OnlinePJ

Thanks for Visiting my Page
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 மே, 2013

பர்பிள் கேப், ஆரஞ்சு கேப் மற்றும் பெரிய ஆப்பு!!!!!



எனது இந்த பதிவை படிக்கும் முன் நான் இந்தியா கிரிக்கெட்டை பற்றி எழுதின ஒரு பதிவை படித்துவிட்டு வாருங்கள் (http://flypno.blogspot.ae/2011/04/blog-post_11.html ).

நேற்று நடந்த இறுதிப்போட்டியில், பர்பிள் கேப், ஆரஞ்சு கேப் என்று அனைத்து கேப்பையும் வைத்திருந்த அணிக்கு மும்பை அணி பெரிய ஆப்பை வைத்துவிட்டது!!!!!!!!!!!! இதுல என்ன ஒரு கொடுமைனா, சென்னை போராடி தோல்வியாம்??? இப்படி எழுத வெட்கமா இல்லை? அப்புறம் நம்ம தலை தோனி கடைசிவரை போராடினாராம்??????? தூ!!!!!!!!!!!!!!! ஒரு விஷயம் நீங்க எல்லோரும் கவனிக்கணும், தோனியை போர்த்தவரை இவர் தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாடினாள் சற்று முன்னர் போயி இவரும் தான் பங்கிர்க்கு சாத்திவிட்டு பெயர் வாங்கிக்கொள்வார், தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடவில்லை என்றாள் இவர் கடைசியில் இறங்கி தடவி தடவி ரன் எடுத்து அப்பொழுதும் இதோ பாருப்பா நான் விளையாடிட்டேன் மத்தவந்தான் விளையாடலை என்று அப்பவும் பேர் வாங்கிக்கொள்வார், இது ஒரு விளையாட்டு தந்திரம், இது தெரியாமல் தருதலைக்கு விசில் வேற போடணுமா!!!!!!!! நீங்க எல்லாம் என்னைக்குதான் திருந்த போறீங்கன்னு தெரியலை?????????????????? முகநூலில் இதை விட கொடுமை சென்னை கப் என்று பெயரை மாத்தா வேண்டுமாம்????

இன்று இந்த ஐ‌பி‌எல் போட்டிகளில் நடக்கும் சூதில் இதில் பங்குபெறும் அனைத்து அணியினருக்கும் தொடர்பு இருக்கும் என்பதில் எனக்கு எந்த மாறுகருத்தும் கிடையாது. என்னதான் தோனியை ஒரு கூல் கேப்டன், மனுஷன் என்று சொன்னாலும், இவரை விட இவன் ரொம்ப நல்லவன் என்று சொல்லக்கூடிய ஒரு கேப்டன் மனிதர் இருந்தார் அவர் தற்பொழுது இறந்துவிட்டார், ஆம். தென்னாபிரிக்கா அணியின் தலைவராக இருந்த ஹான்சி குரோனே இவரை அவ்வளவு சீக்கிரம் நீங்கள் யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். கூல் மனிதன் என்றாள் அது இவர்தான் அதற்க்கு பிறகுதான் இந்த தோனி, கப்பல் எல்லாம் வருவாங்க. கடைசியில் இவரின் கதி என்ன ஆயிற்று? அப்புறம் நம்ம இந்திய அணியை இந்த அளவிற்க்கு வளரவைத்தவரும், இன்று நூறு சதம் கந்தவரையும் வளர்த்துவிட்டவருமான நம்ம அஜாருதீன் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லக்கூடிய வாயெல்லாம் கடைசில காரிதுப்பியதுதான் பாக்கி!!!!!!!!!!!!!!!! இப்படி இந்த சூதாட்டத்தில் சிக்கிய வீரர்கள் ஏராளம்.

