட்டார்கள், ஒரு நல்ல விஷயம் நடந்தாலும் தெரிவிக்கமாட்டார்கள், இன்னும் சில பேர் இருக்கிறார்கள், நண்பர்களிடையில் போட்டுக்குடுத்து கொண்டு குளிர்காய்வார்கள், இது போல நிறைய விஷயங்கள், இதுல உண்மையான நண்பன் புரிந்துகொள்வான். கடைசில பார்த்தா இதுல உண்மையா நட்பா இருக்கிறவங்க மட்டும்தான் மிஞ்சுவாங்க, மற்ற எல்லோரும் பிச்சிப்பாங்க.....................!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும் ஒரு உதாரணம், இரண்டு நண்பர்கள் ஒன்றாக இருந்தாலும், ஒருத்தன் இன்னொருதனுடைய தங்கையை காதலித்தால் நண்பந்தான் என்று ஏற்றுக்கொள்ள மறுப்பான்,ஏன் இந்த முரண்பாடு? ஒண்ணுமே தெரியாத ஒருத்தனுக்கு கட்டிக்குடுப்பதைவிட உன் நண்பனுக்கு கட்டிகுடுத்தால்  குறைந்தா போய்விடுவாய்? இதுல நம்பிக்கைதுரோகம் என்றெல்லாம் புழம்புவர்களும் உண்டு, இதில் கொடுமை என்னவென்றால் அவனும் யாரையாவது லவ் பண்ணுவான் அதற்க்கும் இவன்தான் உதவி செய்திருப்பான். அடுதவன் தங்கச்சியை பண்ணினால் லவ், இவன் தங்கச்சியை செய்தால் நம்பிக்கைதுரோகம், உங்க நேர்மை எனக்குக் பிடிதிருக்கு.

மற்றொன்று உயிருக்குயிராய் நட்பாய் இருப்பார்கள்,  சரி இவனுக்கு நமது தங்கையை கட்டிகுடுக்கலாம் என்று செய்தபின்பு, அவன் இவனிடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவான், இப்போ நட்பு என்ற பார்வையை விடுத்து மச்சான் (மனைவியின் அண்ணன்) என்று பார்ப்பான், இங்கே தான் மிக பெரிய பிரச்சனை ஆரம்பிக்கும், முன்னர் நண்பனாக தெரிந்தவன் இப்பொழுது உறவுக்காரன், இப்போ இவன் எது சொன்னாலும் கேட்கமாட்டான். நான் புடிச்ச முயலுக்கு மூணு காலூன்னு நிப்பாங்க.

அதனால நட்புன்னு வந்துட்டா, பிரித்து பார்க்க கூடாது, அதுக்காக கூட இருந்துகொண்டே கழுத்தை அறுக்கும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள் அவர்களை பிரித்துதான் பார்க்கவேண்டும், உதவி செய்ய முடியாலைனாலும், கெடுதல் நினைக்காமல் இருந்தாலே போதும், அதுவே மிக பெரிய உதவி.

என்றும் நட்புடன்...........................