OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 29 மார்ச், 2012

உட்கார்ந்து யோசிச்சது


இந்த பதிவு சும்மா ஒரு தமாசுக்குதான், இதில் கருப்பு எழுத்தில் இருப்பதெல்லாம் முன்னர் நானே போட்ட பதிவு, அதற்க்கு சற்று எதிர்மறையாக யோசிச்சதுதான் இந்த சிகப்பு கலர் எழுத்துக்கள்...................மற்ற படி யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல 




1.    அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக்கிடைக்கிறது.
a.     அரிசிய 44 ரூபாய் குடுத்து வாங்கினால் வெறும் 44 ரூபாய் மட்டும்தான், ஆனா பிரியா சிம் கார்ட் மட்டும்தான், டாக் டைம் நீதான் காசுகுடுத்து பண்ணனும், முட்டாள் மாதிரி பேசுறே!!!!!!!!!!!!
2.     பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
a.     பொது விநியோகதில் 1 ரூபாய் குடுத்து அரிசிவாங்கினால ஒரு ஆறுமுறை கழுவினால் சுத்தமாகிடும், ஆனா பொதுக்கழிப்பறை அப்படியா (கொய்யாலே நாத்தாம் குடலை  புடுங்குது சொல்லரோமே, அதை எல்லாம் சுத்தம் செய்யதான்)
3.     வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.
a.     வாகனத்தை விட இப்ப படிப்பிற்க்கு ஆகும் செலவுதான் அதிகம்டா வெண்ணை!!
4.    பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது    பாதி நேரத்தில்கூட ஆம்புலன்சும், 
தீயணைப்பு  வாகனங்களும் வந்து சேர்வதில்லை!.
a.    பிஸ்ஸாவை அவன் பைக்லே எடுத்துக்கிட்டு சந்து போந்து எல்லாம் பூந்து வருவான், ஏண்டா மூதேவி ஆம்புஓன்சையும், தீயணைப்பு வண்டியையும் சந்துல கொண்டு வந்தால் எல்லோருக்கும் சங்கூத வேண்டியதுதான்.
5.       ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்குவாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
6.       நாம் அணியும் உள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும்குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.
b.    சரி காய்கறியை குளிரூட்டப்பட்ட கடையில் வைக்கிறோம்ன்னு வை, ஒரு கிலோ தக்காளி 1000 ரூபாய் விற்க்கும், வாங்கி தின்பியா. இப்பவெல்லாம் வெளிநாடுகளில் மட்டும் என்று இல்லை சென்னையிலேயே காய்கறிகளில் சூபர் மார்க்கெட்டில் குளிரூட்டப்பட்ட இடத்தில்தான் இருக்கு, பயபுல்லை உழவர் சந்தையை பார்துட்டு பேசுரான்னு நினைக்கிறேன்.
7.       நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.
c.     உன்னை யாருயா அதை வாங்கி குடிக்க சொன்னது, நீ கடையிலே லெமென் வாங்கி நீயே ஜூஸ் பிழிந்து குடிக்க வேண்டியதுதானே, உன் சோம்பேறிதானதுக்கு அவிங்களா காரணம்.
8.       மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு,சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்றுகல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
d.    இந்த ரெண்டுலேயும் வித்தியாசம் கிடையாது, இந்த இரந்துல எதை அரசு நடத்தினாலும் அதில் முக்கிய பங்கு வகிப்பது பணம்தான்...........படிப்பெல்லாம் இப்ப ஒரு மாட்டாரே இல்லை

புதன், 28 மார்ச், 2012

இன்வேர்டார் ஒரு சிறந்த தேர்வு !!!!!!!!!!!!!!!!


கண்டிப்பாக தபோதைய தமிழக மின்சார தட்டுபாட்டிர்க்கான ஒரே வழி!!!!!!!!!!!!!!!




மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை  விற்கும் நிறுவனங்களும்,வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது.
இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து என்பதை பார்போம்.
 
''இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 250வாட்ஸில்ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.
 
இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும்,சிறுதொழில் செய்பவர்களுக்கும்  அதிகம் பயன்படும். இன்றையநிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.  
 
பொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத் திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர்,பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்'' என்றவர், இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.
 
கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
 
தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும்.  

மூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.

இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம்.  

நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.  

இன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில்,சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத் தேவையான அளவுமின்சாரத்தை முழுமையாகத்  தரும். இதனால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம்வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.
 
பராமரிப்பது எப்படி?
 
இப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம். அந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது.  மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும்மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தைபயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.
 
பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகைஇருக்கிறது. இதில்  டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்'' என்றார்.
 
இன்வெர்ட்டர் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இனி இதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்!