குச்சி மிட்டாயும், குருவிரோட்டியும் போல ஆகிவிட்டது இந்த டாக்டர்
பட்டம் என்பது. கடந்த சில வருடங்களாக பார்த்தால் யார் யாருக்கோ குடுக்கிறார்கள். கேட்டால்
அவர் அது செய்தார் இது செய்தார் என்று கூறுகின்றனர்.
இதுவே கொஞ்சம் பின்னோக்கி பயணித்தால், இந்த படமானது, ஏதாவது
ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும், ஏதாவது ஒரு தலைப்பை
எடுத்து அதில் சிறந்த முறையில் ஏதாவது புதுமைகளை செய்பவர்களுக்கும்தான் குடுப்பார்கள்.
ஆனால் இன்றோ இது ஒரு தொழிலாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. சரி இந்த டாக்டர் படங்கள் ஏன்? எதற்க்கு? இந்த பல்கலைகழகங்கள்
குடுக்கின்றன. வேற ஒன்றும் காரணமில்லை நம்ம நகைசுவை நடிகர் செந்தில் அவர்கள் கரக்காட்டக்காரன்
படத்தில் சொல்லுகின்ற ஒரு வாக்கியதான் “எல்லாமே ஒரு விளம்பரம்தான்”.