இதில் அதிகமாக மற்ற நாட்டு வீரர்கள் செய்திகள் வெளியே வருவதில்லை, ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் மாட்டினால் மட்டும் உடனே உலகில் உள்ள அத்தனை மெடியாக்களும் மிட்டாய்யை ஈ மொய்க்கிறமாதிரி மொய்ப்பாங்க!!!!!!!!!!! ஒரே காரணம் அவர்கள் முஸ்லீம்கள்!!!!!!!!!!!! ஏன் உலகக்கோப்பை முடிந்த வருடம் என்று நினைக்கிறேன், இந்திய அணி இலங்கையில் விளையாடி படும் தோல்வி கந்தது அப்போது சுரேஷ் ரைநா ஒரு பெண்ணுடன் ஊரு சுற்றியதாக ஒரு செய்தி வெளியானது ஆனால் அடுத்த நாளே அந்த செய்தி வந்ததற்க்கு எந்த ஒரு தடயமும்  இல்லை.

கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பது எல்லாம் இந்திய அணி உருவாவதற்க்கு முன்னர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் எல்லாம் கோடிகளில் புறளும் கேடிகள். பொய்பித்தலாட்டம்லஞ்சம்ஊழல்பேராசை, நாட்டுப்பற்று இல்லாமை, பணத்துக்காக கொலைகொள்ளை, Cheer leaders ஆபாச நாட்டியம்குடி, கூத்து, கும்மாளம், என எல்லாம் நீக்கமற நிறைந்த காரணத்தினால்தான் கிரிக்கெட்டையேவெறுக்கிறார்கள் பலர்...! இது சரியா..?

இங்கே கிரிக்கெட்டையும்அதனை ஆக்கிரமித்துள்ள அரசியல்+முதலாளித்துவத்துவம் மூலம் மக்களின் பணத்தை சுரண்டி வயிறு வளர்த்துவாதம் கண்டு வாய் கோனும் அரசியல்வாதிகளை... மக்களுக்கு நன்கு பிரிக்கத்தெரிந்து இருக்கிறது..!

யாருக்குமே கிரிக்கெட் அரசியல் சாக்கடை பிடிக்கவில்லைதான். ஆனால்பாமர ரசிகர்ளுக்கு கிரிக்கெட் எனும் விளையாட்டு பிடித்திருக்கிறது. அது சாக்கடையில் கிடந்தாலும்...!'அதை அந்த 'அரசியல் ஊழல் சாக்கடை'யிலிருந்து வெளியே எடுத்து கழுவி சுத்தமாக்கி நம் கையில் யாரேனும் கொடுக்க மாட்டார்களா' என்றுதான் ரசிகர்கள் ஏங்குகிறார்கள்... 'பந்தை சாக்கடையில் விழும்படி தவற விட்டுவிட்ட அழும் குழந்தைகள் போல...!'

"சாக்கடையில் விழுந்துட்டுதா...விட்டுத்தொலை... இனி பந்து ஒரு கேடா உனக்கு... வேண்டாம் அதை மற..!" என்றால் குழந்தை அழ ஆரம்பிக்கும்..!  நெகடிவ் ஓட்டு குத்தும்..! பின்னூட்டத்தில் வசை பாடும்..! அப்புறம், நாம் கவனிக்காத சமயம் சாக்கடையில் இறங்கி பந்தை எடுக்க ஆரம்பிக்கும்..! இதற்கு ஒரே வழி... சாக்கடையில் பந்து விழுவதை தடுப்பது மட்டுமே..! இதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும்..!

தனியாரிடம் உள்ள கிரிக்கெட்டை இனி அரசுப்பூர்வமாக்க வேண்டும். அதன் லாபம் அரசு கஜானாவுக்கு (அதாவது மக்களுக்கு) மட்டுமே போக வேண்டும்..!

(பூனைக்கு யாராவது மணிகட்டியே ஆகவேண்டும். பூனையை கொல்வது அறிவீனம். அது இயலாத காரியம்)

அதாவது... கிரிக்கெட் வாரியத்தை இனி மத்திய அரசே ஏற்று நடத்துவதன் மூலம், அரசுக்கு ஏராளமான நிதி கிடைக்கும். இந்த நிதியை நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். இரு வருடங்களுக்கு முன்னர் Indian Hockey Federation-ஐ ஊழல் காரணமாய் அரசு கலைத்து விட்டது. கடுப்பான அதன் அதிகாரிகள் சென்ற வருடம் தனியாக Hockey India என்று (BCCI போல) ஒரு தனியார் வாரியம் துவக்கி விட்டனர். அரசு அதை நிராகரித்து விட்டது. 'இனி ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு அல்ல' என்று ஆகிவிட்ட நிலையில்... அமோக மக்கள் ஆதரவுள்ள கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக அங்கீகரித்து அதை அரசுடைமை ஆக்கிகொள்ள நல்ல வாய்ப்பு! விடுவாரா சரத்பவார்? யாராவது பொதுநல வழக்கு போடலாம். 

