OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 13 அக்டோபர், 2011

நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்?



ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி ஒரு மனிதர் எவ்வாறு உணர்கிறார், சிந்திக்கிறார், அதுதொடர்பாக அவரது நடத்தைகள் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே, ஒரு தனிமனிதனின் குணநலன் தீர்மானிக்கப்படுகிறது. இந்த உலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கையில், அவர்களில் ஏன் வெகு சிலர் மட்டுமே வெற்றியடைகிறார்கள்? என்ற கேள்விக்கு மிக எளிதான் விடையை அளிக்கலாம். வெற்றியடைபவர் நேர்மறை சிந்தனையையும், தோல்வியடைபவர் எதிர்மறை சிந்தனையையும் கொண்டுள்ளனர்.
 
உதாரணமாக, தாகம் கொண்ட ஒரு மனிதர், ஒரு வீட்டில் நுழைகையில் அவருக்கு பாதியளவு தண்ணீர் நிரம்பிய ஒரு தம்ளர் தரப்படுகிறது. அதைப் பார்த்ததும் அவர் திருப்தியடைந்தால், அவர் நேர்மறை எண்ணம் கொண்டவர் என்று அர்த்தம். மாறாக, அதிருப்தியடைந்தால், எதிர்மறை எண்ணம் கொண்டவர் என்று அர்த்தம். ஏனெனில், திருப்தியடைபவர், பாதியளவு தண்ணீர் நிரம்பியுள்ளதைப் பார்க்கிறார். எதிர்மறை எண்ணம் உள்ளவரோ, அந்த தம்ளர் பாதியளவு காலியாக இருப்பதைப் பார்க்கிறார். எனவே எதிர்மறை எண்ணம் உள்ளவரைவிட, நேர்மறை எண்ணம் உள்ளவர் சிறிய விஷயங்களில் அதிக திருப்தியடைகிறார்.
 
மேலும், சுய நம்பிக்கை, வெற்றிக்கான தெளிவான திட்டமிடுதல் போன்ற பண்புகளும் அவருக்கு இருப்பதால் அவரின் வெற்றி மிகவும் எளிதாகிறது.
"ஒருவர் தோல்வியடைந்தால் அவருக்கு ஏமாற்றம் கிடைக்கத்தான் செய்யும். அதற்கு பயந்து ஒருவர் முயற்சியே செய்யாமல் இருந்தால் அவர் பிணத்திற்கு சமம்"
என்று ஒரு பொன்மொழி உண்டு.
 
நாம் இந்த வகையில்தான் சிந்திக்கப் பழக வேண்டும். நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்களோ, அவ்வாறே உங்களின் நடத்தையும் இருக்கிறது. நேர்மறை எண்ணம் இருந்தால், சிறுசிறு தடைகள் உங்களின் லட்சியத்தை அடைவதை தடைசெய்ய முடியாது.
 
"நீ எங்கே இருக்கிறாய், உன்னிடம் என்ன இருக்கிறது என்பதை வைத்து உன்னால் முடிந்ததை செய்"
 
"உனக்கு ஒன்று பிடிக்கவில்லை எனில், அதை மாற்றிவிடு. ஒருவேளை அதை மாற்ற முடியவில்லை என்றால், உன்னை நீ மாற்றிக்கொள். அதற்காக குறை கூறிக்கொண்டு இருக்காதே"
 
"ஒரு உண்மை அறிவாளி என்பவர் 1% மட்டுமே உந்துதலைக் கொண்டிருப்பார். ஆனால் 99% கடும் முயற்சியைக் கொண்டிருப்பார்"
போன்றவை பிரபலமாக பொன்மொழிகள்.
 
