OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 13 ஜூன், 2011

எல்லாத்தையும் மறந்து சிரிங்க சிரிங்க சிரித்துகிட்டே இருங்க

என்னங்க தலைப்பை பார்த்துட்டு இன்னுமா சிரிக்காம இருக்கீங்க...............
அதான் தலைப்புலேயே சொல்லிட்டேனே இன்னும் சிரிக்காம என்னங்க பண்றீங்க,  அட இன்னும் என்னங்க யோசனை, சும்மா சத்தம் போட்டு சிரிங்க.............சீக்கிரம் ஆரம்பிங்க..............ஐயோ இன்னும் எனக்கு கேட்கவே இல்லை இன்னும் சத்தமா சிரிங்க..................இதுகெல்லாம் வெட்க பட்ட எப்புடி.............இன்னும்.................இன்னும் கொஞ்சம் வேகமா................அட என்னங்க உங்க பக்கத்துல அவரு எப்படி சிரிக்குறார் பாருங்க ..................அந்த மாதிரிதான் ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்......................சரி சரி ரொம்ப சிரிக்காதீங்க அப்புறம் உங்க வேலைக்கு ஆபத்தா போய்டும்........................அட என்னங்க நீங்க சொல்லிகிட்டே இருக்கேன் சிருசுகிட்டே இருக்கீங்க.....................என்னது வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகுமா......................அதுக்குதான் இந்த பதிவே....................சிரித்து வாழுங்கள்..............பிறர் சிரிக்க வாழ வேண்டாம்..............

பிடித்திருந்தால் ஒட்டு போடா மறக்க வேண்டாம்................நன்றி.

ஞாயிறு, 12 ஜூன், 2011

மருதநாயகம் ஒரு பார்வை!!!!!!!!!!!!!!!சற்றே நீளமான ஒரு பார்வை

வாங்க வாங்க.............
தலைப்பை பார்த்தவுடனேயே வருவீங்கன்னு தெரியும், ஆனா இது நீங்க நினைக்கிற மாதிரி நம்ம உலகநாயகன் (உலகபடங்களில் இருந்து காப்பி அடிபத்தால் இந்த பெயர்) எது எப்படியோ இது அதை பற்றிய விமர்சனம் இல்லை...........ஒரு உண்மையான வீரனுடைய உண்மை வரலாறு.................
வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது. 1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது. படத்திற்குப் பெயர் மருதநாகயம்! படமோ நிஜத்தில் நடந்த வரலாறை பின்னணியாகக் கொண்டது. திரையுலகில் வாழக்கையை தொலைக்கும் தமிழகம், இதை பரபரப்பாக விவாதித்தது.
யார் அந்த மருத நாயகம்? அவரது போராட்ட வரலாறு என்ன? இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது போல் தமிழக முஸ்லிம்களையும் உசுப்பியது. காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது. கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை! இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!


இது தெரிந்தால் நம்ம உலகநாயக ஒரு வேலை இதை படமாக எடுத்தால் அதில் என்ன அவருக்கு சாதகமா மாற்றியுள்ளார் என்பதை பற்றிய ஒரு தெளிவு கிடைக்கும்................