தமிழ்நாட்டு பட்ஜெட்டுக்கு டாஸ்மாக் தோள்கொடுப்பது போல...
இனி... இந்தியநாட்டு பட்ஜெட்டுக்கு கிரிக்கெட்..! ---இதிலென்ன தவறு..?

புதன், 3 அக்டோபர், 2012

இது தேவையா?


20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்



நேற்று நடந்த வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியா அணி தனது வாழ்வை இழந்து, தனது அண்டை (சண்டை) நாடான பாகிஸ்தானை அறை இறுதிபோட்டிக்கு அனுப்பியுள்ளது.

இந்த போட்டியில் இந்தியா அணி தென் ஆப்பிரிக்கவை 121 ரன்களுக்குள் காட்டுபடுத்த தவறியதால் இந்தியா அணி அறை இறுதி வாய்ப்பை கைவிட்டது.

இந்த முறை தோனியின், பாச்சா பலிக்கவில்லை ஏன்? வீரர்களை நம்பாமல் ஜோசியத்தை நம்பி, உலககோப்பையை வென்ற அனிதான் வெற்றிபெறும் என்ற தலைகனத்தில் போனால் இப்படிதான் நடக்கும், இந்த உலககோப்பை ஆரம்பிக்கும்போது கபில் தேவ் சொன்னது இதுதான், ராசி பார்த்து தனது அணியின் உடையை மாற்றாமல் விளையாடின நம்ம தோனியின் அறிவை என்னவென்று சொல்வது. இதில் பாதிப்பேர் கடந்த 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பின் விளையாடி பார்க்கவே இல்லை, அப்படி இருக்கும் போது எப்படி ராசி செல்லுபடியாகும் இது என்ன மாங்காத்த விளையாட்டா?.

எப்போதும் கூல் கூல் என்று எல்லோரோலும் வருணிக்க கூடிய நம்ம தலை தொனியுடைய கூல் முகத்தை நீங்க பார்க்கணும் (கீளே):-

இது தேவையா?




இந்த உலககோப்பை ஆரம்பம் முதல் பார்த்தாலே தெரிந்துவிடும் நம்ம BCC அணியின் லட்சணம். ஏதோ கடமைக்கு விளையாடுறாங்க, இதே ipl ஆக மட்டும் இருக்கட்டும் சும்மா சுத்தி சுத்தி அடிப்பாங்க!!!!!!!!!!!!!!!!! இதை எல்லாம் எழுதுறதுக்கே அசிங்கமா இருக்கு. என்ன பண்ணித்தொலைய!!!! நாமளும் பிளாக் வைத்துள்ளோமே.

இன்று அறை இறுதியில் நுழைந்த நான்கு அணிகளும் இது வரை மிக சிறந்த ஒரு ஆட்டத்தை வெளிபடுத்தினார்கள், நம்ம ஆளுங்க கொஞ்சம் கூட கஷ்டடபடாம ராசி பார்த்து வந்தார்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்றைக்குமே உழைப்புதான் கைகொடுக்கும், இதை யார் தோனிக்கு புரியவைப்பது. 

புதன், 21 மார்ச், 2012

பங்களாதேஷ் அணியினருக்கு வாழ்த்துக்கள்...........

 வரலாறு படைத்தது

10 -வது முறையாக ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்ற பங்களாதேஷ் அணி, முதல் முறையாக இறுதிபோட்டியில் நுழைந்தது. இதற்க்கு காரணம் அவர்களின் அணி ஒற்றுமைதான்...............(Team Spirit)




சத்தத்தில் நூறாவது சதம் கண்டும், இந்திய அணி மன்னித்தான் கவ்வியது, தமிழர்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்த இலங்கை அணி தோற்க்கத்தான் வேண்டும்.



