OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 9 நவம்பர், 2011

இது சும்மா ஒரு தமாஸ்தாங்க.


இது சும்மா ஒரு தமாஸ்தாங்க.......இருந்தாலும் கொஞ்ச சிந்திக்க கூடியதுதான்.............


நமக்கு வருடத்திருக்கு மொத்தம் 365 நாட்கள் இதுலதாங்க பிரச்சனையே அது என்னென்னு நீங்களே கீழே படியுங்கள்................

  1. வருசத்துல மொத்தம் 52 நாயிற்றுகிழமைங்க, அப்போ மீதமிள்ளது வெறும் 313 நாட்கள்தான்.
  2. அப்புறம் இதுல கொடைவிடுமுரைன்னு பார்த்தா எப்படியும் ஒரு 50 நாள் வந்துடும் இப்போ மீதமிருக்கிறது 263 நாட்கள்தான்.
  3. இதுல ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூகம்ம்னு வைத்தால் வருடத்திற்கு 122  நாள் ஆகுது, நமக்கு இருப்பது மீதி 141  நாள்தான் 
  4. சரி இந்த விளையாட்டுன்னு பார்த்தா தினமும் ஒரு ஒரு மணிநேரம் அப்போ வருடத்திற்கு 15 நாள் . மீதி 126 நாட்கள்தான் .
  5. இதுல தினமும் இரண்டு மணி நேரம் சாப்பாட்டுக்கு ஒதுக்கினால் வருடத்திற்கு 30 நாட்கள் அதையும்  கழித்தால் வெறும் 96 நாட்கள் தான்.
  6. இதுல நாம ஒருநாளைக்கு பேசுறது மட்டும் ஒரு மணி நேரம் என்றாலும் அதிலேயும் ஒரு 15 நாட்கள் போய்டும் மீதம் இருப்பது 81 நாட்கள்.
  7. இதுல பள்ளியில் பரீட்சை நாட்கள் என்று பார்த்தல் குறைந்தது ஒரு 35 நாட்கள் வந்துடும், மியயுறது 46 நாட்கள்தான்.
  8. இதுல கால் பரீட்சை, அரை பரீட்சை மற்றும் பண்டிகை தேதி விடுமுறைன்னு பார்த்தல் அதுலே எப்படியும் ஒரு 40 நாட்கள் போய்டும் மீதி வெறும் 6 நாட்கள்தான்.
  9. இந்த ஆறு நாட்களில் மருத்துவ விடுமுறைன்னு ஒரு மூன்று நாளும், சினிமா மற்றும் கேளிக்கைகள்ன்னு இரண்டு நாளும் பொய் விட்டால் கடைசியாக மிஞ்சுவது வெறும் ஒரே நாள்தான்................
  10. அந்த ஒரு நாளும் உங்களின் பிறந்த நாலா போய்டும்...............................
இப்ப சொல்லுங்க எப்படிதாங்க படிக்கிறது??????????????? மாணவன் எப்படிதாங்க வெற்றி அடைவது.................................ரொம்ப கஷ்டம்........................

ஆனால் இங்கே ஒட்டு போடுவது ரொம்ப ஈசி 

வியாழன், 3 நவம்பர், 2011

பெருநாள் வாழ்த்துக்கள்....

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பார்ந்த வாசகர்களே, நாளை முதல் எனக்கு விடுப்பு தொடங்க இருப்பதை 
முன்னிட்டு என்னுடைய பெருநாள் வாழ்த்தை............இன்றே கூறிகொள்கிறேன்.




உண்மையைச்சொல்லப்போனால் அனைவரின் மனதிலும் ஒரே விதமான
மகிழ்ச்சி குடியேறியிருக்கும் போது நேரம் போவது தெரியாதுதானே.

சந்தோசத்தில் மிகப்பெரிய சந்தோசமே மற்றவர்களை சந்தோசப்படுத்திப் 

பார்ப்பதுதான் என்று சொல்வது போல். இந்த நாளில் நம்மால் இயன்ற அளவு, 
நம்மை சுற்றி ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து, அவர்களும் பெருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு உதவி செய்வோமாக.


இதே மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து

 கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்.

இந்த நன்னாளில் நாமும், நமது குடும்பமும் மற்றும் நம்மை சுற்றியுள்ள 

அனைவரும் அனைத்து வளங்களையும் பெறவும், நமக்கு வரும் பிரச்சனைகளை லேசாக்கி, தீர்த்து வைக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.