OnlinePJ
திங்கள், 5 ஆகஸ்ட், 2013
நிஜமும், நிழலும்.
வியாழன், 2 ஆகஸ்ட், 2012
கீற்று வலைதளதில் உமர் கய்யானின் உளறல்கள் !!!!!!!!!
புதன், 9 மே, 2012
யோசிப்பாரா சுப்பிரமணியன் சுவாமி?
திங்கள், 19 மார்ச், 2012
இப்படியும் ஒரு பைத்தியம்!!!!!!!!!
செவ்வாய், 14 பிப்ரவரி, 2012
திங்கள், 30 ஜனவரி, 2012
சாபத்தை பெற்றுத்தரும் மவ்லித்துகளும்! அருளைப் பெற்றுத்தரும் ஸலாவத்தும்!!
சனி, 14 ஜனவரி, 2012
போதை பழக்கத்தால் பாதை மாறும் இக்கால மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்!!

“மது, ஹெராயின், கஞ்சா போன்றவை தான் போதை தரும்’ என கருதினால், நீங்கள் விவரம் தெரியாதவர்கள் என்று அர்த்தம்.
பள்ளி மாணவர்களிடம் கேளுங்கள், “பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர்’ என, எந்தெந்த பொருட்களில் போதை இருக்கிறது என, “கிறக்கத்துடன்’ கூறுவர்.
மதுரை ஒத்தக்கடையில், அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் ஒருவர், “கிறங்கி’ விழுந்தார். பல் உடைந்தும், முகத்தில் காயம் ஏற்பட்டும், தற்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரது இந்நிலைக்கு காரணம், “ஒயிட்னர்!’.
பெட்ரோல் விற்கிற விலையில், அதை வாங்கி, “மோப்பம்’ பிடித்து, போதை ஏற்ற முடியாது என்பதால், இவரை போன்ற சில மாணவர்களுக்கு, மலிவான விலையில் கிடைக்கும், “ஒயிட்னர்’ போதையை தருகிறது.
பள்ளி இடைவேளையின்போது, வெளியே வந்து, மூக்கால் ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு, பள்ளி முடியும் வரை, போதையுடன் இருக்கின்றனர். ஆசிரியர்கள் கண்டித்தும், மாணவர்கள் திருந்தவில்லை. போலீஸ் மிரட்டியும் பயப்படவில்லை. பெற்றோரும் கண்டிப்பதாக இல்லை.
இதுகுறித்து, அப்பகுதி எவர்சில்வர் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் வீரர்அலி கூறுகையில், “”பலமுறை மாணவர்களை கண்டித்து விட்டோம். திருந்துவதாக இல்லை. இவர்கள் மீது, பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருந்துவர்.
மாணவர்களுக்கு படிப்பை மட்டும் கற்றுத் தராமல், போதையால் ஏற்படும் விபரீதங்களையும், ஆசிரியர்கள் பாடம் எடுத்தால், மாணவர்கள் இதிலிருந்து விடுபட வாய்ப்புண்டு” என்றார்.
இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மூளை நரம்பியல் டாக்டர்கள் கூறுகையில், “”இதே போல் நகப் பூச்சு, பெயின்ட் போன்றவற்றை நுகர்ந்தும், போதை ஏற்றுகின்றனர். காரணம், அதில் உள்ள காரீயம். இது அதிகரிக்கும்போது, நரம்பு செல்களை பாதிக்கிறது.
தொடர்ந்து உடம்பில் இருந்தால், மூளை, தண்டுவடமும், மனநலமும் பாதிக்கப்படும். இவர்களிடம், “கவுன்சிலிங்’ செய்வதன் மூலம் திருத்த முடியும்” என்றனர்.
எப்படி தடுப்பது?
டாக்டரின் மருந்து சீட் இருந்தால் மட்டுமே, மருந்துக் கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். பெரியவர்கள் கேட்டால் மட்டும், மேற்கூறிய பொருட்களை கடை உரிமையாளர்கள் தர வேண்டும்.
அதே சமயம், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், கண்காணித்து கண்டிக்க வேண்டும். சரியில்லாத நண்பர்களிடம் நட்பு வைக்க அனுமதிக்கக் கூடாது.
இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டும், அவர்களை ஒழுக்கம் உடையவர்களாக, இச்சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக சிறு பருவம் முதலே இறை அச்சத்தையும்,மார்க்க கல்வியையும் அவசியம் போதிக்க வேண்டும்.
செவ்வாய், 6 செப்டம்பர், 2011
சைபர் க்ரைம்...?
இணைய குற்றங்கள் (Cyber Crimes):1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள்.
2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.
3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.
4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.
6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]
7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.
பாதுகாப்பு வழிகள்:
1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.
2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.
3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.
4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.
5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.
6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.
7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.
8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.
9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.
10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.
13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.
சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:
1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு
2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்
3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].