என்றைக்கும் உல் நாட்டில் மட்டும் நன்றாக விளையாடு இந்திய அணியை பாராட்டுவதை விட, என்றென்றும் போராடி கொண்டிருக்கும் வங்காளதேச அணியை பாராட்டுவதில் எந்த தப்புமில்லை..................

இறுதிபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...........!!!!!!!!!!!!!!!!!!!!!

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

அமீரகதில் கிரிக்கெட் பார்த்த அனுபவங்கள்!!!!!


எனக்கு ரொம்ப நாளாவே ஒரு முறையாவது எதாவ்து பெரிய நாடுகள் கிரிக்கெட் விளையாடுவதை நேரடியாக ஸ்டேடியதில் பார்க்கவேண்டும் ஆசை. அந்த ஆசை நேத்துதாங்க நிறைவேறியது.

நேத்து நடந்த இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியை கண்டுகளித்தோம், மொத்தம் நான்கு ஒரு நாள் கொண்ட போட்டிதொடரில் மூன்று போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது, இதில் அந்த அணியின் தலைவர் குக் அவர்கள் இந்த மூன்று போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு இந்த தொடரை வென்றுள்ளார்.

திங்கள், 25 ஜூலை, 2011

அணிக்கு ஆடவில்லை பணம்தான் எனக்கு வேணும்

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற உலககோப்பையில் முதல் சுற்றில் வெளியேறியபோது இந்தியாவிற்கு இளம் வீரர்கள் தேவை.. அதற்க்கு புதிய அமைப்பு வேண்டும் என்று கபில்தேவ் ஐசில் தொடங்கினார்.. அதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கபிதேவிற்கு கண்டனம் தெரிவித்து மட்டும் அல்லாமால் அவரை இந்திய கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக தள்ளி வைத்தது . இந்தியாவையும் ஒரு தரமான அணியாக உலகத்திற்கு காமித்தவரை முற்றிலுமாக ஒதுக்கியது பிசிசிஐ .

அவர என்ன சொல்வது என்று தானாக ஐபில்  தொடங்கியது . முதலில் இந்திய இளம் வீரர்களை உருவாகுகிறேன் என்ற பேர்வழியில் தொடங்கிய அமைப்பு பிறகு சூதாட்டமாகவும் ,பணம் புழங்கும் இடமாகவும் வலம் வந்தது.

இப்போது ? இந்திய அணி மேம்படுவதற்காக தொடங்கிய அமைப்பு இந்திய அணியையும் , இந்திய வீரர்களையும் அளித்து கொண்டு இருப்பதை கண்கூடாக நடந்து கொண்டு இருக்கிறது.

ஐபில் விளையாண்டு பணம் சம்பாதித்து விட்டு வெஸ்ட் இண்டீஸ் செல்லமால் தனது நாட்டுபற்றை வீரர்கள் காட்டினார்கள்.


தற்போது விளையாடினாலும் விளையாடும் உடற்தகுதி அற்று இருகிறார்கள்.  இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் 13  ஓவர் வீசிய நிலையில் ஜாகிர் கான் கால் வலி என்று உட்கார்ந்து விட்டார்.  மூன்றாம் நாள் காய்ச்சல் என்று சச்சின் விளையாடவில்லை , தற்போது எலும்பில் அடி என்று கம்பீர் நாலாவது நாள் போய் உட்கார்ந்து விட்டார்.

இங்கிலாந்து வர்ணனையாளர்கள் இந்திய வீரர்களை கிழித்து கொண்டு இருகிராகள். லைவ் வர்ணனையில் இந்திய வீரகளுக்கு இந்திய அணியா? ஐபில் போட்டியா? எது முக்கியம் ? அனைவரும் ஐபில் போட்டியில் ஆர்வம் காட்டுகிறார்கள் .. இந்திய அணியை காட்டிலும் அதில் ஆடுவது தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் என்று சூடாக கிண்டலடிகிறார்கள். அவர்கள் மிக சரியாகதான் கிண்டல் அடிகிறார்கள்.  அருகே உட்கார்ந்து இருக்கும் கவாஸ்கர் , ஹர்சா, சாஸ்த்ரி, கங்குலியால் பதில் சொல்ல முடியவில்லை. வேறு விதமாக பேச்சை மாற்றி சமாளிக்கிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் செல்லாத வீரர்களை இனி அணியில் எடுக்க கூடாது என்று சொன்ன கவாஸ்கர் இந்த முறை வாயை திறக்க வில்லை. என்ன எச்சரிக்கை அவருக்கு இடபட்டதோ ?