* நமது லட்சியத்தை அடைய, நமது உடலும், மனமும் ஒருங்கிணைந்து இயங்குகிறது. நமது பணி மற்றும் சமூக சூழல் போன்றவை நமது எண்ணம் மற்றும் செயல்பாட்டில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
 
* ஒரு நேர்மறை சிந்தனையாளர், தடைக் கற்களைப் படிக்கற்களாகவே நினைக்கிறார். ஒரு தோல்வியைப் பற்றி சிந்திக்கும்போது, அது எந்தளவு நம்மை காயப்படுத்தியது என்பதைப் பற்றி சிந்திக்காமல், அது எதனால் ஏற்பட்டது என்பதைப் பற்றி சிந்தித்து, அது மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
* நேர்மறை எண்ணம் கொண்டவர்கள், இயற்கையாகவே அந்த எண்ணத்துடன் பிறக்கிறார்களா? அல்லது காலப்போக்கில் அந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார்களா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. பொதுவாக, ஒரு மனிதனின் குணநலன் என்பது, அவரது வாழ்க்கையின் உருபெறும் காலகட்டத்தில் வடிவமைக்கப்படுகிறது. ஒரு மனிதனின் உருவாக்க காலகட்டமானது, குடும்பம், பள்ளி, சமூகம், மீடியா, தொலைக்காட்சி, அரசியல், மதம் மற்றும் கலாச்சாரப் பிண்ணனி போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது மற்றும் அந்த அனைத்து அம்சங்களும் ஒரு மனிதனின் மனநிலை உருவாக்கத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
 
* எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களுடன் வாழும்போதும், அத்தகைய கலாச்சாரத்தைப் பின்பற்றும்போதும் ஒருவரால் நேர்மறையாக சிந்திப்பது கடினம். எனவே, அத்தகைய ஒரு எதிர்மறை அம்சத்திலிருந்து விடுபடுவதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
 
"ஒரு இயந்திரம் 50 சராசரி மனிதர்களின் வேலைகளை செய்யும். ஆனால் எந்த ஒரு இயந்திரமும், ஒரு குறிக்கோளுடைய அசாதரண மனிதனின் வேலையை செய்துவிட முடியாது"
இதுவும் ஒரு புகழ்பெற்ற பொன்மொழிதான்.
 
ஒரு நேர்மறை எண்ணம் கொண்ட மனிதரை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் அவரது குணாதிசயங்கள் எவ்வாறு இருக்கும்? இது மிகவும் எளிது.
 
* நேர்மறை மனிதர்கள் பணிவானவர்களாகவும், அக்கறையுள்ளவர்களாகவும், நம்பிக்கை மற்றும் பொறுமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும், முயற்சிசெய்ய எப்போதுமே ஆவலாக இருப்பார்கள். அந்த மனிதர்களின் எதிர்பார்ப்பு மிகவும் பெரியளவில் இருக்கும். அத்தகைய மனிதர்கள் எல்லாவித சூழல்களிலும் வரவேற்கப்படுவார்கள்.
 
* அத்தகைய மனிதர் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் சூழலையே மாற்றி விடுவார். நடந்துவிட்ட துன்பங்களை இறந்த காலமாக கருதி, சிறப்பான எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.
 
* ஒரு மனிதர் நேர்மறை எண்ணமுள்ளவராக மாறுவதில் ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. இதன்மூலம், உற்பத்தி அதிகரிக்கும், குழுமுயற்சி ஊக்குவிக்கப்படும், பணி செய்யும் சூழல் மேம்படும், பணியின் தரம் அதிகரிக்கப்படும் மற்றும் மனித உறவுகள் மேம்படும், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும், நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் அத்தகைய எண்ணம் உள்ள மனிதரின் தோற்றத்திலும் நல்ல மாறுதல் ஏற்பட்டு, பலரை கவரும் விதத்தில் இருக்கும்.
 
* நேர்மறை சிந்தனையால் மேற்கண்ட ஏராளமான நன்மைகள் ஏற்படும் அதேவேளையில், எதிர்மறை எண்ணத்தால், பகைமை சிந்தனை, ஆரோக்கிய குறைபாடு, கசப்புணர்வு மற்றும் கடும்கோபம் போன்றவை ஏற்படும். ஒரு எதிர்மறை சிந்தனையாளர் தன்னை கெடுத்துக்கொள்வது மட்டுமின்றி, தான் சார்ந்த ஒட்டுமொத்த சூழலையும் கெடுக்கிறார். அவரது வாழ்க்கையில், அனைத்துவித உறவுகளுமே நிலையற்றதாகவே இருக்கும்.
 