4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள்
5. கடன் அட்டை எண் திருட்டு
6. வலைத்தள ஹேக்கிங்
தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:
சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol@nic.in
சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber@nic.in
ஞாயிறு, 1 மே, 2011
கேட்குறவன் கேனபையாள இருந்தா...............கிட்னியிலே பெட்ரோல் வருமாம்.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் வாலிபர் ஒருவர் வயிற்றில் பேண்டேஜுடன், அங்குள்ள டாக்ஸி ஓட்டுனர்களிடம் கண்ணீர் மல்க உதவி கேட்டார். ஓட்டுனர்கள் விசாரித்த போது, அந்த வாலிபர் கூறியதாவது:
வியாழன், 28 ஏப்ரல், 2011
எங்கே செல்லும் இந்த பாதை????????????
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
சாய்பாபா மறைவு-மனித நேய மக்கள் கட்சி அனுதாபம்
திங்கள், 4 ஏப்ரல், 2011
NO COMMENTS - சச்சின் டெண்டுல்கர்
கோடி கோடியாக கொடுத்தாலும் மதுபான விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்று சொன்ன சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலககோப்பை வெற்றிக்கொண்டாட்டத்தில் ஷாம்பெயின் பாட்டிலை குலுக்கிக்கொண்டு பீய்ச்சி அடித்ததும், கோடிக்கணக்கானோர் பார்த்துகொண்டிருக்கும்போது குடித்துகொண்டிருந்ததும் கண்கொள்ளாகாட்சி..ஹ்ம்ம்ம்
ஞாயிறு, 3 ஏப்ரல், 2011
தினமலரின் வேசித்தனம்
தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் சீரழிப்பதற்காகவே “தினமலர்” (எ) “தினமலம்” என்ற நாளேடு தமிழ்நாட்டில் வெளிவருகிறது. இந்த கருமாதி பத்திரிக்கையில் இன்று (01.04.2011) “வைகோ செயலலிதாவை சந்தித்தார்” என்று கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டு “தேர்தல் களம் 2011” சிறப்பிதழில் அது தொடர்பாக விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது.
இச்செய்தியை உண்மையென நம்பி மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் இதைப் பற்றியே பேசிக்கொண்டனர். வைகோவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் பொதுமக்கள் மத்தியில் எழுந்தன. ம.தி.மு.க.-வினரும் நடுநிலையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், இதுதொடர்பாக வேறு எந்தவொரு நாளேட்டிலும் செய்தி வரவில்லை. கடைசியில் இன்று முட்டாள்தினமாம் அதற்காக மக்களை ஏமாற்றவே இப்படி ஒரு செய்தி வெளியிட்டார்களாம்.
மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் நேரத்தில் இப்படி செய்தியை வெளியிட்ட தினமலரை சனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிக்க வேண்டும்.
இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியலில் எமது இயக்கத்தை பற்றியும், என்னைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் ஏடுகளில், ஊடகங்களில் வந்தாலும் அவற்றை ஜனநாயக பண்போடு தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருக்கிறோம். எவ்வளவோ கடுமையாக நாம் காயப்படுத்தப்பட்ட நேரங்களிலும், ஆத்திரத்துக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்தது இல்லை. நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உள்ளது.
வேடிக்கையாக பொய்களை சொல்லி, பிறரை முட்டாளாக்கும் வேலை ஏப்ரல் முதல்நாள் நடைபெறும் என்றும், மேற்கு நாடுகளில் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஒரு வழக்கம் இருக்கிறது. அனல்வீசும் தேர்தல் களத்தில் தமிழகம் இருக்கின்ற நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க.வை பற்றி, இப்படி ஒரு செய்தி வெளியிட்டது நியாயமான கோபத்தையும், வேதனையையும் தோழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
எத்தகைய விமர்சனங்களை எவர் நம்மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்தபின்னர் கழகம்தான் போட்டி இடவில்லையே, நாம் சுயேச்சையாக போட்டியிட்டால் என்ன என்று எண்ணி, ஒரு தொகுதியில் கூட கழகத் தோழர்கள் சுயேச்சையாக கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வேறு பல கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கும் சூழலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கட்டுப்பாடு இமயம் நிகர்த்தது என்று நாட்டு மக்களை சிந்திக்க வைத்து இருக்கிறது.
கழகத்துக்கு பெருமை தேடித்தந்த தோழர்களுக்கு, இயக்கம் காலமெல்லாம் கடமைப்பட்டு இருக்கின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்! எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலருக்கு ஒரு ஆலோசனை: நீங்கள் பரபரப்பாக செய்தி வெளியிடவேண்டும் என்று நினைத்தால்...
“தினமலர் அலுவலகத்தில் இடி விழுந்தது!
தினமலர் அலுவலகங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது!
தினமலர் குடும்பத்துப் பெண்கள் அனைவரும் ஒரே நாளில் டிரைவரோடும், வாட்ச்மேனோடும் ஓடிவிட்டனர்!
தினமலர் அலுவலகம் இன்று ஒருநாள் மட்டும் விபச்சாரத்திற்கு இலவசம்!”
என செய்திகளை வெளியிட்டால் தமிழ்நாடே பரபரப்படையும், இந்நிகழ்வுகள் அனைத்தும் உண்மையாவே இருந்துவிட்டால் தமிழர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைவார்கள்!..
செவ்வாய், 8 மார்ச், 2011
காமிராக்கள்! பெண்கள் கவனத்திற்கு!
கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.