எதுவோ.. இப்போது இருக்கும் இந்த தலைமுறை இந்திய வீரர்கள் நாட்டுக்காக ஆடுகிறேன் என்பதை விட பணத்திற்காக ஆடுகிறேன் என்பது அவர்கள் மனதிற்கு நிறைவாக இருக்கிறது. பிசிசிஐ பணம் புழங்கும் வரை வாய் திறக்காது .. வாயில் நாக்கிற்கு பதிலாக பணம் இருக்கிறது.






நன்றி : குணா



புதன், 1 ஜூன், 2011

கிரிக்கெட்டே வேண்டாம்




இந்த ஐ.பி.எல். பல புதிய திறைமகைள இந்திய கிரிக்கெட் உலகுக்கு
அறிமுகப் படுத்தியிருக்கிறது.அதில் முக்கியமானவர் இக்பால் அப்துல்லா.
ஷாருக்கின் கே கே ஆருக்காக ஆடுகிறார். இருபத்தொரு வயதாகிறது. இந்தப்போட்டிகளில் மலிங்காவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்களை எடுத்து பந்து வீச்சாளர்களில் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

இவையெல்லாம் இப்போது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிகள். ஆனால் வெளியில் அதிகம் தெரியாதது அவர் வளர்ந்த விதம். 

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

உலககோப்பையை வென்றது Board of Control Cricket for India (BCC) அணி...................

நேற்று நடந்த உலககோப்பை இறுதி ஆட்டத்தில்...................இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய BCC அணியினர் கோப்பையை வென்றனர்...................அணிவீரர்களுக்கு வாழ்த்துக்கள்.............................அந்த அணியின் தலைவர் சிறப்பாக விளையாடினார்............................இனி அவரை அணைத்து விதமான விளம்பரங்களிலும்..............பார்க்கலாம்................











செவ்வாய், 29 மார்ச், 2011

பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரீடி சொன்னது என்ன?

கடந்த சில நாட்களாக எந்த நியூஸ் சேனலை திறந்தாலும் இதுதாங்க செய்தி, பாகிஸ்தான் அணித்தலைவர் நம்மூர் சச்சினை பற்றி ஏதோ தவறாக சொல்லிவிட்டார் என்று.....................அவர் அப்படி என்னதான் சொன்னார்...........
அதாவது 


"எங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடக்கவிருக்கும் அரை இறுதியில், சச்சினை அவருடைய நூறாவது சதத்தை எட்டவிடமாட்டோம்" .

இதுதாங்க அவரு சொன்னது இதுல என்ன தப்பு இருக்குன்னு எனக்கு தெரியலை, இதை இந்த இந்திய மீடியாக்கள் ஏதோ அப்ரீடி சச்சினோட பொண்டாட்டிய இழுத்துட்டு ஓடினமாதிரி பேசுறானுங்க.................இதை ஏன் இந்த மீடியாக்கள் வேறு விதமாக பார்க்கவில்லை என்கின்ற கருத்தையும் அப்ரீடி இன்று தெரிவித்துள்ளார்...............

அதாவது ஒரு அணியின் தலைவராக நான் சொன்னது உண்மைதான், அதிலிருந்து வெளியே வந்தால் கண்டிப்பாக சச்சின் ஒரு தலைசிறந்த வீரர் என்பதில் அவருக்கு ஒரு போதும் சந்தேகமில்லை என்கிறார். அதுமட்டுமில்லை, இதியாவிற்கு எதிராக விளையாட கூடிய எந்த ஒரு நாட்டின் அணித்தலைவரும் சொல்லமாட்டார் நாங்க அவுங்களை நல்லா ரன் எடுக்க விடுவோம் என்று.............இது கூட புரியாத இந்த மூதேவி மீடியாக்கள் என்னமோ பெரிய போர் நடக்க போவதை போலதான் சித்தரிகிறார்கள்.  