* எதிர்மறை எண்ணங்கள் இவ்வளவு ஆபத்தானவை என்று தெரிந்தபோதும், பலர் ஏன் தங்களை மாற்றிக்கொள்வதில்லை. அதற்கு காரணம், அவர்கள் தங்களின் எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர விரும்புவதில்லை மற்றும் அந்த மாறாத நிலையின் ஒரு பகுதியாகவே அவர்கள் இருக்கிறார்கள். மாற்றமானது, நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. எனவே, இத்தகைய மனிதர்கள் முதலில் தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.
 
* ஒருவர் மற்றவரின் மனதை வசியம் செய்து மாற்றிவிட முடியாது. ஒவ்வொருவருமே, மனதளவில், மாற்றத்திற்கான கதவை திறக்க முடியாதவாறு வாயிற்காப்போனாக நிற்கிறோம். எனவே ஒருவர் மனதை விவாதம் செய்தோ அல்லது உணர்ச்சி வகையிலோ மாற்றிவிட முடியாது. அந்த முயற்சியானது ஒவ்வொருவரின் உள்மனதிலிருந்து தொடங்க வேண்டும்.

நன்றி : தினமலர் .
 

செவ்வாய், 4 அக்டோபர், 2011

எங்கே செல்லும் இந்தப் பாதை???

'அல்லாஹ் ஒருவன்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.112:1,2,3,4


அம்மனா ? அவ்லியாவா ? 

அம்மன் கோயில் கட்டி வழிப்படும் முஸ்லீம் தம்பதிகள் என்ற தலைப்பிட்டு சமீபத்தில் சில ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி இருந்தன.
சிதம்பரம் அருகில் கிள்ளை என்ற கிராமத்தில் தான் மேல்படி சம்பவம் நடந்துள்ளது அம்மனுக்கு கோயில் கட்டி அதற்கு ''' மஹா மாரியம்மன் ஆலயம்'' என்றுப் பெயரிட்டு தீப ஆராதனை ஏற்றி வேத மந்திரங்களை புர்கா அணிந்த பஷீரா என்ற முஸ்லிம் பெண்ணே ஓதி காலை, மாலை பூஜை நடத்தி வருவதாகவும் அதற்கு அவரது கணவர் ஜின்னா முழு ஆதரவு அளித்து வருவதாகவும் அதை ஏராளமான பக்த, பக்தையர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்கின்றனர் என்று தொடருகிறது அந்த செய்தி.

உருவ வழிப்பாட்டை ஒழித்துக்கட்டிய இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்து வளர்ந்த நீங்கள் அம்மனுக்கு கோயில் கட்டி வழிப்பாடு செய்வதற்கு எது காரணமாக இருந்தது என்று நிருபர் கேட்க? பத்து வருடங்களுக்கு முன் மாரியாத்தா எனது கணவில் தோன்றி தனக்கு கோயில் கட்டி வழிபடச் சொன்னதாக மிகவும் பக்தி பரவசத்துடன் பதில் கூறினாராம் பஷீரா...
பஷீராவின் கணவில் அம்மன் தோன்றியது உண்மை என்றால் பஷீரா வாழும் காலத்தில் அம்மனை பலத் தடவை நேரில் சந்தித்துப் பேசி இருக்க வேண்டும். அம்மனை இவர் நேரில் பார்த்ததில்லை அம்மன் இன்ன வடிவில்தான் இருப்பார் என்றும் இவருக்குத் தெரியாது இவரல்லாமல் அம்மனுக்கு கோவில் கட்டி அன்றிலிருந்து இன்றுவரை வழிப்படும் ஹிந்துக்களிலும் எவரும் அம்மனை நேரில் பார்த்தவர்கள் கிடையாது. 

