OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 11 பிப்ரவரி, 2013

உட்கார்ந்து யோசிச்சது


என்ன நடக்கிறது பண்ணையில்:-
இது ஒரு பண்ணை பற்றிய கற்பனை கதை. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. இந்த கதாபாத்திரங்கள் யாரையாவது நியாபகம் படுத்தினால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பில்லை.


கதைக்களம்:- பண்ணை
கதாநாயகர்கள்: சிங்கம் (பண்ணை நிர்வாகி), குள்ள நரி, ஒட்டகம் (தலைவர்), புலி, சிறுத்தை மேலும் சில விலங்குகள் (பெயர்கள்) கதையில் சொல்லப்படும். இது முழுக்க முழுக்க நகைசுவை மட்டுமே.
முதலில் இப்ப உள்ள டீசல் விலை உயர்வை கண்டித்து பண்ணையில் உள்ளவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று பார்ப்போம்:-
சிங்கம்:- இது குறித்து நான் மௌனமாய் இருப்பதற்குக் காரணம்..என் மௌனம் ஆயிரம் பதிலுக்கு சமம் என்பதால் தான்.

ஒட்டகம்:- மக்கள் பராட்டா விலை உயர்ந்தால் மௌனமாய் உள்ளனர். வாடா விலை உயர்ந்தால் மௌனமாய் ஏற்றுக் கொள்கின்றனர். டீசல் உயர்ந்தால் ஏன் கத்துகிறார்கள்? என்றே புரியவில்லை.

சிறுத்தை:- நாம இருக்க வேண்டிய காட்டை விட்டு இங்கே இந்த பண்ணையில் வந்ததால்தான் இந்த பிரச்சனை எல்லாம் நாம பேசவேண்டியுள்ளது.
குள்ள நரி:- இந்த விலை உயர்வுக்கு ஒற்றுமையை குலைத்த, விலங்குகள் காட்டில்தான் இருக்கும் என்று கூறும் இயக்கத்தை சேர்ந்த மிருகங்களே காரணம். அடுத்தத் தேர்தலில் அவர்கள் நின்றாள் நான் நிர்க்க மாட்டேன்.
புலி:- இந்த விலை உயர்வால் பண்ணையில் இடைதேர்தல் வர வாய்ப்பிருக்கு.

யானை:- இந்த உயர்வுக்கு காரணம் குள்ள நரியும், புலியும் தான். அதற்கான ஆதாரங்களைத் திரட்டிவருகிறேன்.கூடிய விரைவில் இவர்கள் மீது வழக்குத் தொடர்வேன்.

மற்ற விலங்குகள் (கழுதை, எருமை, ஓனாய், காட்டெருமை):- பண்ணையில் இருந்து இந்த உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தபடும்.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

அமீரக கோர விபத்து!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இன்று காலை அலுவலகம் வந்தவுடன் கண்ணில் பட்ட செய்தி அமீரகத்தில் உள்ள அல்அயின் இல் நடந்த ஒரு கோர விபத்தில் 24 தொழிலாளர்கள் பலி, இதில் இறந்த அத்தனை பெரும் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், எனக்கு தெரிந்த வரை இதில் அதிகமாக பங்களாதேசிகளும், இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் அதிகமாக இருப்பார்கள்.





இறந்தவர்களில் இதுவரை 16 நபர்கள் பங்களாதேஷ் எனவும், ஒருவர் இந்தியர் எனவும் தெரியவந்துள்ளன், மீதமுள்ள 7 நபரால் யார் என்று இதுவரை தெரியவில்லை, 75 டன் கொண்ட மணல் லாரி ஒன்று தொழிலாளர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்றில் மோதி அதன் மீது கவிழ்ததால் இந்த விபத்து நெர்துள்ளது, இது வரை யார் மீது தவறு என்று தெரியவில்லை, ஆனால் இரண்டு வாகன ஓட்டிகளும் உயிர்பிழைதுள்ளனர், ஒருவர் இரண்டு கால்களும் இழந்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பத்தார்கள் மனக்கஷ்ட்டதை போக்க இறைவனிடம் பிராத்திப்போம்.



ஒரு கும்கி செய்தி:-
அமீரகத்தில் உள்ள எடிசலாத் (etisalat) தொலைதொடர்பு நிறுவனம் குறைவான சம்பளம் வாங்கும் வெளிநாட்டவர்களை கருதி அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உள்ள வாய்ப் (voip) காலிங் கார்டை அறிமுகம் செய்துள்ளது.