ஒரு வேலை மற்றவர்களையும் நம்ம தோணி போல சொரணை கெட்டவனு நினைத்து விட்டார்களோ என்னமோ..............அப்புறம் இந்த மீடியாதான் இப்படினா இங்கே வலைபதிவு எழுதுறவங்க இருக்காங்களே அவங்க அதுக்கு மேல, எல்லா படிச்சவங்கதான்................ஆனால் அதுக்கு உண்டான அறிவு கொஞ்சம் கூட இல்லை......................

நான் ஏற்கனவே சொன்னது போன்று விளையாட்டை விளையாட்டா பாருங்க....................

ஞாயிறு, 13 மார்ச், 2011

இந்தியாவை கதற கதற க...........................த.................தென்னாப்பிக்கா............

நேற்றைய தினம் நாக்பூரில் நடந்து முடிந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை தென்னாப்பிரிக்க அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...........................இதை முழுவதும் எழுத தேவையில்லை என்னுடைய தலைப்பே சொல்லி இருக்கும்........................மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..........


ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

உலககோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானிடம், தமிழர்களின் பரம எதிரி இஅலங்கை படுதோல்வி.

தற்பொழுது, எங்கு பார்த்தாலும் இந்த உலககோப்பை கிரிக்கெட் மோகம் தொற்றி கொண்டுள்ளது, எவனை பார்த்தாலும் என்ன ஸ்கோர் எத்தனை விக்கெட் இதை பற்றிதான் பேசிகிட்டு இருக்கானுங்க.............
இந்த வலைபூவிலும் அதனை பற்றி எழுதிக்கொண்டுதான் இருகிறார்கள். என்ன வழக்கம் போல ஒன்றிரண்டு பேரை தவிர யாருமே இந்த பாகிஸ்தான் வெற்றிபெற்றால் மட்டும் எழுதுவதே கிடையாது இவங்களுக்கு ஏன் இந்த கொலை வெறின்னு தெரியலை. சரி அவனுங்களை விடுவோம் அவினுங்க எல்லாம் நடுநிசி நாய்கள் போன்ற செக்ஸ் படத்துக்கு விமர்சனம் எழுததான் லாயக்கு.

பாகிஸ்தான் Vs இலங்கை, 
நேற்றைய ஆட்டத்திற்கு முன்பாக, பல பாசிச பத்திரிகைகள் பாகிஸ்தான் அணி இலங்கையை எதிர்த்து வெல்லுமா???????? என்று மிகபெரிய கேள்விகளையும், கிண்டல்களையும் அவர்கள் பத்திரிகளில் எழுதி கிழித்தார்கள், அவர்கள் நினைத்து கொண்டார்கள், பாகிஸ்தானியரும் இவர்களை போன்று சாம்பார் தின்கிற ஆளுகள் என்று..............சரி நாம போட்டிக்கு வருவோம். 

நேற்றைய தினம் கொழும்புவில் நடைபெற்ற உலககோப்பையின் 10 வது போட்டியில் பாகிஸ்தானும் இலங்கையும் மோதின, இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பூம் பூம் அப்ரிடி பேட்டிங் தேர்வுசெய்தார். 


செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கிரிக்கெட் : பாகிஸ்தான் அணி வெற்றி

நிறைய வலைபதிவாளர்கள், உலகில் இந்தியா எங்கு போய் விளையாடி தோத்தாலும், சரி ஜெயித்தாலும் சரி அதை பற்றிய செய்திகளை எழுதுகிறார்கள், ஏன் மற்ற எந்த அணி விளையாடினாலும், அதை பற்றி கிறுக்குகிறார்கள்,. ஆனால் இந்த பாகிஸ்தானை பற்றி மட்டும் குறைகளை மட்டுமே எழுதுகிறார்களே தவிர அவிங்க ஜெயித்தாலும் எழதுறது கிடையாது, ஏன் இந்த கொலை வெறின்னு தெரியலை, விளையாட்ட விளாயாட்ட பார்க்காம ஏன் இப்படி வெறித்தனமா பார்க்குறீங்க.