கிள்ளையில் அல்லது பக்கத்து ஊரில் உள்ள அம்மன் சிலையை பஷீரா அடிக்கடிப் பார்த்திருக்கலாம். அம்மனின் கற்சிலை பஷீராவின் கணவில் காட்சி அளித்திருக்கலாம். பன்றிகள் அதிகம் மேயும் வழியாக போய் வரும் நிலை முஸ்லீம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவரது கணவில் பன்றிகள் காட்சி அளிக்கவேச் செய்யும் பன்றிகளை கணவில் கண்டதற்காக அதை அவர் ஹலாலாக்கிக் கொள்ள முடியுமா ? 

இணை வைப்பாளர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் இணைவைப்பு பிரச்சாரம் சமீப காலமாக சூடு பிடித்திருப்பதால் அது பஷீராவின் மனதில் மாற்றத்தை எற்படுத்தி இருக்கலாம். பஷீரா ஜின்னா தம்பதிகள் வசிக்கும் பகுதியில் ஹிந்துக்கள் அதிகம் என்பதால் அங்கே தர்ஹா கட்டினால் கல்லா (உண்டியல்) நிறையாது என்றுக் கருதி கோயிலைக்கட்டி வசூலை முடுக்கி விட்டிருக்கலாம்.

காரணம் கணவில் தோன்றி ஆலயம் அமைக்கக் கூறியதாக கரடி விடுவதெல்லாம் மற்ற மதத்தவர்களை விட நம்மவர்களிடம் அதிகம் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. தமிழகத்தின் தர்ஹாக்களின் வரலாறுகளில் 100 சதவிகிதம் பஷீரா விடும் கணவு புருடாவாகவே இருக்கும்.

வள்ளலாரா ? வல்லோன் ரஹ்மானா ?

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த அமானுல்லாஹ் என்பவர் வயிற்றுப் பிழைப்புக்காக சென்னைக்கு வேலை தேடிச் சென்றுள்ளார் ஃபோட்டோகிரப்பராக வேலையும் கிடைத்துள்ளது அதனால் பிறரிடம் யாசிக்க வேண்டியத் தேவை இல்லாத அளவுக்கு வயிறு நிறைந்துள்ளது இதற்கே இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளார் அமானுல்லாஹ்.


இதுவும் கிடைக்காமல் கூலித் தொழில் பார்த்தும் யாசித்தும் பிழைக்கக் கூடியவர்கள் எத்தனையோப் பேர் இதையாவது இறைவன் கொடுத்தானே என்று நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதைக் கண்டிருக்கிறோம்.

ஃபோட்டோகிராப்பராக வேலை கிடைத்ததில் அமானுல்லாஹ்வுக்கு வயிறு மட்டும் நிறைந்து வங்கிக் கணக்கு நிறையாமல் இருந்தது வருத்தத்தை அளித்திருக்கிறது. வங்கிக் கணக்கை நிறைக்கும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அமானுல்லாஹ்விடம் திடீரென சந்தித்த ஏழுமலை என்கிற  சகோதரர் வள்ளலார் ராமலிங்க அடிகளாரை தரிசித்தால் காசு கூரையைப் பிய்த்துக்கொண்டுக் கொட்டும் என்றுக் கூற இது தான் சிறந்த வழி என்று அமானுல்லாஹ்வுக்கு பொறி தட்ட வள்ளலாருக்கு கோயில் கட்டி உண்டியலை நிறைத்து அதன் மூலம் வங்கிக் கணக்கை நிறைப்பதற்கும் ஒரு சாய்பாபாவைப் போலவோ, நித்யாணந்தாப் போலவோ, பாபா ராம்தேவைப் போலவோ ஆவதற்கும் ஆசைப்பட்டுவிட்டார் அமானுல்லாஹ்.

வள்ளலாரின் பக்தர்கள் நிறைந்துள்ள வடலூருக்கு ஏழுமலையுடன் சென்று வள்ளலாரின் சரித்திரத்தை தெரிந்து கொண்டுத் திரும்பியதும் தாமதமின்றி வள்ளலாருக்கு கோயில் கட்டி தினந்தோறும் பூஜை செய்து அன்னதானமும் வழங்கி வியாழன் தோறும் சிறப்பு சொற்பொழிவு நடத்த ஆரம்பித்து விட்டார் அமானுல்லாஹ்.  

வள்ளலாரை தரிசித்து விட்டு வந்தப் பின்னர் தான் சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்ததாக நிருபர்களிடம் புருடா விட்டுள்ளார் அமானுல்லாஹ்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி) நூல்கள்: புகாரீ 844, முஸ்லிம் 933

உலக வாழ்வு அழியக் கூடியதே மறுமை வாழ்வே நிரந்தரமானது என்ற உயர்ந்த கோட்பாட்டை உடைய இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த இவர்கள் நிரந்தரமில்லாத உலக சுகபோக வாழ்விற்காக உயர்ந்த கொள்கையை விட்டுக் கொடுத்து வழி கெடுவதற்கு எது காரணம் ?

கடவுள் பெயரைக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி ஏராளமான செல்வங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் சாமியார்கள் மட்டும் காரணமல்ல. 

மாறாக தர்ஹா கட்டி அதில் மன்னறை அமைத்து> ஊதுவத்தி சாம்ப்ரானிக் கொளுத்தி இல்லாத அவ்லியா பெயரில் ஃபாத்திஹா ஓதி பக்தர்களுக்கு மயில் இறகால் மண்டையில் தடவி விட்டு உண்டியலுக்கு பாதி தனக்குப் பாதியை ஒதுக்கி வயிறு வளர்க்கும் முஸ்லீம் பெயர் தாங்கிகளும் அவற்றிற்கு வாக்காலத்து வாங்கும் ஜமாலியாக்களும் முக்கிய காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. 

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் வெடித்து சில தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது பல தர்ஹாக்கள் டம்மியாக்கப்பட்டு வெளி ஊர் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையாக்கப்பட்டது. இதைக் கண்டு ஷைத்தான் சும்மா இருப்பானா? ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி வடிவில் தமிழகத்தில் கால் ஊண்டினான். 

மனிதர்கள் எழுதிய மத்ஹப் சட்டங்களை உண்மைப் படுத்தியும், ஏக இறைவனுக்கு இணைவைக்கும் தர்ஹா வழிப்பாட்டை ஆதரித்தும் ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் உளறியதை தொலைகாட்சியில் வெளியிடுவதால் அது கடவுள் பெயரைக் கூறி வயிறு வளர்க்கும் ஆசாமிகளுக்கு உற்சாகமூட்டியது. அதனால் கடவுள் பெயரைக் கூறி வயிறு வளர்க்கும் கூட்டம் முஸ்லீம்களிலும் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது.

பீஜேயை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு ஏகத்துவத்தை குழி தோண்டிப் புதைக்கும் கேடு கெட்ட செயலில் இவர்கள் இறங்கிக் கொண்டிருப்பதால் அமானுல்லாஹ், ஜின்னா - பஷீரா தம்பதிகள் போல் இன்னும் பலர் நேர்வழியை விட்டு விலகி வழிக்கேட்டில் வீழ்வதற்கு காரணமாக அமைந்தால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தங்களது மரணத்தருவாயில் கூறிய அல்லாஹ்வின் லஃனத்திற்கு இவர்கள் அஞ்சிக்கொள்ள வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாம்) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தங்களின் கறுப்புக் கம்பளி ஆடையைத் தம் முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தம் முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அவர்கள் தம் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கினார்கள்'' என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதைக்) குறித்து எச்சரித்தார்கள். என்று ஆயிஷா(ரலி) அவர்களும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்: நூல்: புகாரி 5815 5816. 

நன்றி: அதிரை பாரூக்